16, 17, 18 ஆகிய அத்தியாயங்களை எழுதுகிறார் ராஜசியாமளா பிரகாஷ் முன்கதை சுருக்கம்: மூன்று குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்து வாழும் சுகன்யா, கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறாள். தான் மூன்றாவதாக கருவுற்றதை விரும்பாத கணவன் விஸ்வா, கருவை கலைக்கச் சொல்ல, அவள் மறுக்க, இருவருக்குமிடையே பனிப்போர். புயல் இரவில் மனைவியிடம் சொல்லாமல் தன்னுடைய அம்மா வீட்டில் போய் அவன் தங்கி விட, அவன் கோபம் மனதை வருத்துகிறது. ‘புரிந்து கொள் விஸ்வா’ என்று அவள் மருகிக் கொண்டிருக்கிறாள். இரவு சமையலையும் முடித்துவிட்டு, மாலை பொழுதோடு அம்மா அன்னபூரணி கிளம்பிப் போக, தம்பி கௌதம், ‘‘மாமா வரும் வரை இருக்கேன்கா!’’ என்றுசுகன்யா வீட்டிலேயே தங்கினான்.‘‘கௌதம்... நீயும் கிளம்பு. பாவம் எனக்காக இன்னைக்கு ஆஃபீஸுக்கு லீவு போட்டாச்சு...’’‘‘அட, ஏங்கா... சும்மா இரு... மாமா வரட்டும். கிளம்பிடறேன். நாளைக்கு ஆஃபீஸ் போகத்தானே போறேன்.’’இரவு ஒன்பது மணி வாக்கில் விஸ்வா வந்தான். குழந்தைகள் தூங்கியிருந்தார்கள். கௌதமைப் பார்த்து கடமைக்குச் சிரித்தான்.‘‘வாங்க, மாமா. அக்கா... மாமா வந்தாச்சு! அவரை நீ கவனி. நான் கிளம்பறேன்.’’‘‘சரிடா. பார்த்துப் போயிட்டு வா.’’அவன் கிளம்பிப் போக, அவள், ‘மாப்பிள்ளைக்குப் பிடிக்கும்’ என்று அம்மா செய்து வைத்துப் போயிருந்த பிஸிபேளா பாத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு செய்தாள். ஃபிரெஷப் செய்து கொண்டு விஸ்வா சாப்பிட வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவன் வரும் அரவமே கேட்காததால், படுக்கை அறைக்குப் போய் எட்டிப் பார்த்தாள். குழந்தைகள் அருகே படுத்துக் கொண்டு அவன் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.‘‘சாப்பாடு ரெடி. சாப்பிட வாங்க.’’‘‘நான் சாப்டாச்சு!’’ அவளுடைய முகத்தைப் பார்க்காமல் சொன்னான் அவன்.சுகன்யாவுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. அவள் ஆத்திரத்தோடு எல்லாவற்றையும் அப்படியே மூடிவிட்டு வந்தாள்.‘‘ஏன் இப்படி நடந்துக்கறீங்க?’’‘‘இங்க பாரு... திரும்ப ஆரம்பிக்காதே. உன் இஷ்டப்படிதான் வாழ்வேனு முடிவெடுத்தப் பிறகு இந்தப் பதிபக்தி நாடகமெல்லாம் எதுக்கு? நான் யாரு உனக்கு? அல்ப காசு சம்பாதிக்கும் திமிரு. எல்லா முடிவையும் நீயே எடு... ஆடு... ஆடு... நல்லா ஆடு!’’பொதுவாகவே அவன் தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போய் வந்தால், இரண்டு நாட்களுக்கு சற்று ‘உர்’ என்று இருப்பான். இப்போது வார்த்தைகள் கோரத் தாண்டவம் ஆடுகின்றன.அவள் எதுவும் பேசாமல் விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள். கண்களிலிருந்து ஊற்றாய்க் கண்ணீர் பெருகியது.புயல் கடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், நகரம் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தது..மசக்கையை சமாளித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பிய சுகன்யாவிற்கு, தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை. வாடகை காரும் ஆட்டோவும் கிராஸ் செய்தன. நேரம் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் பார்த்தாலும், விஸ்வா கண்டுகொள்ளாமல் தன்னுடைய போக்கில் காரை ஓட்டிக் கொண்டு கிளம்பிப் போனான்.கடைசியாக ஒரு ஆட்டோ மேலே 50 ரூபாய் பேரம் பேசிக் கொண்டு வர, வாகன நெரிசலில் சிக்கி ஒரு வழியாய் அலுவலகம் வந்து சேர்ந்தாள். அரை மணி நேரம் லேட். மேலதிகாரி பார்வையாலேயே எரித்தார். தலை நிமிர முடியாத அளவு வேலைகள் குமிந்திருந்தன. உடல் அசதியாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் மடமடவென தன்னுடைய வேலைகளை ஆரம்பித்தாள்.பதினொரு மணிவாக்கில் மகளுடைய பள்ளிக்கூடத்திலிருந்து அழைப்பு வந்தது.‘‘மிசஸ் விஸ்வநாதன்... ஒண்ணும் பதட்டப்பட வேண்டாம். உங்க டாட்டர் மதுமிதா விளையாடும்போது கீழே விழுந்துட்டா. ஜஸ்ட், முட்டியில சின்ன சிராய்ப்பு. டாக்டர்கிட்ட காட்டி ரெண்டு தையல் போட்டுட்டோம்.’’‘‘என்னது... தையல் போடும் அளவுக்கு பலமான அடியா?’’‘‘நீங்க பதறும் அளவுக்கு ஒண்ணும் இல்ல, மேடம். ஆனா, குழந்தைக்கு ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுத்தா நல்லதுனு டாக்டர் சொல்றார். வந்து வீட்டுக்குக் கூட்டிப் போங்க.’’அவளுக்கு சப்தநாடியும் ஒடுங்கியது. தண்ணீரைக் குடித்தாள். உடல் நடுங்கியது. கயல் ஓடி வந்து, ‘‘என்னாச்சு சுகன்?’’ என்றாள்.எல்லாவற்றையும் சுகன்யா சொன்னாள்.‘‘போ... போய்... பர்மிஷன் கேட்டுப் போய் மதுவை வீட்டுக்குக் கூட்டிப் போ. நானும் வரட்டுமா?’’‘‘இல்ல கயல், நேத்தும் நான் லீவு. இன்னைக்கு லேட்டா வந்துட்டேன். இப்பப் போயி எப்படி அனுமதி?’’‘‘அப்ப தம்பி, அம்மானு யாரையாவது...’’‘‘தம்பி நேத்தே லீவு, எனக்காக. அம்மாவோ அண்ணன் குழந்தைகளுக்கு மதிய உணவு எடுத்துப்போயிருப்பாங்க.’’‘‘தென்... விஸ்வாவை போகச் சொல்லு...’’அவளுக்கு வேறு வழியில்லை. விஸ்வாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.‘‘மை காட்! குழந்தைக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?’’ என்று பதறியவன், ‘‘உடனே கிளம்பு. அங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன செய்யற?’’ என்றான், அதிகாரமாக.‘‘விஸ்வா... நான் நேத்து லீவு. இன்னைக்கு லேட்டு. இப்போ பர்மிஷன் கிடைப்பது கஷ்டம்.’’‘‘அப்போ குழந்தை? அம்போனு விடப்போறியா?’’‘‘விஸ்வா... ப்ளீஸ்... நீங்க போய்...’’‘‘வ்வாட்? நானா? நான் இங்கஊஞ்சல் ஆடிக்கிட்டு இருக்கேன்னு நினைப்பா உனக்கு? அடுத்த அஞ்சு நிமிஷத்துல பவர் பிரசன்டேஷன், கிளையன்ட் மீட்டிங்னு ரொம்ப பிஸி ஷெட்யூல். உன்னை மாதிரி ஒண்ணரை அணா வேலை இல்லை எனக்கு. உடனே குழந்தை ஸ்கூலுக்குக் கிளம்பு. இதுல மட்டும் ஏதாவது தப்பு நடந்தா, அப்புறம் நான் நானா இருக்க மாட்டேன், சொல்லிட்டேன். உன்னோட அதிகாரத்தை இத்தோடு விட்டுட்டு என் பேச்சைக் கேளு. உடனே கிளம்பு...’’ கைபேசியை பட்டென அணைத்தான்.அவன் பேசப் பேச அவள் முகம் சுண்டியது. உடல் நலமின்மை, குழந்தை பற்றிய கவலை, இதில் அவனுடைய வார்த்தை அமிலம் சேர, சட்டென கண்களில் கண்ணீர் முட்டியது. இமைகளை படபடத்து அடக்கினாள்.கணவனே புரிந்து கொள்ளாதபோது, மேலதிகாரிதான் புரிந்து கொள்ளப்போகிறாரா என்ன?எடுத்தவுடன் கத்தினார், ‘‘நீங்க எல்லாம் எதுக்கும்மா வேலைக்கு வர்றீங்க? நேத்து லீவு. இன்னைக்கு காலையில லேட்டு. இப்போ பர்மிஷன். இன்னும் மாசம் ஆக ஆக, விடுப்பு கேட்க ஆயிரம் காரணங்கள் வரும். இதில், ஆண்களுக்கு சமம்னு பேச வேண்டியது. வீட்ல வேற யாரும் இல்லையா குழந்தையைக் கூட்டி வர? மாமனார்? மாமியார்?’’அவள் மௌனமாகத் தலை ஆட்டினாள்..‘‘எல்லாம் என் உயிரை வாங்க வேண்டியது. எல்லா ஃபைலும் பென்டிங். எப்போ கிளியர் செய்யப் போறீங்க? போங்க... ஒரேயடியா வேலையை விட்டுப் போங்க. நிம்மதி.’’அவள் மௌனமாகத் தன்னுடைய இடத்திற்கு வந்து ஹேண்ட்பேக்கை எடுத்துக் கொண்டாள். கண்களால் கயலிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள். ஆட்டோ பிடித்தாள். முட்டிய கண்ணீரை அடக்கினாள்.‘ச்சீ... சுகன், என்னாச்சு உனக்கு? எதுக்கு தொட்டதுக்கெல்லாம் அழுகை வரணும் உனக்கு? உடம்பு கொஞ்சம் பலவீனமா இருக்கு. மனசு சட்டுனு உடையுது. பீ ஸ்ட்ராங். இவங்க குற்றச்சாட்டெல்லாம் சரியா இருந்தா, ஐயோ தப்பு செஞ்சுட்டோமேனு அழலாம். இல்லையே! நம்ம செயலில் தப்பில்லை. இவங்க கண்ணோட்டம்தான் தப்பு.ரெண்டு கிலோ எடையை வயித்தில் சுமந்துக்கிட்டு இந்த ஆண்களால் நாலு நாள் நடமாட முடியுமா? பிரசவ வலியைத் தாங்க முடியுமா? அதான் தாய்மைப்பேறை இவங்களுக்குக் கடவுள் கொடுக்கலை!எல்லாத்துக்கும் பெண்களைக் குத்தம் சொல்லி கத்தத் தெரியும். தன்னோட அதிகாரத்தை நிலைநாட்டத் தெரியும். அவ்வளவுதான். இதுக்கு நீ ஏன் கலங்கற?’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். மனம் சற்று லேசானது.பள்ளிக்கூடத்தில் குழந்தை துவண்டு போய்ப் படுத்திருந்தாள். ஆசிரியர் சொன்னது போல், அடி பலமாக இல்லை. பயம்தான் அதிகம் இருந்தது. இவளைப் பார்த்தவுடன் பாய்ந்து வந்து கட்டிக் கொண்டாள் மதுமிதா.ஆட்டோவில் ஏறி தன்னுடைய அம்மா வீட்டு விலாசம் சொல்ல, ‘‘பாட்டி வீட்டுக்குப் போக வேண்டாம். நாம நம்ம வீட்டுக்குப் போகலாம். நீ இன்னைக்கு என் கூடவே இரு. ஆஃபீஸ் போக வேண்டாம்!’’ என்று அவள், அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஒரே அழுகை. ஆட்டோவைத் தன் வீட்டுக்கே போகச் சொன்னாள் சுகன்யா.அவள் குழந்தையை சமாதானம் செய்து அவள் அருகிலேயே படுத்துக் கொண்டாள்.‘‘நான் தூங்கினப்புறம் நீ ஆஃபீஸ் போயிடுவியா?’’‘‘இல்லடா. அம்மா உன்னைத் தனியா விட்டுட்டு எப்படிப் போவேன்?’’‘‘அப்போ நீ ப்ராமிசா போக மாட்டதானே?’’‘‘ப்ராமிஸ்.’’குழந்தை நிம்மதியாகத் தூங்கினாள். கைபேசியை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்த சுகன்யா, கயலை அழைத்தாள்.‘‘கயல்... நான் பர்மிஷன்தான் போட்டேன். குழந்தை விட மாட்டேங்கறா. லீவு சொல்லிடேன்.’’ஒரு நொடி மௌனித்த கயல், ‘‘சரி’’ என்றாள். பிறகு தொடர்ச்சியாக, ‘‘அம்மாவைக் கூப்பிட்டு, உங்க வீட்ல வந்து இருக்கச் சொல்லிட்டு வர முடியாதா? நாளைக்கு நீதான் வாங்கிக் கட்டிப்ப. உன் முகத்தைப் பார்க்கவே முடியலை.’’‘‘இல்ல கயல். அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்தறேன். நாளைக்கு பேப்பர் போட்டுடலாம்னு இருக்கேன்.’’‘‘என்ன? வேலையை ராஜினாமா செய்யப் போறியா? என்னாச்சு சுகன் உனக்கு? இன்னும் ரெண்டு வாரத்தில் எப்படியும் மெடெர்னிட்டி லீவு எடுக்கப் போற. ஏன் இந்த அவசர முடிவு?’’‘‘அவசர முடிவு இல்லை... அவசிய முடிவு!’’ (குடை மனசு விரியும்) -ராஜசியாமளா பிரகாஷ்.பரிசு ரூ.100/-ஆனந்த மழையில் நனைகிறோம்!‘‘ஒரு தொடர்கதையை பல எழுத்தாளர்களை இணைத்து எழுதவைப்பது புதிய முயற்சி! வித்தியாசமான காதல் கதை என்பது தொடர் ஓட்டத்தில் புரிகிறது. எழுத்து நடையும் சிறப்பாக உள்ளது. ஒரு பெண், காதலில் அவ்வளவு சீக்கிரம் விழமாட்டாள். அப்படி விழுந்தால் எப்படித் தவிப்பாள் என்பதை சுகன்யா கதாபாத்திரம் தெளிவாகக் காட்டுகிறது. காதலை முதலில் கண்மூடித்தனமாக புறக்கணித்த சுகன்யா, பிறகு காதலோடு விஸ்வாவைத் தேடும்போது பாத்திரச் சிறப்பு மேம்பட்டது. சுகன்யாவின் Ôமழைக் கவிதை’ உள்பட அவ்வப்போது ஆனந்த மழையில் நனைகிறோம் நாங்கள்!’’- இந்திரா கோபாலன், ஸ்ரீரங்கம்.சிநேகிதிகளே... ‘தாழங்குடை’ தொடர்கதை பற்றிய உங்களுடைய விமர்சனங்களை சுருக்கமாக எழுதி, உங்கள் போட்டோவுடன் அனுப்பலாம்!