Snegiti
நம்மைச் சுற்றி: ‘‘எப்போது எங்கள் பக்கம் காற்றவீசும்?’’ - பனையோலை விசிறி தயாரிப்போர் வேதனை
அடி முதல் நுனிவரை பனை மரத்தைப்போல் மனிதர்களுக்குப் பயன்படுகின்ற மரம் வேறெதுவுமில்லை. முன்புபோல் இப்போது பனை மரங்கள் அதிகளவில் இல்லை. சாலையை அகலப்படுத்தவும் வீட்டு மனைகள் போடவும் பனை மரங்களை வெட்டி அகற்றிவிடுகிறார்கள். ஆங்காங்கே இருக்கும் சொற்ப மரங்களிலிருந்து ஓலைகளைக் கொண்டுவந்து விசிறி செய்கிறோம்.