தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடும் தாறுமாறான விலையேற்றமும் அனைத்து தரப்பினரையும் பெருமளவில் பாதித்தது. மடமடவென்று விலையேறிய தக்காளி, கிலோ 200 ரூபாயைத் தொட்டு, பலருடைய பீ.பி.யை எகிறவைத்தது. ‘இக்கட்டான இதுபோன்ற காலகட்டதில் தக்காளிப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’ என்று பல்வேறு தரப்பினரிடம் கேட்டோம்..சரோஜா,பூ வியாபாரி.‘‘இந்தத் தக்காளியும் வெங்காயமும் இருக்குதே... எப்பவும் பிரச்னைதாங்க. ஒரு சமயத்துல தக்காளி கிலோ அஞ்சு ரூபா, பத்து ரூபான்னு சீரழியும். இன்னொரு சமயம் இப்போ மாதிரி நூறு, நூத்தம்பது, இருநூறுன்னு ஒரே அடியா எகிறிடும். தக்காளி இந்த விலை வித்தா எங்கள மாதிரியான சாதாரண ஜனங்க எல்லாம் எப்படிங்க வாங்க முடியும்? விலை ஏறினதுல இருந்து நான் தக்காளியே வாங்கலைங்க. பழையபடி விலை இறங்கினா அப்பப் பாத்துக்கலாம்னு இருந்தேன். இதோ இப்போ கிலோ 40 ரூபாய்க்கு கிடைக்குது. அதனால சந்தோஷமா வாங்கி சமைக்கிறேன்.’’ .சங்கீதா நாராயணன்,குடும்பத்தலைவி.‘‘மிடில் கிளாஸ் குடும்பங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். வசதி இல்லாதவங்க, விலை ரொம்ப ஏறினா வாங்கமாட்டாங்க. ரொம்ப வசதியானவங்களோ, விலை ஏறினாலும் கவலைப்படாம வாங்குவாங்க. வழக்கமா கிலோ இருபது, முப்பது ரூபாய் விற்கிற தக்காளி இருநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டால், வாங்கவும் முடியாது; அதே சமயத்துல வாங்காம இருக்கவும் முடியாது. வழக்கமா, மார்க்கெட்டுக்குப் போனா ஒரு கிலோ வாங்குவேன். விலையேற்ற சமயத்துல அரை கிலோதான் வாங்குவேன். அதுவும் சின்னச் சின்ன தக்காளியா பொறுக்கி எடுத்து வாங்கிட்டு வந்து, சிக்கனமா பயன்படுத்துவேன். குறிப்பா, வடஇந்திய சப்ஜிகள் செய்தால், ரொம்பவும் கம்மியாத்தான் தக்காளியை சேர்ப்பேன்.’’.சுபம் கணேசன்,கேட்டரிங் கான்ட்ராக்டர்.‘‘கல்யாண கான்ட்ராக்ட்களை முகூர்த்த தேதிக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஒப்புக்கொள்கிறோம். கல்யாண நாளில் தக்காளி என்று இல்லை எந்தக் காய்கறி விலை ஏறினாலும், அதைக் காரணம் காட்டி, பேசிய தொகையை அதிகரிக்க முடியாது. எனவே மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டிய விஷயம் இது. தென்னிந்திய ஐட்டங்களில் தக்காளியின் தேவையை புளி, எலுமிச்சம்பழம் பயன்படுத்தி ஓரளவுக்கு சமாளித்துவிடலாம். ஆனால், வடஇந்திய ஐட்டங்கள் என்றால் தக்காளியும் வெங்காயமும்தான் ரொம்ப முக்கியம். தக்காளி சூப்புக்கு கொஞ்சம் ஃப்ரெஷ் தக்காளி, மீதி ‘டொமேட்டோ பியூரி’ என்று சமாளிக்கலாம். ஆனால், அவசியமான மற்ற ஐட்டங்களுக்குத் தக்காளியைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். தக்காளி மொத்த வியாபாரிகளிடம் முன்னதாகவே சொல்லிவைத்து, அதிகாலையிலேயே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆட்களை அனுப்பிவைத்து, தக்காளிக்கு ஏற்பாடு செய்கிறோம். கொஞ்சம் சிக்கனத்தைக் கடைப்பிடித்தும், லாபத்தில் கொஞ்சம் தியாகம் செய்தும் சமாளிக்கிறோம்.’’ .சூரி, உணவக உரிமையாளர்.‘‘தக்காளி விலையேற்றம் பெரிய பிரச்னைதான். எங்கள் உணவகத்தில் சிற்றுண்டி வகைகளுக்கு வாரத்துக்கு நாலைந்து நாட்கள் தக்காளி சட்னி இருக்கும். ஆனால், தக்காளி விலையேறினால் தினமும் தக்காளி சட்னி கட்டுபடியாகுமா? கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி என்று தினம் ஒன்று என வெரைட்டியாகப் போட்டுவிட்டு, தக்காளி சட்னியை ஒரே ஒரு நாள் மட்டும் போடுகிறேன். நல்லவேளை! வெங்காயம் விலை ஏறவில்லை. தக்காளி யோடு, வெங்காயத்தையும் சேர்த்து அரைத்துப் பயன்படுத்துகிறேன். சாம்பார், குழம்பு வகைகளுக்கு தக்காளிக்குப் பதிலாக புளிதான் பயன்படுத்துகிறோம். தக்காளி வரத்து அதிகரித்து, விலை குறைந்தால் பழையபடி செய்து ஜமாய்த்துவிடுவோம்!’’.முரளி,சேவாலயா தொண்டு இல்லங்கள்.‘‘சிறிய குடும்பங்களே தக்காளிப் பிரச்னையை சமாளிக்கத் திணறும்போது, ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் என்று தினமும் சுமார் 750 பேருக்கு நாங்கள் உணவளித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் காய்கறித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நாங்கள் எங்கள் வளாகத்திலேயே இயற்கை விவசாயம் மூலமாக காய்கறிகள் பயிரிடுகிறோம். ஆனால், தக்காளி அவ்வளவு சரியாக வளரவில்லை. இப்போது பயிரிட்டுள்ள தக்காளிகளை இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் அறுவடை செய்து பயன்படுத்த முடியும். இது ஒரு பக்கம் இருக்க, எங்களுடைய தொண்டு இல்லங்களில் தக்காளி பயன்பாட்டை 75% குறைத்து, இப்போது முன்பு பயன்படுத்தியதில் கால் பங்கு தக்காளியைத்தான் மிகவும் சிக்கனமாகப் பயன் படுத்துகிறோம்.’’ .திருப்பதி,நட்சத்திர ஹோட்டல் செஃப்.‘‘சுவை, தரம் என எதிலுமே நாங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே சட்னி வெரைட்டிகளில் தக்காளிக்குப் பதிலாக மற்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். மெனு கார்டில் இடம்பெற்றிருக்கும் ஐட்டங்களில் அவசியமான அளவுக்கு தக்காளி பயன்படுத்து கிறோம்.Buffet வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னரில் நாங்கள் முடிவு செய்வதுதான் மெனு. எனவே, தக்காளி சம்பந்தப்பட்ட ஐட்டங்களைத் தவிர்த்து விடுகிறோம். அதேபோல, இங்கு நடைபெறும் தனியார் நிகழ்ச்சிகளுக்கான மெனுவிலும் தக்காளி ஐட்டங்களைத் தவிர்த்துவிடுகிறோம். புளி, டொமேட்டோ பியூரி ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கிறோம்.’’