-கே.குமாரசிவாச்சாரியார்கடவுள் சிலைகளின் முன்பாக படிக்கும் மந்திரங்கள் பலன் தர, எளிய சூட்சுமம் ஏதும் உள்ளதா?- தேவ. நாராயணி, நன்மங்கலம்..‘‘வீடுகளிலும் கோயில்களிலும் பல மந்திரங்களை பெண்கள் மனமுருகி படிக்கிறார்கள். ராகத்துடன் பாடுகிறார்கள். ஆனால், பலன் கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள். உச்சரிக்கும் மந்திரம் பலன் தருவதற்கு 5 சூட்சுமங்கள் உள்ளன!1. ஒரு மந்திரத்திற்கு ‘மூர்த்தி ரகசியம்’ என்ற விதி இருக்கிறது. அதை முதலில் அறியுங்கள்.2. ஒரே தெய்வத்தை பல ஆண்டு காலம் மனதில் பதியவைத்து, அந்தத் தெய்வத்திற்குரிய மந்திரத்தையே மீண்டும் மீண்டும் படிக்கவும்.3. மந்திர ஜெபத்தின் இடையே பேசுதல் கூடாது.4. அவநம்பிக்கையை அறவே தவிர்க்கவும்.5. மந்திரத்தின் ஓசை அளவு (Decibel) குறைவாகவே இருக்கட்டும்.மந்திரங்களையோ தெய்வங்களையோ அடிக்கடி மாற்றினால் சூட்சுமப் பலனை அறிய முடியாமல் போகக் கூடும். எனவே கவனம் தேவை.’’.சந்தனம், குங்குமத்தை மோதிர விரலில்தான் எடுத்து இடவேண்டும் என்பதற்கான காரணம் என்ன?- ர.கார்மேகம், காரைக்கால்.‘‘இறைவனைக் குறிக்கின்ற கட்டை விரலும் கன்மமாகிய செயலைக் குறிக்கின்ற மோதிர விரலும் இணைவதை ‘திவ்விய முத்திரை’ என்பர் சான்றோர். இதனால் நற்செயல்களைக் குறிக்கின்ற சந்தனம் இடுதல், குங்குமம் வைத்தல் ஆகியவற்றை ‘திவ்விய முத்திரை’க்குள் அடங்கும் மோதிர விரலில் இட்டுக்கொள்ள வேண்டும். தவிர, கிருமிநாசினிப் பொருள்களான மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம் கலந்து ‘குங்குமம்’ தயார் செய்யப்படுவதால், இரு புருவங்களுக்கு நடுவில் இதை இடும்போது உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் உஷ்ணத்தைக் குறைத்து நன்மை பயக்கும். குங்குமத்தின்மீது சூரியஒளி படும்போது, அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் ‘டி’ சக்தியும் உடலுக்குள் சென்று பலனளிக்கிறது. மன அமைதி, மங்களத் தோற்றம், முக அழகு, வசீகரம் இவை அனைத்தையும் தரும் குங்குமத்தை பெண்கள் தங்களுடைய மோதிர விரலால் எடுத்து இடுவதே நல்லது.’’.108 முறை ‘ஸ்ரீராமஜெயம்’ மற்றும் இதர கடவுள் நாமங்கள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை என்ன செய்யலாம்?- இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்.‘‘இன்றைய காலகட்டத்தில் விளம்பரத்திற்காக தெய்வ திருநாமங்கள் பதிக்கப்பட்ட நோட்டுப் புத்தகங்களைத் தயாரித்துக் கொடுக்கின்றனர். முதலில் ஆலயங்கள், பொதுநலச் சங்கங்கள் மூலமாக இவை வெளியிடப்பட்டன. இந்த நோட்டுப் புத்தகங்களில் ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி முடித்தப் பிறகு, வழங்கியவர்களிடமே கொடுத்து விடுவது நல்லது. சிலர் அவற்றை நீர்நிலைகளில் விடுகின்றனர். இதனால் எந்தப் பலனும் கிடைக்காது.ஒரு தெய்வ மந்திரத்தைப் பலமுறை எழுதுவதாலோ உச்சரிப்பதாலோ நீங்கள் அதை ஆழ்மனதில் பதியவைத்து விடலாம். இதற்கு ‘உச்சாடணம்’ என்று பெயர். இதனால் தங்களுடைய மனதில் தெய்வ சக்தி அதிகரிக்கும். சில தனியார் அமைப்புகள் காட்டுப் பகுதிகளில் கோயில் கட்டி, இதுபோன்ற நோட்டுப் புத்தகங்களை தெய்வங்களின் ஆதார பீடங்களில் வைக்கின்றனர். காகிதங்களை பீடத்தில் வைப்பதால் ‘தெய்வ பிரதிஷ்டை’ என்கிற ‘நிலை நிறுத்தல்’ பலன் தர வாய்ப்பில்லை. ஒரு ஓரத்தில் கண்ணாடிப் பெட்டியில் வேண்டுமானால் காட்சிக்காக வைக்கலாம். இனிமேல் நோட்டுப் புத்தகங்களில் எழுதினால், அதற்கான கோயில்களில் வைக்கச் செய்யலாம்.’’.வீட்டு பூஜை அறையில், மணி அடிக்காமல் பூஜை செய்யலாமா?- கே.எஸ்.ராஜா, மேடவாக்கம்.‘‘பூஜை அறையில் தீபம் ஏற்றாமல் இருக்கும்போது இறைவடிவங்கள் தூங்குவதாக பொருள். முதலில் தீபம் ஏற்றியப் பிறகு படைக்க வேண்டிய பொருள்களை வைத்து, மணி அடித்து, அவர்களை கண்விழிக்கச் செய்து, உணவுப் படையல் தருதல் வேண்டும் என்று ‘பூஜை அறை சாஸ்திரம்’ கூறுகிறது.பூஜையின்போது மணியை அடிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், வீட்டிற்குள் நாம் பல தகாத வார்த்தைகளைப் பேசியிருந்தால், துர்சக்திகள் உள்ளே நுழைந்து அங்கே தங்கியிருக்கக்கூடும். மணியை அடிக்கும்போது இறைவடிவங்கள் விழித்துக்கொள்வதால், அந்த துஷ்ட சக்திகள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை.முதலில் வீட்டு பூஜை அறையில் எப்படி மணி அடிப்பது என்று பெண்கள் அறிய வேண்டும். மணி அடிக்காமல் பூஜை நடத்துவது பலன் தராது. ‘மணியோசை’ என்பது இசைகளில் ஒரு வகை சுப ஒலியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. பெருமாள், சிவன் ஆலயங்களில் மணி அடிக்கும் முறை வேறுபடும் என்பதை அறிய வேண்டும்.’’.சிநேகிதிகளே... ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் கேள்விகளையும் எழுதி அனுப்பலாம்.உங்கள் வீட்டு பூஜை அறையில் நீங்கள் வணங்கும் காட்சியை படமெடுத்து, snehidhi@kumudam.com என்கிற இ.மெயிலுக்கு அனுப்புங்கள்.