தங்க நாணயத்திற்குகடன் கிடைக்குமா? ஒரு காசோலையில் இருவர் பெயர்களை நிரப்பினால்,அது செல்லுபடியாகுமா?- எம்.சுகுணா, காவேரிப்பாக்கம்.‘‘செல்லுபடியாகும். ஆனால், அந்தக் காசோலையை அந்த இருவரும் தாங்கள் கூட்டுப் பெயரில் தொடங்கிய வங்கிக் கணக்கில் போட்டுதான் பணம் பெற முடியும்.’’ BHIM என்பது பாதுகாப்பான செயலியா?- ஆர்.மலர்வண்ணன், கபிஸ்தலம்..‘‘இதன் முழுப் பெயர் Bharat Interface for Money. செல்போன் மூலமாகத் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு உதவும் செயலி இது. இதைப் பயன்படுத்த BHIM செயலியை செல்போனில் தரவிறக்கம் செய்து, உங்கள் வங்கிக்கணக்குடன் செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பிறகு UPI PIN என்னும் 4-6 இலக்க ரகசியக் குறியீட்டு எண்ணை உருவாக்கிக்கொள்ள வேண்டும். BHIM மூலமான எல்லாப் பரிவர்த்தனைகளுக்கும் இந்த UPI PIN-ஐ கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டும்.’’ காலவரையறையுள்ள வைப்புகளுக்கு எதிராக எவ்வளவு தொகையை கடனாக (Loan against Term Deposits) கொடுப்பார்கள்?- சுமதி சம்பந்தன், காஞ்சிபுரம். ‘‘உங்கள் வைப்புத் தொகையில் 75 சதவிகிதம் அளவுக்கு நீங்கள் கடன் பெறமுடியும். சிலசமயம் 95 சதவிதம் வரைகூட வங்கியானது கடன் வழங்கும். இவ்வளவு சதவிதம் என்று தீர்மானிக்கும்போது நீங்கள் செலுத்திய தொகை மட்டுமல்ல, அன்றுவரை அதற்காக வங்கி அளிக்கவேண்டிய வட்டித் தொகையையும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.’’ ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘டிஜிட்டல் கரன்சி’யை பாமர மக்களால் பயன்படுத்த முடியுமா?- த. சத்தியநாராயணன், அயன்புரம்.‘‘நம்மில் பலரும் டிஜிட்டல் கரன்சியை வேறொரு வடிவத்தில் குறைந்தளவில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். கால் டாக்ஸிகளுக்குக்கூட ரொக்கமாகத் தராமல் Gpay, Paytm மாதிரியான பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாகத் தருகிறோம்தானே!கூகுள், பேடிஎம், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அளவில், டிஜிட்டல் பணத்தைச் சேமிக்க இடமளித்துள்ளன. அதாவது, தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து இவற்றுக்கு தொகையை நேரடியாக மாற்றிக்கொண்டு தேவைப்படும்போது, கொஞ்சம்கொஞ்சமாகப் பயன்படுத்திக்-கொள்ளலாம். ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் கரன்சி, பாமர மக்கள் பயன்பாட்டுக்குத்தான். ஆனால், அது பரவலாக இன்னமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. டிஜிட்டல் கரன்சியை ஒருவர் மற்றவருக்கு அனுப்பும்போது ‘Password’ எனப்படும் ‘கடவுச்சொல்’லானது பயன்படுத்தப்பட வேண்டும். இது நமக்கான பாதுகாப்பு!’’ என்னுடைய முகவரிக்கு இரண்டு ஏ.டி.எம். அட்டைகள் சில தினங்கள் இடைவெளி விட்டு அடுத்தடுத்த வந்தது. ஒன்றை மட்டும் பயன்படுத்தி வருகிறேன். மற்றொன்றை என்ன செய்ய வேண்டும்?- எஸ்.சுந்தர், நெல்லை-7.‘‘நீங்கள் உங்கள் பெயரில் மட்டும் ஒரு சேமிப்புக் கணக்கு வைத்திருந்து, உங்கள் மனைவியின் பெயரையும் இணைத்து கூட்டாக இன்னொரு சேமிப்புக் கணக்கு வைத்திருந்து இரண்டு கணக்குகளுக்கும் என இரண்டு ஏ.டி.எம். அட்டைகள் வந்திருந்தால், ஒன்றை நீங்களும் இன்னொன்றை உங்கள் மனைவியும் பயன்படுத்தலாம்.ஒரே எண் கொண்ட இரண்டு ஏ.டி.எம். அட்டைகள் உங்களுக்கு வந்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்வது நல்லது. அதற்குப் பிறகு அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தினாலும் அதற்கான கடவுச்சொல்லை உடனடியாக மாற்றி விடுங்கள்.மற்றபடி இரண்டு ஏ.டி.எம். அட்டைகளை வைத்திருப்பதில் ஒரு வசதி உண்டு. ஒரு ஏ.டி.எம். அட்டைக்கு அதிகபட்சம் ஒரு நாளைக்கு இவ்வளவு தொகைதான் எடுக்க முடியும் என்று இருக்கிறது. அந்த விதத்தில் அதிகத் தொகை தேவைப்படும்போது இரண்டு ஏ.டி.எம். அட்டைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.’’.தங்க நாணயங்களுக்கெதிராகக் கடன் பெற முடியுமா? - எஸ்.செல்வாம்பிகா, திருப்பூர்.‘‘முடியும்! ஆனால், தங்க நாணயங்களுக்கு எதிராகக் கடன் பெற வேண்டுமென்றால் நீங்கள் வங்கிகளை மட்டும்தான் அணுக முடியும். ஏனென்றால், தனியார் நிறுவனங்களுக்கு இந்த அதிகாரம் இல்லை.’’ மோசடியில்சிக்கிக் கொண்டால்என்ன செய்வது?ஏமாளித்தனமாக OTP எண்ணைக் கொடுத்ததால் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடியாகத் திருடப்பட்டிருந்தால் என்ன செய்வது?- ஜி.ஆர்., பரமத்தி வேலூர்.‘‘முதலில் உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும். அதே நேரத்தில், சைபர் கிரைம் காவல்துறையை 155260 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக யாராவது பணம் பெற்றிருந்தால், இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள். எவ்வளவு சீக்கிரம் புகார் அளிக்கிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது. மோசடி நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் மேற்காணும் எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். காவல் நிலையத்துக்கு நேரில் வராமலேயேwww.cybercrime.gov.in என்ற வலைதளத்திலும் புகாரளிக்கலாம்!’’ சிநேகிதிகளே... வங்கியில் புதிதாக சேமிப்புக் கணக்குத் தொடங்குவதிலிருந்து முறையாக கடன்கள் பெறுவது வரை உங்களுடைய கேள்வி எதுவாயினும் எழுதி அனுப்பலாம். உங்கள் கேள்விக்கான பதிலானது இந்தப் பகுதியில் இடம்பெறும்!-ஜி.எஸ்.எஸ்.