Snegiti
29.என் சமையல் ரகசியங்கள்: மாத்திரைகள் எதற்கு...நல்ல நுண்ணுயிர்கள் இருக்கு..!
நாம் நமது உணவுகளில் அந்தக் காலத்திலிருந்து நொதிக்கப்பட்ட பலவற்றை எடுத்துக்கொண்டு வருகிறோம். இதற்கு இட்லி, தோசை மாவு உள்ளிட்டவை உதாரணம். இதைப்போல நொதிக்கும்போது நல்ல பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகும். மாவுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயம், உளுந்து, இட்லி புழுங்கல் அரிசி இவை எல்லாமே காற்றை நன்றாக உள்ளிழுக்கும் தன்மை உடையவை. நாம் கைகளால் கிரைண்டரிலிருந்து மாவை எடுத்து உப்பு சேர்த்து கைகளால் நன்றாக கலந்துவிடுவோம். நமது கைகளிலும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அதுவும் அந்த மாவோடு சேரும்போது பல்லாயிரக்கணக்கான, இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகும். இதனால் நோய் எதிர்க்கும் திறன் அதிகரிப்பதோடு, குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.