ஒவ்வொரு வாசகிக்கும்பரிசு ரூ.200/-காபி மீது தங்களுக்கு இருக்கும் காதல் பற்றிய வாசகிகளின் அனுபவங்கள் சென்ற இதழில் இடம்பெற்றது. தேநீர் மீதுள்ள காதல் பற்றி வாசகிகள் அனுப்பியிருந்த அனுபவங்களில் சிறப்பானவை மட்டும் இங்கே...வாசனை ஊரைக் கூட்டும்! என்னுடைய பிறந்த வீட்டில் 40 வருடங்களுக்கு முன்பாக யாருமே தேநீர் குடிக்கமாட்டோம். ஆனால், புகுந்த வீட்டிலோ, ‘காலையில் எழுந்ததும் தேநீர் குடித்தால்தான் புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் வரும்’ என்பார்கள். ‘நமக்கு தேநீர் போடக்கூட தெரியவில்லையே?’ என்று வருந்திய நான், பிறகு பல விதங்களில் தேநீர் போட கற்றுக் கொண்டேன். இதன் காரண மாகத்தான் தேநீர் மீது எனக்கு காதல் அதிகமானது. குழந்தைகளுக்கு சாக்லெட் தேநீர், ஐஸ் தேநீர், பட்டர் தேநீர் போட்டுத் தருவேன்.‘தேநீர் குடிப்பது மருத்துவ ரீதியாகவும் பல நன்மைகளைத் தருகிறது’ என்பதைத் தெரிந்துகொண்டேன். எங்கள் வீட்டில் யாராவது தலைவலி, செரிமானம் ஆகவில்லை என்று கூறினால், உடனே புதினா டீயோ இஞ்சி டீயோ தயாரித்துத் தருவேன். இளமையாக இருக்க, புத்துணர்ச்சி பெற பிளாக் டீ, கிரீன் டீ நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு செம்பருத்தி தேநீர் உகந்தது. காய்ச்சல், உடல்வலி என்றால் அஸ்வதந்தா தேநீர் அருமருந்து. கோடைகாலத்தில், எலுமிச்சம்பழமும் தேனும் கலந்து தேநீர் தயாரித்துத் தருவேன்.மாலையில் டிபனுடன் மசாலா தேநீர் போட்டு, அந்த தேநீரை டீ கடையில் ஆற்றுவது போல் தூக்கி, கெத்தாக ஆற்றி, கப்பில் ஊற்றினால், நுரை பொங்கி வரும். அதை அப்படியே பரிமாறும்போது, ‘டீ எக்ஸ்பர்ட்’ என்ற கௌரவம் எனக்குக் கிடைக்கும்! ஊட்டி, மூணாறு தேயிலை எஸ்டேட்டிலிருந்து நேரடியாக நாங்கள் தேயிலை வாங்குகிறோம். அப்படி வாங்கிய தரமான பச்சை தேயிலை இலைகளைப் போட்டு தேநீர் தயாரிப்பதால் வாசனை ஊரைக் கூட்டும். சுவையும் வேற லெவலில் இருக்கும்!- அனுராதா ரவீந்திரன், ஸ்ரீரங்கம்..மசாலா தேநீரால் கிடைத்த பாராட்டு!எனக்கு சிறு வயதிலிருந்தே காபி, டீ குடித்து பழக்கமில்லை. இன்ஜினியரிங் முடித்து, சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைக்க, அடிக்கடி பிராஜெக்ட் ஒர்க் காரணமாக கலிஃபோர்னியா சென்றபோது, குளிர்காலமாக இருந்ததால் ‘க்ரீன் டீ’ குடித்து பழக்கமாகிவிட்டது. திருமணத்திற்கு முன்பு, நான் 80 கிலோ இருந்தேன். உடல் எடையைக் குறைக்கவும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு வந்தவுடன், உடல் சோர்வை போக்குவதற்காகவும் ‘க்ரீன் டீ’ பருகுவேன். இப்பொழுது உடல் எடை 20 கிலோ வரை குறைந்துள்ளது. தொடர்ந்து க்ரீன் டீ அருந்தி வருகிறேன்.திருமணமான புதிதில் என்னுடைய மாமனார், மாமியார் சென்னைக்கு வந்தபோது, இஞ்சி, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் என எல்லாவற்றையும் இடித்துப் போட்டு, அவர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்தேன். ‘‘எங்களுக்கு தேநீர் குடித்துப் பழக்கமில்லை. இருந்தாலும் குடித்துப் பார்க்கிறோம்’’ என்று கூறி, குடித்துவிட்டு, ‘‘ரொம்பவே நன்றாக இருந்தது’’ என்று பாராட்டினார்கள்.- பூர்ணிமா கிருஷ்ணன், சென்னை-98.. பசுமையான அந்த நிகழ்வு!பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருந்தது. நான், சொல்லில் அடங்காத பதற்றத்துடன், இரு குடும்பத்தாரும் சூழ்ந்த கூட்டத்துக்கிடையே, கையில் கோப்பைகளுடன் வந்து நின்று ‘‘வணக்கம்’’ என்றேன்.ஒரு பெரியவர், “என்னம்மா, காபியா?’’என் பின்னாலிருந்த உறவினர், “இல்லை, தேநீர்தான்’’ என்றார்.“ஓகோ, ‘Taste and Enjoy the Aroma’ போல!’’ மாப்பிள்ளை வீட்டாரில் ஒருவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.அதற்குள் அவர் பின்னாலிருந்த மற்றொருவர், “அரோமாவை நாக்கு வழி மட்டுமல்லாது ஐம்புலனாலும் தரக்கூடிய ஒரு உருவம்தான், அந்த அரோமாவை எடுத்து வருகிறார்’’ என்று விவரித்துச் சொன்னார்.உடனே அங்கிருந்த தமிழறிந்த பெருமகனார் ஒருவர்,‘கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள’ என்று மேற்படி கருத்தைக் கொண்ட குறளை ஒப்புவித்து, கருத்தையும் கூற, அனைவரும் ‘கொல்’லென்று சிரித்தனர். ‘கண்ணால் கண்டும், காதால் கேட்டும், வாயால் சுவைத்தும், மூக்கால் நுகர்ந்தும், உடலால் தொட்டறிந்தும் நுகரும் ஐம்புலனும் இந்தப் பெண்ணிடத்தில் உண்டு’ என்பதே அந்தக் குறளின் கருத்து. பதினைந்து வருடங்கள் கடந்தாலும் அந்தச் சம்பவம் இப்போதும் என் நினைவில் பசுமையாக உள்ளது!-கே. பானுமதி, குரோம்பேட்டை..உடல் வலிக்கு மிளகு தேநீர்!எனக்கு தேநீரை அறிமுகப்படுத்தியதே என்னுடைய அண்ணன்தான். ஒருமுறை ருசி பார்த்தவுடன் எனக்கு அந்தச் சுவை மிகவும் பிடித்துவிட்டது. எங்கள் வீட்டில் என்னைத் தவிர எல்லோருமே காபி பிரியர்கள்தான். ஆனால், தேநீர் தயாரிப்பது காபி போடுவதை விடவும் எளிது. சூடாக துளித்துளியாக ரசித்து ருசித்துச் சாப்பிட்டால் அதன் ருசியே அலாதிதான்!எனக்குத் திருமணம் நிச்சயமானபோது என் அம்மா என்னைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். நான் காலை 4 மணிக்கும் மதியம் 1 மணிக்கும் தேநீர் குடித்துவிடுவேன். இதை நிச்சயதார்த்த சமயம் என் மாமியார் வீட்டில் சொன்னபோது, ‘‘இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எங்கள் வீட்டிலும் காலை 4 மணிக்கே எழுந்துவிடுவோம். மதியம் 12 மணிக்கே காபி குடித்துவிடுவோம். எங்கள் மருமகளுக்கு டீ பவுடர் வாங்கி வைத்துவிட்டால் போயிற்று. நிச்சயமாக அவளுக்கு டீ போட்டுக் கொடுத்துவிடுவோம்’’ என்றார்களாம். சொன்னபடியே செய்தார்கள்!‘‘நாங்கள் காபி குடிப்பதால் எங்கு சென்றாலும் காபி கிடைக்கும். உனக்கு தேநீர் குடிக்கும் பழக்கமிருப்பதால்தான் சிரமப்படுகிறாய். அதனால் டீக்குப் பதிலாக காபிக்கு மாறிவிடு’’ என்று சொல்லும் என் கணவர், எங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே காபியை பழக்கப்படுத்திவிட்டார். நான் விதவிதமாக தேநீர் போடுவேன். அதிலும் மிளகுப்பொடி கலந்து சாப்பிட சுவை அள்ளும். தொண்டை வலி, உடம்பு வலி இருந்தாலும் பஞ்சாய்ப் பறந்துவிடும்!- ராஜி குருஸ்வாமி, ஆதம்பாக்கம். எங்கள் வீட்டில் பெருமாள் டீ!சிறுவயதில் பரீட்சைக்கு கண்விழித்துப் படிக்கும்போது மட்டும் (இரவு 10 மணி) டீ போட்டுத் தரும்படி அம்மாவிடம் கேட்போம். மற்றபடி தேநீருக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. திருமணத்திற்குப் பிறகு கோவையிலிருந்தபோது பழக்கம் சற்றே மாறியது. காலையில் காபியும் மாலையில் தேநீரும் வாடிக்கையானது. விதவிதமான தேநீர் தயாரிக்கும் முறைகளை அறிந்துகொண்டது நாங்கள் வட இந்தியாவில் (லக்னோ) வசித்தபோதுதான். ‘ஜலதோஷமா இஞ்சி + துளசி டீ குடி.’ ‘கொண்டாட்டமா? ஏலக்காய் போட்ட டீ போடு’ என்று தேநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. துளசி சேர்த்த தேநீரும் எங்கள் வீட்டில் உண்டு. அதற்கு ‘பெருமாள் டீ’ என்றே நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது!- கிருஷ்ணவேணி ரங்கநாதன், பெரும்பாக்கம்..காவல் தெய்வங்களுக்கு தேநீர் காணிக்கை!'கொரோனா’ எனும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி, நாடே கவலையும் கண்ணீருமாக தவித்துக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது கடமையையே கண்ணாகக் கொண்டு, இரவு _ பகல் பாராமல், தங்கள் இன்னுயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ‘காவல் தெய்வங்களான’ காவலர்களுக்கு தேநீர் வழங்கியதில் பெருமை கொள்கிறேன். நாங்கள் நங்கநல்லூரில் இந்து காலனியில் வசிக்கிறோம். எங்கள் வீடு தெருமுனையில் உள்ளது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் தெய்வங்களுக்கு தேநீர் வழங்கி, ஆத்ம திருப்தி அடைந்தோம். பிரபல ஆங்கில நாளிதழில் பணி செய்த என்னுடைய பெரிய தம்பி, ஓய்வு பெற்ற பிறகு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறான். அவன் மூலமாகத்தான், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தேநீரும் பிஸ்கெட்டும் வழங்கி இன்புற்றோம். காவலர் ஒருவர், ‘‘மாமி... உங்கள் ஸ்பெஷல் டீ பிரமாதம்!’’ என்று மகிழ்ச்சியுடன் பாராட்டியது என் நெஞ்சில் நீங்கா நினைவாக இருந்து வருகிறது.- பி. கீதா, நங்கநல்லூர். .தெரியுமா?தர்பூசணியிலும் பாலினம் உண்டு!தர்பூசணி பழங்களில் ஆண் - பெண் என இரு வகைகள் உண்டு. ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரியதாகவும் நீள் வடிவத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடன் இருக்கும். ஆனால், அதிக நீர்ச்சத்து கொண்டதாக இருக்கும். பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்தில், அதிக இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கும். இது தெரியாமல் பலரும், உருவத்தில் பெரியதாகவும் அதிக இனிப்பில்லாத ஆண் பழங்களை வாங்கிவிடுவா£ர்கள்.- அமுதா அசோக்ராஜா, திருச்சி-15.