ஆழ்துளை கிணறுகளில் சிறார் கள் விழுந்து மரணிப்பதும், பாதாள சாக்கடை மேன் ஹோல்களில் அப்பாவி மக்கள் விழுந்து பலியாவதும் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சோக நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு, வேலூர் மாணவி சந்தியா, Ôசென்சார் கருவி’ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதற்காக தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து பாராட்டு களையும் பரிசுகளையும் பெற்றுள்ள அவரைச் சந்தித்து, வாழ்த்து சொல்லி பேசினோம்.உங்களுக்கு எப்படி இந்த ஆர்வம் வந்தது?‘‘ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள், மழை வெள்ளத்தின்போது திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகளில், தரைமட்ட கிணறுகளில் பெரியவர்கள் தவறி விழுந்து பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து எங்காவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசாங்கம் எவ்வளவுதான் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி இதுபோன்ற விபத்துகள் நடப்பது வாடிக்கையாவிட்டது. வேலூரில் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடையில் ஒருவர் விழுந்து உயிர்விட்ட சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணினேன்.’’எப்போது செயல் வடிவம் கொடுத்தீர்கள்?‘‘நான் வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். படிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. அப்பொழுது கொரோனா பரவி, நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்ட சமயம். அந்த விடுமுறையை பயன்படுத்தி, என்னுடைய ஆராய்ச்சிக்கு செயல் வடிவம் கொடுக்க களத்தில் இறங்கினேன். அதற்கான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஏ.தமிழ் பிரியா, பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்.ஜெயஸ்ரீ, எஸ்.ரீட்டா மேரி, ஆர்.சுகந்தி ஆகியோர் வழங்கினர்.என்னுடைய கண்டுபிடிப்பிற்கு பெரும் தொகை செலவாகவில்லை என்றாலும், எட்டாயிரம் ரூபாய் வரை ஆனது. ‘நீ உன்னுடைய ஆராய்ச்சியில் மட்டும் கவனம் செலுத்து. பணம் நாங்கள் தருகிறோம்’ என்று என்னுடைய பெற்றோரும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். மற்றவர்களும், ‘பொழுது போகாமல் இவள் ஏதோ செய்கிறாள்’ என்று நினைக்காமல், ஊக்கமும் உற்சாகமும் தந்தார்கள். இதனால்தான் என்னுடைய முயற்சியில் வெற்றியடைய முடிந்தது!’’உங்களுடைய கண்டுபிடிப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா?‘‘முதலில் வேலூரில் நடந்த மாவட்ட அறிவியல் கண்காட்சியில் என்னுடைய கண்டுபிடிப்பை வைத்தேன். அப்பொழுது கண்காட்சிக்கு வந்திருந்த அனைத்து அறிவியல் ஆர்வலர்களும் அறிவியல் ஆசிரியர்களும் என்னை வெகுவாக பாராட்டி, பரிசளித்தனர். அதைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு வரச் சொன்னார்கள். அங்கும் பரிசும் பாராட்டும் பெற்றேன். அதையடுத்து டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது. தேசமெங்குமிருந்து 599 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் 60 கண்டுபிடிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் தமிழகத்தின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட 13 கண்டுபிடிப்புகளில், ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு கண்டுபிடிப்புகளில் என்னுடைய சென்சார் கருவியும் ஒன்று. அதற்கான சான்றிதழ் வழங்கி என்னை கௌரவித்தார்கள்.’’.உங்களுடைய சென்சார் கருவி எப்படி வேலை செய்யும்?‘‘இந்த சென்சார் கருவியை ஆழ்துளை கிணறுகள், பாதாள சாக்கடை மனித நுழைவு குழிகள், திறந்த வெளி தரைமட்ட கிணறுகளுக்கு அருகில் பொருத்த வேண்டும். அவற்றைச் சுற்றி மூன்று மீட்டர் தொலைவுக்குள் மனிதர்கள் யார் வந்தாலும், உடனே இந்த சென்சார் கருவி சத்தமிட்டு எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் பெருமளவு உயிரிழப்புகளை தடுக்க முடியும். குழந்தைகள் போர்வெல்லிலும், மழைக்காலங்களில் திறந்த நிலை சாக்கடை மேன்ஹோல்களில் பெரியவர்களும் தெரியாமல் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். ஆனால், இந்தக் கருவிப் பொருத்தப்பட்டால், திடீரென்று Beep sound கேட்கும். இந்த எச்சரிக்கை ஒலி, அவர்களை ஒரு நொடியில் சுதாரித்துக்கொள்ளச் செய்யும். ஆனால், இதிலொரு Draw back-ம் இருக்கிறது.’’அப்படியென்ன டிரா பேக்?‘‘இந்தக் குழிகளுக்கு மூன்று மீட்டர் தொலைவில் மனிதர்கள் வந்தால் மட்டுமல்ல... வேறு ஏதேனும் வாகனங்கள் கடந்து சென்றாலும், எச்சரிக்கை தரும் ‘பீப் ஒலி’ கேட்கும். அதனால் இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அப்படி இல்லாமல் மனிதர்கள் வரும்போது மட்டும் எச்சரிக்கை ஒலி வரும்படி செய்ய வேண்டும். அதற்கான ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகிறேன். விரைவிலேயே வெற்றி காண்பேன்.’’குடும்பம், படிப்பு பற்றி சொல்லுங்கள்...‘‘என்னுடைய தந்தை ஜெயராமன் அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். தாயார் சத்யா குடும்பத்தலைவி. தங்கை காவியா பத்தாம் வகுப்பும் தம்பி திருமால் தீபக் ஆறாம் வகுப்பு படிக்கின்றனர். நான் தற்போது பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் சேர்ந்து, பயின்று வருகிறேன். மக்கள் பயன்பாட்டுக்கான என்னுடைய ஆராய்ச்சிகள் தொடரும்!’’ என்றார் உறுதியான குரலில்!- அன்புவேலாயுதம்