-அன்புவேலாயுதம்ஆசிரியர் பணியில் தம்மை அர்ப்பணித்து சிறப்பாக செயலாற்றுபவர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ‘ஆசிரியர்கள் தின’த்தன்று ‘நல்லாசிரியர் விருது’ வழங்கி கௌரவிக்கிறது தமிழக அரசு. அப்படி நல்லாசிரியர் விருது பெற்ற நால்வரின் அறிமுகம் இங்கே....ஒய்.எம்.சுமதி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருத்தணி.‘‘நான் 35 ஆண்டுகளாக ஆசிரியர் பணியாற்றி வருகிறேன். பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி இருந்தாலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதை என் வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். பிற பள்ளிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு நான் பணியாற்றியி ருந்தாலும், விருது மீது ஏனோ எனக்கு கவனம் போகவில்லை. ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் தற்போது நாம் பணியாற்றுவதால், அவர் பெயரில் வழங்கப்படும் விருதுக்கு ஏன் விண்ணப்பிக்க கூடாது?’ என்று தோன்றியது. பல ஆசிரியர்களும் அதையே சொன்னார்கள். நான் இப்பள்ளியில் ஆசிரியர் பொறுப்பேற்றபோது 260 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையை 320 ஆக உயர்த்தியுள்ளேன். அவர்களுக்கு மாலை வகுப்பு எடுத்தல், நீதிக் கதைகள், தன்னம்பிக்கையூட்டும் கதைகள் சொல்லி உற்சாகமூட்டி, படிப்பின் மீது ஆர்வத்தை அதிகப்படுத்தினேன். பள்ளியில் அனைத்து சுவர்களிலும் தேசத் தலைவர்கள், விஞ்ஞானிகளின் உருவங்களை ஓவியமாக தீட்டியுள்ளேன். முக்கியமான மூலிகை செடிகளை நட்டு, அதன் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன். மாணவர்களின் பெற்றோர் - ஆசிரியர் நட்பை வளர்த்தது என என்னுடைய சீரிய பணிகளை குறிப்பிட்டு விண்ணப்பித்தேன். தமிழக அரசு எனக்கு ‘நல்லாசிரியர் விருது’ அளித்து கௌரவித்தது.’’.கே.எம்.பரணிதரன், வேதியியல் முதுகலை ஆசிரியர், அருங்குளம்.‘‘2003ல் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநராக பணியில் சேர்ந்தேன். 2007ல் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். கடந்த 20 ஆண்டுகளாக ஆசிரியர் பணியை இதயப்பூர்வமாக செய்து வருகிறேன். தொடர்ந்து 95 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி பெற வைத்தது, பதினோராம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் அதிக மாணவர்களை சேர்த்தது என என்னுடைய ஆசிரியர் பணியை செவ்வனே செய்து வருகிறேன். அதேபோல் இடை நிற்றல் இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்ச்சி அடையச் செய்வதுடன், தமிழ் வழி மாணவர்கள் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தயக்கமின்றி கலந்து கொண்டு தேர்ச்சி அடைய தனி வகுப்புகளும் எடுத்து வருகிறேன். இவற்றையெல்லாம் முன்னிறுத்தி விண்ணப்பித்தேன். அரசும் அதை அங்கீகரித்து, எனக்கு விருது அளித்தது. மேலும் உற்சாகமாய் மாணவர்களை தயார்ப்படுத்தி வருகிறேன்!’’.ஆர்.எம்.இலதா, பட்டதாரி தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அம்மனேரி.‘‘1988ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். தற்போது 35 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், எவ்வித சலிப்போ சோர்வோ இல்லாமல் இன்று வரை உற்சாகமாக பள்ளிக்குச் செல்கிறேன். காரணம், என்னுடைய தந்தையார் முருகன் ஆசிரியராக இருந்தவர். என்னுடைய மாமனார் ச.மு.அவிநாசி அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். என்னுடைய கணவர் அன்பழகன் மூத்த பத்திரிகை யாளர். இவர்கள் மூவரும் எனக்குக் கொடுத்த நம்பிக்கை என்னை இன்னமும் உற்சாகமாய் வைத்திருக்கிறது. பள்ளியில் மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பாமல், உரிய மருத்துவரிடம் அழைத்து போக செய்வேன். அனைவரையும் தவறாமல் சத்துணவு சாப்பிட வைப்பேன். ஒரு மாணவன் ஒரு நாள் பள்ளிக்கு வராவிட்டாலும் அவருடைய வீட்டினரை தொடர்பு கொண்டு காரணம் கேட்டு அறிவுரைகள் சொல்வேன். தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறேன். எல்லாவற்றையும்விட பல குடும்பங்களில் முதல் பட்டதாரிகளை உருவாக்கியுள்ளேன். இந்தப் பணிகளை முன்வைத்து விண்ணப்பித்தேன். அரசும் விருது அளித்து என்னை ஊக்குவித்துள்ளது.’.மே.மு.மாதவன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அத்திமாஞ்சேரி பேட்டை.‘‘நான் 2000ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். மாணவர்களுக்கு வெறுமனே பாடப் புத்தகங்களிலுள்ள விஷயங்களை மட்டும் போதிப்பதில்லை. நூலகங்களுக்குச் சென்று பல்வேறு நூல்களை படித்து, அவற்றிலுள்ள அற்புதமான கருத்துகளை குறிப்பெடுத்து வந்து மாணவர்களிடம் சொல்லி உற்சாகப்படுத்துவேன். இப்படி நான் குறிப்பெடுத்து வைத்திருக்கும் நோட்டு புத்தகங்கள் பல நூறு இருக்கின்றன. அதேபோல் ‘தந்தையர் தினம்’, ‘ரத்த தான தினம்’, ‘ஆசிரியர்கள் தினம்’ உள்படஎல்லா சிறப்பு தினங்கள் பற்றியும் காலை இறை வணக்கத்தின்போது மாணவர்களிடம் சில நிமிடங்கள் உரையாற்றுவேன்.இயற்கை உணவு, சமுதாய அக்கறை போன்றவற்றை ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு வகுப்பு இடைவேளையின்போது சில நிமிடங்கள் பேசி, மாணவர்களிடம் விழிப்பு உணர்வூட்டுவேன்.‘திருவள்ளுவர் இலக்கிய மன்றம்’ ஒன்றை அமைத்துள்ளேன். அதன் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து, பரிசளித்து ஊக்கப்படுத்தி வருகிறேன். ‘ஆசிரியர் பணி அறப்பணி’ என்பதை உணர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்தச் சிறப்புகளையெல்லாம் பட்டியலிட்டு விருதுக்கு விண்ணப்பித்தேன். அரசும் விருது வழங்கி என்னை கௌரவித்துள்ளது.’’