- முனைவர் சாந்தகுமாரி சிவகடாட்சம்‘‘கனவுகள் இல்லாத இருதயம், சிறகுகள் இல்லாத பறவையைப் போன்றது!’’- சூசி காசம்.‘காமரன்ட்’ (Cormorant) எனப்படும் ‘நீர் காக்கை’கள் 80 அடி ஆழம் வரை நீருக்குள் டைவ் அடித்து, ஒரு நிமிடத் திற்கு மேல் அங்கேயே இருந்து, தங்கள் எல்லைக்குள் மீன்கள் உள்ளனவா என்பதை ஆராயும். கண்களைத் திறந்து வைத்தபடியே நீருக்குள் நீந்திச் செல்லும் வல்லமை இவற்றுக்கு உண்டு!‘எப்படி இந்தக் காக்கைகளால் இவ்வளவு நேரம் தண்ணீருக்குள் இருக்க முடிகிறது?’ என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதுதானே? இந்த நீர் காக்கைகள் இதற்காக சின்னச் சின்ன கற்களை விழுங்கி விடுகின்றன. இந்தக் கற்கள், அவற்றின் குடல்களில் அப்படியே தங்கிவிடுகின்றன. இவை ‘ஸ்கூபா டைவிங்’கில் (Scuba diving) ஈடுபடுபவர்களின் இடுப்பில் கட்டப்படும் கனமான பெல்ட்டுகளை போல இயங்கி, அந்தக் காக்கைகள் நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கியிருக்க உதவுகின்றன!.கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு நீர் காக்கைகள் தண்ணீருக்குள் மூழ்கி, மீன்களை தேடுவதால் கலங்கிய நீரில் அவற்றால் மீன்களை பிடிக்க முடியாது. மழைக்காலங்களில் நீர் காக்கைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்கிறார்கள்.நீர் காக்கைகள் சுமார் 25 வருடங்கள் வரை வாழ்கின்றன. இரண்டு வயதிலிருந்து மீன்களை பிடிக்கத் தொடங்குகின்றன. நன்றாக மீன்களை கொத்தி வரும்படி நீர் காக்கைகளை மீனவர்கள் பழக்குகிறார்கள். இப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட நீர் காக்கைகள் 300 டாலர்கள் வரை விற்கப்படுகின்றன. ஒரு மணி நேரத்தில் இத்தகைய நீர் காக்கைகள் இரண்டு பக்கெட் நிறைய மீன்களை பிடித்து கொடுக்குமாம்! தண்ணீருக்குள் சென்று சில சமயங்களில் 50 பவுண்ட் எடையுள்ள கெண்டை மீன்களை கூட பிடித்து வருமாம்!.அப்படிப் பிடித்த மீனை காற்றில் தூக்கிப் போட்டு, பிறகு தங்களுடைய அலகுகளால் அந்த மீனின் தலைப் பகுதியை முதலில் தொண்டைக்குள் செல்லுமாறு பிடித்து விழுங்கத் தொடங்கும். அந்தச் சமயத்தில் மீனவர்கள் நீர் காக்கைகளை படகிற்குள் இழுத்து வந்து, அவற்றின் தொண்டைப் பகுதியை அமுக்கி, விழுங்கிய மீனை வெளியே எடுத்து விடுகிறார்கள்.இந்த நீர் காக்கைகளின் கழுத்தை கயிற்றில் கட்டி, ஒரே சமயத்தில் ஏழு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கையில் தண்ணீரில் வீசி விடுகிறார்கள். மீன்களோடு அவை மேலெழுப்பி வரும்பொழுது, படகிற்குள் அவற்றை இழுத்து விடுவார்கள்.‘‘இன்றைய காலகட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, பண்டைய முறையில் நீர் காக்கைகளைக் கொண்டு மீன்கள் பிடிப்பதை லைவாக செய்து காட்டுகிறார்கள். இந்த ஷோவுக்கான டிக்கெட்டுகளை இங்கே இருந்தே உங்களுக்காக புக் செய்யட்டுமா?’’ என்றாள் அந்த டிராவல் டெஸ்கில் இருந்த பெண்..‘‘இல்லை... இல்லை... பொறுங்கள். நான் இன்னும் இதைப் பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை. மூங்கில் காட்டை பார்த்து முடித்தவுடன் போகலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி யோசிக்கிறேன்’’ என்றேன்.‘‘மேடம்... ஒரு நிமிடம்... இந்த நிகழ்வு, மாலை சூரியன் மறைந்த பிறகு சுமார் 6:30 மணியிலிருந்து 8 மணி வரைதான் நடக்கும். அது எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோ மூலம் காட்டுகிறேன்!’’ என்று கூறி, அவளுடைய லேப்டாப்பை காண்பித்தாள்.இருட்டில் நீண்ட படகு ஒன்றில் பத்து பேர் அமர்த்திருந்தனர். சற்று தொலைவில் மற்றொரு படகின் முன் பகுதியில், வளைந்த கொம்பு ஒன்றில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது.‘‘இது எதற்கு?’’ என்றேன்.‘‘இந்த வெளிச்சத்தினால் கவரப்பட்டு, மீன்கள் மேலெழும்பி வரும். அப்படி வரும் மீன்களை நீர் காக்கைகள் எளிதாக பிடித்துவிடும்!’’ என்றாள்..நீர் காக்கைகளை இழுத்து, அவற்றின் கழுத்தைப் பிடித்து அமுக்கி, மீன்களை வெளியே இழுத்து போட்டுக் கொண்டிருந்தார்கள் மீனவர்கள். அந்தக் காட்சியை பார்த்ததும் என் மனம் ஏனோ சோகத்தில் ஆழ்ந்தது. ‘யுகாய்’ (Ukai) என்று ஜப்பான் மொழியில் அழைக்கப்படுகின்ற இவ்வகையான மீன்பிடித்தல் நிகழ்வை சென்று பார்க்க ஏனோ என் மனம் விரும்பவில்லை.பாவம், பசியோடு... அதுவும் தாங்கள் பெரு முயற்சி செய்து பிடித்த மீன்களை விழுங்குவதற்கு முன்பாக அந்த நீர் காக்கைகளின் தொண்டையை அமுக்கி, பிதுக்கி மீனை வெளியே எடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், ‘‘ஓ ஃபைன். அங்கேயே சென்று டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்கிறேன். மீன் பிடிக்கும் ‘யுகாய்’ முறையை பற்றி இவ்வளவு நேரம் விளக்கியதற்கு மிக்க நன்றி!’’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றோம்..‘‘சாந்தி... நீதான் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவாயே! இதை மட்டும் ஏன் அவாய்டு செய்கிறாய்?’’ என்று என் கணவர் முடிப்பதற்கு முன்பாக முந்திக் கொண்டேன்.‘‘இல்லை சிவா... இது வேண்டாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா... மாட்ரிட்டில் (Madrid) நடைபெற்ற ‘புல் ஃபைட்’டை (Bull fight) பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் மிகவும் மனவேதனை அடைந்தேனே?’’‘‘ஆமாம்! நாம் ஸ்பெயினுக்குச் சென்றபோது அது நடந்தது அல்லவா?’’‘‘அதைப் போலவே ஒரு ஜீவனை துன்புறுத்தி, அதன் உணவை பிடுங்குவது பண்டைய மீன்பிடி முறையாக இருக்கலாம். ஆனால், அதைக் காண எனக்கு விருப்பம் இல்லை’’ என்றேன்.(பயணிப்போம்)