ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகிறது. இந்தச் செய்தியை கேள்விப்பட்டதிலிருந்தே பெற்றோர் பலரும் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டதைப் போல பரிதவித்து வருகிறார்கள். ‘‘மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவ _ மாணவியர்களின் பெற்றோர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல! மருத்துவப்படிப்பு இல்லையென்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக கோழை மாணவர்கள் எடுக்கும் தற்கொலை முடிவே அதற்குக் காரணம்!’’ என்கிறார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி. பள்ளி விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் இவர், மேற்படிப்பு குறித்து மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார். மாணவமணிகளுக்கு அவர் சொல்லும் முக்கிய அறிவுரைகள் இதோ...‘‘மாணவர்களுக்கு இப்போதைய தேவை மருத்துவப்படிப்பு அல்ல... மருத்துவம் மட்டுமே! அதாவது, தைரியத்தைக் கொடுக்கக்கூடிய ‘தன்னம்பிக்கை’ எனும் மனோதைரியமிக்க மருத்துவம்! மாணவமணிகள் யாரும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி வீணாக கவலைப்படத் தேவையில்லை. இயற்கை நம் ஒவ்வொருவரையும் கைபிடித்து தன்பாட்டுக்கு அழைத்துப்போகும். அது யாரையும் எங்கும் கைவிட்டுவிட்டுப் போனதில்லை. நாம்தான் அதன் கையை உதறிவிட்டு, எப்படி எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல் தவிக்கிறோம்.+2வுக்குப் பிறகு மேற்படிப்புப் படிக்க பல்வேறு துறைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் முன்னேற பல்வேறு படிகளும் இருக்கின்றன. இசை, பாட்டு, நெசவு, ஓவியம், தையல் என நிறைய சாய்ஸ் உள்ளன. இதில் நம் தனித்திறமையால் உச்சத்தைத் தொடலாம். டாக்டர் படிப்பை மட்டும்தான் சமூக அங்கீகாரமாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதே நேரத்தில் நம் ஊரில் எத்தனை டாக்டர்கள் இருக்கிறார்கள்? டாக்டர் அல்லாதவர்கள் எவ்வளவு பேர் பல்வேறு துறைகளில் பிரபலமாக சமூக அந்தஸ்தோடு இருக்கிறார்கள் தெரியுமா? நீங்களே கணக்கெடுங்கள்.எம்.பி.பி.எஸ். அல்லாத, நீட் தேர்வு இல்லாத பல்வேறு மருத்துவப் படிப்புகள் இருக்கின்றன. மருந்தில்லாத மருத்துவம் சார்ந்த படிப்புகள் நிறைய இருக்கின்றன. ‘நேச்சுரோபதி’ என்கிற இயற்கை மருத்துவம், யோகா, களிமண் குளியல், பிசியோதெரபி, வாட்டர் தெரபி, காய்கறிகள், பழங்கள் மூலம் உணவே மருந்து என இப்பொழுது மக்கள் திசை திரும்பியிருக்கிறார்கள். எல்லோரும் ஒரே பக்கம் போகாதீர்கள். அதனால்தான் அது டிமாண்டாக தெரிகிறது. அதேபோல் யாரோ சொல்கிறார்கள் என்று ஒரு படிப்பைத் தேர்வு செய்யாதீர்கள். உங்கள் நண்பன் படிக்கிறான் என்று நீங்களும் அதையே தேர்வு செய்யாதீர்கள். ஆர்வத்தில் சேர்ந்த நண்பன் தேர்ச்சிபெற்று போய் விடுவான். அவனுக்காக சேர்ந்த நீங்கள் அங்கேயே இருப்பீர்கள்! அனுபவஸ்தர்கள் பலர் பல யோசனைகளைச் சொல்வார்கள். எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் தனித்திறமை மற்றும் ஆர்வத்தோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுங்கள்!ஒவ்வொரு வேளையும் நாம் சாப்பிடுகிறோம். ஆனால், அந்தச் சாப்பாடு சம்பந்தமான கேட்டரிங் படிப்பைப் பற்றி நாம் யோசித்திருக்கிறோமா? இன்றைக்கு சமையல்துறையில் ஏராளமானோர் கொடிகட்டிப் பறக்கிறார்கள். சுவையான, ஆரோக்கியமான, இயற்கையான உணவை மக்கள் விரும்புகிறார்கள். எனவே நன்றாக யோசியுங்கள்.படித்து பல பட்டங்கள் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை. அதே நேரத்தில் இயற்கையுடன் இணைந்து சாதிக்க, நெசவு, தச்சு, தையல், எம்பிராயட்ரி உள்ளிட்டவையும் இருக்கின்றன. வருமானத்திற்கு ஒன்று, பொழுதுபோக்கிற்கு ஒன்று என்றுகூட வைத்துக்கொள்ளலாம். அதை ஹாபியாகவும் செய்யலாம். அது உங்களை ஹேப்பியாக வைத்திருக்கும். நம் கவலைகளை போக்க, மனதை உற்சாகப்படுத்த அது போதும். அப்படி உங்களுக்குப் பிடித்த தொழிலில் வருமானம் ஈட்ட கற்றுக்கொண்டால் அதைவிட வாழ்க்கையில் வரப்பிரசாதம் வேறெதுவுமே இல்லை.அதேநேரத்தில், எந்தத்துறைசார்ந்தவேலையாகஇருந்தாலும்நீங்கள்மேலும்அதில்கைதேர்ந்தவராகவளரவேண்டும்என்கிறஆர்வத்தையும்உற்சாகத்தையும்வளர்த்துக்கொள்ளவேண்டும். .செய்யும் தொழில்மீது எந்த நேரத்திலும் ஒருவருக்கு வெறுப்பு வரக்கூடாது! எனக்கு தையல்மீது 40 வயதில் ஆர்வம் வந்தது. ஆர்வமாக கற்றுக்கொண்டேன். இன்று எனக்கு பொழுதுபோக்காகவும் என் குடும்பத்து பிள்ளைகளுக்கு நானே தைத்துக் கொடுக்கிறேன். இதில் படைப்பாளியாய் எனக்கேற்படும் திருப்தி, நான் சார்ந்த அலுவல் பணியிலும் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது. தையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வந்ததும் சம்பந்தப்பட்ட நூல்களை படித்தேன். வலைதளத்தில் பார்த்து கற்றுக்கொண்டேன். எனக்கு குரு என்று தனியாக யாருமில்லை. ஆர்வமும் அனுபவமும்தான் என்னுடைய குரு!நான் அரசு பள்ளியில்தான் படித்தேன். அதுவும் பத்தாம் வகுப்பு வரை தமிழில் படித்தேன். +1 ஆங்கில மீடியத்தில் சேர்ந்தேன். பத்தாம் வகுப்புவரை தமிழில் படித்ததால் ஆரம்பத்தில் சரியாக புரியவில்லை. அதன்பிறகு ஆசிரியையிடம் என்னுடைய குறையைச் சொன்னேன். அவர், ‘இதுவரை நீ படித்த பாடங்கள்தான் இது. மொழிதான் வேறு!’ என்று ஆங்கிலத்தில் இருந்ததை நான் படித்த தமிழோடு ஒப்பிட்டு விளக்கினார். ‘அட இவ்வளவுதானா!’ என்று அதன்பிறகு ஆர்வமுடன் படித்தேன். அதன் பிறகு நான் பி.எஸ்சி., எம்.ஏ., முடித்தேன். பள்ளி, கல்லூரியில் படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் கம்ப்யூட்டர், டைப் ரைட்டிங் கற்றுக்கொண்டது எனக்கு கைகொடுத்தது. அது எனக்கு டைப்பிஸ்ட் வேலையையும் பெற்றுத் தந்தது. மாலை நேர வகுப்பில் வழக்கறிஞர் பட்டமும் பெற்றேன். என்னுடைய லட்சியம் குரூப் ஒன் தேர்வில் வெற்றிபெற்று சப் கலெக்டராக வேண்டும் என்பதுதான். ஆனால், அதையே எதிர்பார்த்திருக்காமல் பல்வேறு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று வெவ்வேறு பதவிகளில் சேர்ந்தேன். நான்காவது முறையாக என்னுடைய லட்சியம் நிறைவேறியது. குரூப் ஒன்னில் தேர்வாகி, சப் கலெக்டர் ஆனேன். அதற்காக மற்றவற்றை சுமையாக நினைக்கக்கூடாது. நம்மை வழி நடத்தும் பயிற்சியாக உணர வேண்டும். இளைஞர்களுக்கான ‘ஜுவென்லி ஜஸ்டிஸ் ஆக்ட்’ படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த டிப்ளமோ படிப்பையும் படித்தேன்.மாணவப் பருவத்தில் நமக்கு குறிக்கோள் தெரியாது. வாழ்க்கையில் பல பிரச்னைகள் வரும். அவற்றுக்குத் தீர்வு காண்பதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். பலரும் பல யோசனைகளை சொல்வார்கள். ஆனால், முடிவு எடுக்கும் திறமை நமக்கு வேண்டும். சில முடிவுகள் தவறாகக்கூட இருக்கலாம். அதையும் நம் வாழ்க்கையில் ஒரு அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும். படிப்பென்பது வெறும் பட்டமல்ல... வாழ்க்கையின் அடுத்தக் கட்டம்!’’ என்றார் ஆட்சியர் வளர்மதி.நன்றாகசிந்தித்துசெயல்படுங்கள்! - அன்புவேலாயுதம்