Snegiti
வி.ஐ.பி. இன்டர்வியூ: ‘‘ஷூட்டிங் இல்லாத நேரத்தில் செய்வது அரசியல் அல்ல!’’ -அசத்துகிறார் அமைச்சர் ரோஜா
‘‘ ‘ஸ்ரீலதா’ என்ற என்னுடைய பெயரை ‘ரோஜா’ என மாற்றியவர் இயக்குநர் பாரதிராஜா. ‘செம்பருத்தி’யில் நடித்துக் கொண்டிருந்தபோதே தெலுங்கில் இரண்டு படங்களில் கமிட்டானேன். அந்தப் படங்கள் ‘செம்பருத்தி’க்கு முன்பே ரிலீஸாகி தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு ‘செம்பருத்தி’ தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகி, பம்பர் ஹிட்டடித்தது. சரத்குமாருடன் ‘சூரியன்’, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘உழைப்பாளி’, ‘வீரா’, விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ என ஓவர் நைட்டில் பட்டி தொட்டியெல்லாம் புகழ் பெற்றேன். இன்று ஆந்திர அமைச்சரவையில் முக்கிய இடத்தில் இருக்கிறேன். சொல்லப்போனால், நான் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. எதிர்பார்க்காததெல்லாம் நடக்கிறது.’’