- ஆர்.லதாஇந்திய ரயில்வே வாரியத் தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார் ஜெயா வெர்மா சின்ஹா. இந்திய ரயில்வேயின் 166 ஆண்டு கால நீண்ட நெடிய வரலாற்றில் ரயில்வே வாரிய தலைமைச் செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ள முதல் பெண் இவர்தான்!.1963ஆம் ஆண்டு பிறந்த ஜெயா, 1986ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்தவர். உத்தரப்பிரதேச மாநிலத்திலிருக்கும் ‘பிரயாக்ராஜ்’ எனுமிடத்திலுள்ள செயின்ட் மேரி’ஸ் கான்வென்ட் இன்டர் கல்லூரியில் கல்வி பயின்றார். அதன் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.மத்திய அரசு தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சரவையின் ‘அப்பாயின்மென்ட்ஸ் கமிட்டி’யானது இவருக்கான பதவி உத்தரவை கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியன்று பிறப்பித்தது. ஜெயாவின் பணிக்காலம் இந்த வருடம் அக்டோபரில் முடிவடைய இருந்த நேரத்தில், இந்தப் புதிய பதவி வழங்கப்பட்டிருக்கிறது..கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியன்று இவர் இந்தப் பொறுப்பை, ரயில் பவன் அலுவலகத்தில் ஏற்றிருக்கிறார். ரயில்வேயின் 166 வருடப் பாரம்பரியத்தில் பெண் ஒருவர் இந்த உச்சப் பதவியை எட்டியிருப்பது இதுவே முதல் முறை! அடுத்த வருடம் (2024) ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஜெயா இந்தப் பதவியில் நீடிப்பார். இந்திய ரயில்வே துறையில் மிக அதிகமாக மாத ஊதியம் பெறும் பதவி இது. சுமார் 2,50,000 ரூபாய் இவருக்கு மாத ஊதியமாகக் கிடைக்கும்!இந்திய ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து மற்றும் பயணிகள் சேவைகளின் ஒட்டு மொத்தப் பொறுப்பு தற்போது இவர் வசம் வந்துள்ளது. இதற்கு முன்னர் 4 ஆண்டுகள் ரயில்வே ஆலோசகராக பங்களாதேஷ் நாட்டுத் தலைநகரான டாக்காவில் இருக்கும் இந்திய ஹை கமிஷனில் பணியாற்றியிருக்கிறார்.1988ஆம் ஆண்டு ‘இண்டியன் ரயில்வே ட்ராஃபிக் சர்வீசஸ்’ (Indian Railway Traffic Service - IRTS) தேர்வில் வெற்றிபெற்று ரயில்வே துறையில் நுழைந்திருக்கிறார். இந்தத் தேர்வில் மிக நல்ல ரேங்க் எடுத்தும், IRTS பிரிவையே ஜெயா தேர்ந்தெடுத்தார். அப்போது பெண்கள் பலரும் தேர்ந்தெடுக்கத் தயங்கிய துறை இது. பயிற்சி முடிந்ததும் கோட்ட வணிக மேலாளராக வடக்கு ரயில்வேயின் அலஹாபாத் கோட்டத்தில் தம்முடைய பணியைத் துவங்கியுள்ளார்..பிறகு இவர், தென்கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு ரயில்வே ஆகியனவற்றில் பணிபுரிந்திருக்கிறார். 35 ஆண்டு காலம் ரயில்வே துறையில் திறம்பட சேவையாற்றிய ஜெயா, ரயில்வேயின் வணிகம், தகவல் தொழில்நுட்பம், விஜிலன்ஸ் எனப் பல பிரிவுகளிலும் பணியாற்றிய அனுபவமிக்கவர்!2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொல்கத்தாவிலிருந்து டாக்காவுக்கு புகழ்பெற்ற ‘மைத்ரி எக்ஸ்பிரஸ்’ இயக்கப்பட்டது இவருடைய பணிக்காலத்தில்தான்.ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் (CRIS) சிறப்பாகப் பணியாற்றியபோது பெரிதும் பாராட்டப்பட்டார். அத்தோடு சரக்கு இயக்கத் தகவல் அமைப்பிலும் இவர் கடுமையாக உழைத்துள்ளார்..ரயில்வே வாரியத்தின் ஆபரேஷன்ஸ் மற்றும் பிசினஸ் டெவெலப்மென்ட் பிரிவின் உறுப்பினராக கடந்த பிப்ரவரியில் பணியாற்றியிருக்கிறார். இதற்கு முன்னர் ட்ராஃபிக் பிரிவின் கூடுதல் உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. சியால்டா கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.தென்கிழக்கு ரயில்வேயின் முதன்மைத் தலைமை ஆபரேஷன்ஸ் மேலாளர் என்ற பதவியை வகித்த முதல் பெண்ணும் இவரே!கடந்த ஜூன் மாதம் ஒடிசாவில் 275 உயிர்களைப் பலிவாங்கிய கோர விபத்தின்போது திறம்பட நிலைமைகளைச் சமாளித்து, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தார். சிக்கலான சிக்னல் முறைகளை எளிதில் புரியும் வண்ணம் செய்தியாளர்களிடம் இவர் விளக்கியதால் மிகவும் பிரபலமானார்.இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பு இவருடைய திறமைக்குக் கிடைத்த உரிய அங்கீகாரம். தவிர, பாலின வேறுபாடு இல்லாமல் பெண்களும் மிக உயர் பதவியில் ஜொலிக்கலாம் என்பதையே இவருக்குக் கிடைத்திருக்கும் உச்சப் பதவி உணர்த்துகிறது..இவர் பதவியேற்றிருக்கும் காலம் இந்திய ரயில்வே நவீனப்படுத்தப்படும் யுகமாகும். புதிய வழித்தடங்கள் அமைப்பு, ரயில் நிலையங்கள் சீரமைப்பு, ‘வந்தே பாரத்’ ரயில்களின் இயக்கம் மற்றும் புல்லட் ரயிலுக்கான ஆயத்தப் பணிகள் போன்றவை வேகமெடுத்திருக்கும் காலம். இவற்றோடு பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கான முன்னுரிமையும் மிக முக்கியமாகத் தேவைப்படும் காலமிது. இவற்றையெல்லாம் ஜெயா வெர்மா சின்ஹா, மிகச் சிறப்பாக எதிர்கொண்டு கையாள்வார் என நம்புவோம்.