- அன்புவேலாயுதம்‘நானிலம் போற்றும் நல்லாசிரியர்’ என்று போற்றிப் புகழப்படுவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். கல்விக்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. ‘பாரத ரத்னா’ உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர். இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராகவும் ஜொலித்துள்ளார்..டாக்டர் ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர், திருத்தணிக்கு அருகிலுள்ள சர்வபள்ளியாகும். இவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியையே ஒவ்வொரு ஆண்டும் ‘ஆசிரியர்கள் தின’மாக நாம் கொண்டாடி வருகிறோம்.சர்வபள்ளி ராதா கிருஷ்ணனை பற்றி, தான் படித்து வியந்த வரலாற்றை ‘குமுதம் சிநேகிதி’ வாசகிகளுக்காக பகிர் ந்து கொள்கிறார், திருத்தணி நகர மன்றத் தலைவி சரஸ்வதி பூபதி.‘‘ராதா கிருஷ்ணன் அவர்கள் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணியில் உள்ள சர்வபள்ளி (வெங்கடாபுரம்) என்ற சிறிய கிராமத்தில்தான் பிறந்தார். எம்.ஏ., படிப்பில் தத்துவத்தையே சிறப்புப் பாடமாக எடுத்து படித்தார்..கல்லூரியில் அவர் இந்து மத இலக்கிய தத்துவங்கள், பகவத் கீதை, ராமானுஜர், மாதவர் உள்ளிட்டோரின் வர்ணனைகளும், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்கள் பிளேட்டோ, ப்லோடினஸ், பிராட்லி, பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய ‘இந்திய தத்துவம்’ எனும் நூல் பாரம்பரிய தத்துவம் மற்றும் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாக போற்றப்பட்டது. அதனால்தான், மைசூரு, கொல்கத்தா பல்கலைக்கழகங்கள் இவரை தத்துவ பேராசிரியராக நியமித்தன. ஆந்திரா, பெனாரஸ் இந்துமத பல்கலைக்கழகங்களில் இவர் துணை வேந்தராக பணியாற்றியுள்ளார். 1946ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.1948ல் இந்திய கல்வி முறையின் தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறப்பான கல்வித்திட்டத்தை வடிவமைக்கவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைந்த கல்விக்குழுவின் பரிந்துரைகள் பெரிதும் போற்றி வரவேற்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 1949ஆம் ஆண்டு சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகுதான் இந்திய, சோவியத் யூனியனுக்கு பெரும் நல்லுறவு அமைந்தது என்றே சொல்லலாம். அதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் 1952ல் இந்தியாவின் முதல் ‘துணை குடியரசுத் தலைவராக’ தேர்ந்தெடுக்கப்பட்டார்..‘துணை ஜனாதிபதி’ என்று இந்தியாவின் உயர் பதவி வகித்தாலும் ஆசிரியர் பணியை அவர் கைவிடவில்லை. அவ்வப்போது மாணவர்களுக்கு தத்துவங்களையும் வேதாந்தத்தையும் போதித்த வண்ணம் இருந்தார். அவருடைய கல்விப்பணியை பாராட்டி, 1954ல் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.பின்னர் தமது கடின உழைப்பால் 1962 மே 13 முதல் 1967 மே 13 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக விளங்கினார். அப்பொழுதுதான் சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இந்தியா யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த நடவடிக்கைகள் இந்திய நாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவியது என்றால் அது மிகையல்ல. ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைத்தான் இந்தியாவில் நாம் ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடி வருகிறோம்.இந்திரா காந்தி அவர்கள் பாரத பிரதமராக பதவி ஏற்றபோது அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்தான். அவருடைய அரும்பெரும் பணிகளை கௌரவித்து, அவருடைய உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது மத்திய அரசு..1967ல் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னையில் குடியேறினார். இவர் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் தம்முடைய 86வது வயதில் அமரரானார். ஆசிரியர் மற்றும் நூலாசிரியர், எழுத்தாளர், சிந்தனையாளர், பேச்சாளர், அயல்நாட்டு தூதுவர், அரசியல்வாதி, ஜனாதிபதி, சீர்திருத்தவாதி, வழிகாட்டி... மொத்தத்தில் அவர் மாபெரும் மனிதராக உயரிய உன்னதராக நம்முடன் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!’’.ரயில் நிலையத்தில் சிலை!திருத்தணி அடுத்த வெங்கடாபுரத்தில் ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்று வரை அங்கு அன்னாருக்கு சிலை ஏதும் அமைக்கப்படவில்லை. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அவருக்கு சிலைவைக்க வேண்டுமென நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வந்தார்கள். திருத்தணி ரயில் நிலையத்தில் அன்னாரின் திருவுருவச்சிலை வெகு விரைவிலேயே அமையவிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்!