சம்மர் விடுமுறை வந்தாலே ‘குடும்பத்துடன் எங்கே செல்லலாம்?’ என்று திட்டம் போடுவோம். ‘எங்க திட்டம் எப்பூடி?’ என்று உற்சாகமாகக் கேள்வி எழுப்புகிறார்கள் எட்டு சிநேகிதிகள்!அந்த எட்டு பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் அனைவருமே 50 வயதைக் கடந்தவர்கள். மனைவி, அம்மா, மாமியார், பாட்டி என்று பல அவதாரங்களைத் தாண்டி, தொழிலதிபர், எழுத்தாளர், ஆசிரியர், வக்கீல் என்று பொறுப்பான பதவியில் இருப்பவர்கள்.‘‘நாலு நாள் எங்கள ஃப்ரீயா விட்டுடுங்க!’’ என்று தங்கள் வீட்டினரிடம் சொல்லிவிட்டு, அவர்கள் கிளப்பிய வண்டி, நாகர்கோவிலில் நின்றது. ‘‘விட்டாச்சு லீவு!’’ என்று கோரஸாக அவர்கள் கத்தியபடியே வண்டியிலிருந்து இறங்கிய நொடி முதல் ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்!தொட்டிப் பாலத்தைப் பார்த்து வியந்தார்கள், திற்பரப்பு அருவியில் ஆனந்தமாகக் குளியல் போட்டார்கள், அந்த ஊர் ஸ்பெஷல் உணவுகளை ரசித்து ருசித்தார்கள், கோயிலுக்குச் சென்று மனமுருகப் பாடினார்கள்..‘‘ஒத்த வயது சிநேகிதி-களுடன் சென்றது மறக்க முடியாத அனுபவம். டூரை முடித்து வீட்டுக்குத் திரும்பி வந்தபோது 20 வருடங்கள் இளமையாக உணர்ந்தோம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள் அந்த அஷ்ட லட்சுமிகள்!கல்லூரி மாணவிகள் போல ஒரே மாதிரியான உடையணிந்து, குஷியாக அவர்கள் போஸ் கொடுப்பதைப் பார்த்தால், உங்களுக்கும்கூட இப்படி ஓர் இன்பச் சுற்றுலாச் செல்ல வேண்டுமென ஆசையாக இருக்கிறதா?அட, எங்கே கிளம்பிவிட்டீர்கள்? உங்களுடைய பள்ளி, கல்லூரி சிநேகிதிகளுக்கு போன் செய்யவா? ஆல் தி பெஸ்ட்!- ர. கிருஷ்ணவேணி, நொளம்பூர்.