-கே.குமாரசிவாச்சாரியார்வரலக்ஷ்மி விரத நாளில் மாதவிலக்கு ஆகிவிட்டால் பூஜை தடைபடுமே... பிறகு எப்போது செய்வது?- திருமதி ஆர்.எம்., போளூர்.‘‘ ‘விரத கல்பம்’ கூறும் நியதிகளின்படி ஒரு சுமங்கலிப் பெண், குடும்பத்தில் லக்ஷ்மி கடாட்சம் வரவேண்டும் என்பதற்காக ‘வரலக்ஷ்மி விரத பூஜை’யை பரம்பரை வழக்கப்படி செய்து வருவது முறை. அதற்கு சில விதிகளை கடைப்பிடிப்பதில் ‘மாதவிலக்கு’ என்பதும் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் ஆகும். ‘மாதத்தீட்டு’ என்ற மலம் பெண்களிடமிருந்து வெளியாவது அவள் உடல் ஆரோக்கியம் அடைவதற்காக என்று சொல்லப்பட்டாலும், பூஜைகள் செய்வதற்கு அந்தக் காலம் தகுதி நிலையைப் பெறாது என்றே சொல்லப்படுகிறது. ‘வரலக்ஷ்மி பூஜை’ நாளில் மட்டுமல்ல... எல்லா பூஜைகளுக்குமே மாதவிலக்கு ஆகி, மூன்றாம் நாள் கழித்து நான்காம் நாள் தலைக்குக் குளித்து, மீண்டும் மஞ்சள் நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு பூஜை செய்வது விதியாகிறது. வரலக்ஷ்மி விரத பூஜையானது மாதவிலக்கின் காரணமாகத் தடைபட்டால், அடுத்து வரும் 15 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்து விடலாம். இக்கருத்தை ஆதிசங்கராச்சாரியரே ‘சுவாசினி பூஜை’ விதியில் கூறியுள்ளார்.’’.வண்ணப் பொடிகள் கலந்து முறுக்கு, சீடை செய்து, ‘கிருஷ்ண ஜெயந்தி’யன்று சிலர் படைக்கிறார்களே... இது சரியா?- சுபா வாசன், வலங்கைமான்.‘‘அழகான விளையாட்டுப் பொருள்களை கோகுலாஷ்டமி பூஜை காலத்தில் வைத்து, தின்பண்டங்களை படைத்து, பிறகு சின்னக் குழந்தைகளுக்குக் கொடுப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் வண்ணப் பொடிகள் கலந்து செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ‘நீலமேக சியாமள வர்ணன்’ என்று வர்ணிக்கப்படுகிற அந்தக் கார்மேக வண்ணனின் வருகைக்காக வீட்டு வாசலில் வண்ணமயமாக ரங்கோலி கோலங்கள் போடுவது வட தேசத்திலும் தமிழகத்திலும் காலம் காலமாக இருந்து வருகிறது. முறுக்கு, சீடை, அதிரசம் படைப்பது அழகுக்காக அல்ல... அவை கிருஷ்ணனுக்குப் பிடித்தவை என்பதால்தான். திருமணக் காலங்களில் பெண்ணுக்குப் பிறந்த வீட்டு சார்பாக 31 எண்ணிக்கையில் முறுக்கு, சீடை, அதிரசம், தேன்குழல் வைக்கும்போது, அதில் மணமக்களின் பெயர்களை எழுதுவதற்காக வண்ணப்பொடியை கலந்து, தலா ஒரு முறுக்கு செய்து அழகுப்படுத்துவார்கள். வயிற்றுக்குள் போகும் தின்பண்டங்களை இப்படி அழகுப்படுத்த வேண்டாமே!’’.பிறந்த குழந்தைக்கு கருப்புப் பொட்டு வைப்பது ஏன்? எத்தனை வயது வரை வைக்கலாம்?- எம். கோமதி, கவுண்டச்சிபுதூர்.‘‘தர்பைபுல் சாம்பலு டன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து, ‘ரட்சை’ எனப்படும் கருப்புப் பொட்டை குழந்தைகளுக்கு வைப்பது பழங்காலத்து முறை. வீட்டில் சாந்து பொட்டு வைப்பார்கள். பிறந்த குழந்தை அழகாக இருக்கும்போது பார்க்க வரும் விருந்தினர்களும் பக்கத்து வீட்டாரும் தூக்கி வைத்துக் கொஞ்சும்போது கண் திருஷ்டி படும் என்பது தாய்மார்களின் கருத்து. பகலில் சிலர் வந்து போனபிறகு இரவு 8 மணிக்கு மேல் சில குழந்தைகள் ஓயாமல் அழும். அப்போது வீட்டுப் பெரியவர்கள், ‘குழந்தைக்கு உரம் விழுந்துவிட்டது. கண்பட்டுவிட்டது’ என்று சொல்வார்கள். இதன் பொருட்டு நெற்றியிலும் இடது கன்னத்திலும் நாபியிலும் கருப்பு நிற ‘திருஷ்டிப் பொட்டு’ வைப்பார்கள். ஆனால், உண்மையில் இதன் பெயர் ‘காக்கும் ரட்சைப் பொட்டு’. குழந்தை பிறந்தது முதல் ஒன்றரை வயது வரை (18 மாதங்கள்) கருப்புப் பொட்டை சாந்து போல வீட்டிலேயே தயாரித்து வைக்கலாம். சில குடும்பங்களில் குழந்தையின் மூன்று வயது வரையும் அந்தக் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பருவத்திலும்கூட இப்படிக் கருப்புப் பொட்டு வைப்பார்கள். ஆனால், 18 மாதங்கள் வைத்தாலே போதுமானது.’’.சுவாமி படங்களுக்கு சூடிய மலர்களை குப்பையில் வீசுவது சரியா? அல்லது நீர்நிலைகளில் விட வேண்டுமா?- ராஜாத்தி முருகன், சொக்கலிங்கபுரம்.‘‘பலவகை மலர்களை வாங்கி வந்தோ அல்லது வீட்டுத் தோட்டத்தில் பறித்தோ இறைவனுக்கு சூட்டுகிறோம். ஒரே நாளில் அதற்கு வாசனை போய் வாடியதும், அது வேண்டாத பொருளாகி, குப்பைக்குச் செல்கிறது. ஆனால், சுவாமி படங்களுக்கு சூடிய செம்பருத்தி மலரைக் காயவைத்து தலைக்குத் தேய்த்துக்கொள்ளலாம். மருக்கொழுந்தை தேங்காய் எண்ணெயில் போடலாம். ரோஜா இதழ்களை சீயக்காய் அரைக்கச் சேர்க்கலாம். தாமரை இதழ்களை ஆலயங்களில் நடைபெறும் யாகத்திற்குக் கொடுக்கலாம். இல்லாவிட்டால், தண்ணீரில் ஊறவைத்தும் அருந்தலாம். வில்வத்தை பொடி செய்து, நீரில் குழைத்து சாப்பிட்டால், சர்க்கரை நோய், மயக்கம் வருதல் சரியாகும். துளசியை காயவைத்து, நீரில் கலந்து, மஞ்சள் பொடி சேர்த்து வீடு முழுக்க தெளித்தால், வாஸ்து குறைபாடுகள் நீங்கும். அதிக மணம் கொண்ட அரளி, சாமந்தி, மல்லிகை, முல்லை மலர்களை மட்டும் ஓடும் நீரில் விடவேண்டும். வாசலில் வரும் குப்பை வண்டியில் வீசி எறியாமல், சாக்கடை நீர் கலக்கும் இடத்தில் கொட்டாமல், வெளியிடங்களுக்குச் செல்லும்போது எடுத்துச் சென்று, தூய்மையாக ஓடும் நீரில் விட்டால், தங்களுடைய மலர் பூஜை பலனளிக்கும்.’’.சிநேகிதிகளே... ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் கேள்விகளையும் எழுதி அனுப்பலாம்.உங்கள் வீட்டு பூஜை அறையில் நீங்கள் வணங்கும் காட்சியை படமெடுத்து, snehidhi@kumudam.com என்கிற இ.மெயிலுக்கு அனுப்புங்கள்.