-சி.எம்.ஆதவன்‘‘இன்று காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?’’ என்று யாராவது கேட்டால் சட்டென நியாபகம் வராது நமக்கு. ஆனால், திருப்பூரை சேர்ந்த நான்கு வயது நிரம்பிய அக்கா, தம்பிகளான நிஷ்மிதாஸ்ரீ, நிஷ்வந்த்ஸ்ரீ இருவருக்கும் அபார நியாபக சக்தி இருக்கிறது!.ஆயக்கலைகள் 64, திருக்குறள்கள், நாட்டின் தலைநகரங்கள், பிரபல திருவிழாக்கள், 50 ஊர்களின் சிறப்புகள் என பல்வேறுதலைப்புகளில் கலந்து கட்டி அவ்வளவு நியாபகமாகச் சொல்கிறார்கள் இந்த இரட்டையர்!திருப்பூர் நாச்சம்மாள் பள்ளியில் படிக்கும் இவ்விருவரும் படிப்பிலும் செம சுட்டி! தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேசி வரும் இந்தச் சுட்டிகளின் அடுத்த இலக்கு, 50 தலைப்புகளில் பேசுவதுதானாம். அதற்குண்டான பயிற்சிகளைக் கொடுத்து வருகின்றனர் அவர்களுடைய பெற்றோரான நரேஷ் குமார் _- ஜனனி தம்பதி..இவர்களுடைய சாதனையை அங்கீகரித்துள்ள ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, இவர்களைப் பாராட்டி சான்றிதழும் அளித்துள்ளது. ‘கலாம் உலக சாதனை’ விருது, ‘இளம் சாதனையாளர்’ விருது, ‘பாரிவள்ளல்’, ‘அதியமான்’, ‘மகாத்மா காந்தி’, ‘திருவள்ளுவர்’, ‘வாசுகி’, ‘பாரதியார்’, ‘அன்னை தெரசா’ விருது என 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் இதுவரை வாங்கிக் குவித்துள்ளனர்.வைகோ, வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரிடமும் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளனர் இந்த குட்டீஸ்!இரண்டரை வயதில் பள்ளிக்கூடம் செல்வதற்கு முன்பாகவே இவர்களுக்கு இந்த திறமை வந்து விட்டதாகச் சொல்கிறார் அவர்களின் தாயார் ஜனனி..‘‘குழந்தைகள் பிறந்த சமயத்தில் மழலையர் பள்ளி நடத்தி வந்தேன். 11 மாத கைக்குழந்தையாக இருவரும் இருந்தபோதே அங்கு தூக்கிச் செல்வேன். அங்குள்ள மழலைகளுக்கு நான் சொல்லித் தருவதை நிஷ்மிதாஸ்ரீ நன்கு கவனிப்பாள். நான் செய்வதை அப்படியே திரும்பச் செய்வாள். நல்ல ஞாபக சக்தியும், பார்ப்பதையும் கேட்பதையும் உள்வாங்கிக்கொள்ளும் திறமையும் அவளுக்கு இருப்பதை அறிந்தேன். லாக்டவுன் சமயத்தில் தினமும் இரண்டு மணி நேரம் உலக விஷயங்கள், நாட்டு நடப்பு, நாட்டின் தலைநகரங்கள், ஊரின் சிறப்புகள் என பல தலைப்புகளில் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆச்சரியப்படும் விதமாக அவள், அதை அப்படியே பிக்அப் செய்து கொண்டு திரும்பவும் மனப்பாடம் செய்து சொல்லத் தொடங்கி விட்டாள்!இவளைப் பற்றி அறிந்து கொண்ட, கோவை பேரூர் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியர் திருநாவுக்கரசு ஐயா அவர்கள், நிஷ்மிதாஸ்ரீயின் திறமையை உலகறியச் செய்ய முயற்சிக்கும்படி அறிவுறுத்தினார். அதன் பின்தான் இவளை மேடைகளில் ஏற்றினோம். அது ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு’ வரை வந்துவிட்டது.முதலில் எங்களுடைய மகளுக்கு மட்டும்தான் இந்தத் திறமை இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம். அதனால், மகனுக்கு முதலில் சொல்லித்தரவில்லை. அவனுடைய அக்கா பேசுவதை பார்த்து வந்ததால் அவனுக்கு தானாகவே ஆர்வம் வந்துவிட்டது. அதற்கடுத்துதான் இருவருக்கும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம். ஆச்சரியமாக இருவருமே இதில் சாதனை நிகழ்த்தியது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று!’’ என்று சொல்லி பூரிக்கிறார் ஜனனி..பெற்றோர் இல்லாத 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், சேவை மனப்பான்மையோடு பாடம் சொல்லிக் கொடுத்து, அதற்காக சிறந்த ஆசிரியை விருது பெற்றவர் இவர். தமிழ் இலக்கியமும் ஆசிரியை பயிற்சியும் முடித்துள்ள ஜனனி, தற்போது ஆசிரியையாகவும் பணி செய்து வருகிறார். இவருடைய கணவர் நரேஷ்குமார், ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். நேரம் கிடைக்கையில், பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.இவர்கள் மட்டுமன்றி, தாத்தா, பாட்டி என குடும்பத்தினர் அனைவரும் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த குட்டீஸுக்கு கற்றுக் கொடுக்கின்றனர். ‘கின்னஸ் உலக சாதனை’ செய்வதே இவர்களின் இலக்கு. ‘நீண்ட வார்த்தைகள் கொண்ட வாக்கியத்தை’, குறித்த நேரத்திற்குள் சொல்லும் சாதனை புரியவும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.இந்த இரட்டையர் விரைவிலேயே சாதனை புரிந்திட நீங்களும் வாழ்த்துங்களேன்!.செல்போனுக்கு தடா!இன்றைய சிறார்கள் கொஞ்சம் கொஞ்சமாக ‘Smartphone addiction’ உள்ளோராக மாறி வருகின்றனர். பிள்ளைகளுக்கு சோறு ஊட்ட, அவர்களின் விளையாட்டு மற்றும் சேட்டைகளை மடைமாற்ற பெற்றோரே குழந்தைகளின் கையில் செல்போனை கொ(கெ)டுத்து விடுகின்றனர். ஆனால், இந்த இரட்டையரிடம், அவர்களுடைய பெற்றோர் செல்போன் கொடுப்பதே இல்லையாம். ‘‘மேடைப் பேச்சுக்களுக்குத் தயாராக, இதர மிக அவசியமான விஷயங்களுக்காக மட்டுமே, அதுவும் சிறிது நேரமே செல்போனை அவர்கள் கையில் கொடுக்கிறோம். தவிர, எங்கள் பிள்ளைகளுக்கு பொது வெளியில் பேசுவதற்கு கூச்சம், மேடை பயம், தயக்கங்களும் கிடையாது. இது, அவர்களுக்கு மன ரீதியான உத்வேகம், தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது!’’ என்கிறார்கள் இந்த இரட்டையரின் பெற்றோர்.