Snegiti
ஒருசிறந்த மனுஷியின் கதை! -சிவசங்கரி நேர்காணல்
அவரது எழுத்தைப் போலவே நேர்த்தியான வீடு. தஞ்சை ஓவியங்களும் ஐம்பொன் சிலைகளுமாய் வீடு முழுவதும் இறையம்சம் நிறைந்திருக்க, அங்கங்கே சற்றே பெரிய படமாய் ‘இந்த இல்லத்தில் இவள் ஆட்சிதான்’ என்பதுபோல் சரஸ்வதியின் படமே பிரதானமாய் ஜொலிக்கிறது. கூரை எட்டும் ஷெல்ஃபுகளில் புத்தகங்களின் அணிவரிசை.