Snegiti
தாழங்குடை: பத்திரிகை உலகில் புதுமையான தொடர்கதை!
விஸ்வத்தின் காதலை சுகன்யா அலட்சியப்படுத்த, கல்லூரிக்கு அவன் வராமல் போகிறான். அதனால் விஸ்வத்தை நினைத்து வருந்தும் சுகன்யா, அவனை உதாசீனப்படுத்தியது தவறு என நினைக்கிறாள். அவளுடைய சிநேகிதியும் விஸ்வத்தின் நல்ல இயல்புகளை எடுத்துச் சொல்ல, மனம் மாறுகிறாள். கல்லூரி விழாவில் அவனையே நினைத்தபடி அமர்ந்திருந்தவளின் எதிரே மேடையில் தோன்றி காதல் பாடல் பாடி, அவளுக்குள் காதலை பொங்கவைக்கிறான். பதிலுக்கு இவள் படிக்கும் கவிதையால் இருவருக்குள் காதல் மலர்கிறது!