அம்மு: சம்மர் சேலை வாங்கப்போனியே... வாங்கினியா?பொம்மு: நான் கேட்ட டிஸைன் எந்தக் கடையிலயுமே இல்லடி!அம்மு: அப்படி என்ன டிஸைன்டி அது?பொம்மு: சம்மருக்கு பொருத்தமா தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், கிர்ணிப்பழம் உருவங்கள் பிரின்ட் பண்ண மாதிரியான புடவையைத்தான் தேடினேன்டி. அப்படியொரு புடவையை கட்டிக்கிட்டா சம்மர்ல உடம்பு நல்லா குளுகுளுன்னு இருக்கும்ல!அம்மு: உன்னை போல மூளை யாருக்குடி வரும்?- ஜனனி விஜய், காகிதபுரம். அம்மு: இப்போலாம் நான் என் வீட்டுக்காருகூட வேணும்னே சண்டை போடறேன்... ஏன் சொல்லு?பொம்மு: அப்பத்தான் உனக்கு ஏதாவது வாங்கித் தந்து சமாதானப்படுத்துவாரு... அப்படித்தானே?அம்மு: இல்லடி... அப்போதான் நான் சமைக்கமாட்டேன்னு தகராறு பண்ணி, பெட்ரூம்ல போயி ஏ.சி.யை போட்டுக்கிட்டு ஹாயா உட்கார்ந்துக்கலாம்!பொம்மு: ஆமாடி... வெயில் தாங்க முடில!- உமா சுந்தர், ஸ்ரீரங்கம். ‘‘எங்க வீட்ல கிரைண்டரும் வாஷிங் மெஷினும் ரிப்பேர் ஆகிடுச்சு.’’‘‘உன் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லைன்னு நேராவே சொல்ல வேண்டியதுதானே?’’- எச். சீதாலக்ஷ்மி, கேரளா. வெளுத்துக்கட்டு! சாப்பிட வந்தவர்: ‘‘இன்னிக்கு எங்க மாமாவுக்கு கட்டுப் பிரிக்கிறாங்க.’’சர்வர்: ‘‘கட்டுப் பிரிக்க வந்துட்டு இந்தக் கட்டுக் கட்டுறீங்களே சார்!’’- எஸ். நிரஞ்சனி, போரூர். சிநேகிதிகளே... புன்னகைப் பக்கத்திற்கு நீங்களும்கூட ஜோக்ஸ் எழுதி அனுப்பலாம்!அனுப்ப வேண்டிய முகவரி: புன்னகைப் பக்கம், குமுதம் சிநேகிதி, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010. E-mail: snehidhi@kumudam.com