இளநீரும் தேங்காயும் இயற்கை நமக்குத் தந்துள்ள அருட்கொடை எனலாம். அந்தளவுக்கு அவற்றில் அபரிமிதமான சத்துகள் நிறைந்துள்ளன. இறை வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் தேங்காய், இளநீரில் விதவிதமாகவும் புதுமையாகவும் சமைக்க முடியும் என்கிற சூட்சுமம் நம்மில் பலருக்கும் தெரியாது. அனைத்து சீசன்களிலும் நம் உடலுக்கு நன்மை பயக்கும் தேங்காயிலும் கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை வாரி வழங்கும் இளநீரிலும் ரெசிபிகள் செய்து, இந்த சம்மரை என்ஜாய் செய்யுங்கள் சிநேகிதிகளே!.தேங்காய் ரெசிபிகள் தேங்காய் ரொட்டிதேவையானவை: தேங்காய்த்துருவல் - 1½ கப், மைதா - 500 கிராம், வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.செய்முறை: மைதா மாவுடன் உப்பு, தேங்காய்த்துருவல், எண்ணெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் ஊற்றி, சப்பாத்தி மாவைவிட சற்றே தளர்வாகப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் சிறிது சிறிதாக மாவை எடுத்து, சப்பாத்தி பலகையில் வைத்து, கைகளாலேயே ரொட்டிகளாகத் தட்டி, தவாவில் போடவும். வெண்ணெய் சிறிதளவு போட்டு, ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.குறிப்பு: இலங்கையில் பிரசித்தி பெற்ற தேங்காய் ரொட்டி இது!. தேங்காய் மகிழம்பூதேவையானவை: தேங்காய்த்துருவல் - 1½ கப், புழுங்கல் அரிசி - 4 கப், பயத்தம்பருப்பு - 1 கப், பட்டன் கல்கண்டு, வெண்ணெய் - தலா 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கு.செய்முறை: புழுங்கல் அரிசியைக் கழுவிக் களைந்து, நீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் கிரைண்டரில் போட்டு உப்பு, தேங்காய்த்துருவல், கல்கண்டு சேர்த்து, அளவான நீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் பயத்தம்பருப்பை போட்டு சிவக்காதவாறு வறுத்து, மிக்ஸியில் நைசான பவுடராக்கவும். கிரைண்டரில் அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மிக்ஸியில் பொடித்த பவுடர், வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து, முள்ளு முறுக்கு அச்சுள்ள முறுக்கு நாழியில் நிரப்பவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, முள்ளு முறுக்குகளாகப் பிழிந்து, ஒருபுறம் வெந்ததும் மறுப்புறம் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்..தேங்காய் வடைதேவையானவை: தேங்காய்த்துருவல் - 3/4கப், புழுங்கல் அரிசி - 1 கப், துவரம்பருப்பு - ½ கப், வரமிளகாய் - 3, பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், கொரகொரப்பாகப் பொடித்த மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கு.செய்முறை: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, வரமிளகாய் மூன்றையும் கழுவி, தண்ணீர் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் நீரை வடித்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மிளகுத்தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.குறிப்பு: தேங்காய் வடைக்கு காரச்சட்னி நல்ல காம்பினேஷன்..தேங்காய் திரட்டுப்பால்தேவையானவை: தேங்காய் - 4, பொடித்த வெல்லம் - 1 கிலோ, திக்கான பால் - ½ லிட்டர், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 100 கிராம், ஒடித்த முந்திரித்துண்டுகள், ஊறவைத்த பச்சரிசி - 4 டேபிள் ஸ்பூன்.செய்முறை: தேங்காயைத் துருவி, மிக்ஸியில் போடவும். ஊறவைத்த அரிசியை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கெட்டியாக நைசாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, அடிப்பிடிக்காதவாறு கைவிடாமல் கிளறவும். பின்னர் பால் சேர்த்துக் கிளறவும். இடையிடையே நெய்யை சேர்க்கவும். தேங்காய் விழுது நன்றாக வெந்து நிறம் மாறியதும் வெல்லத்தைச் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து, கைவிடாமல் கிளறவும். தேங்காயும் வெல்லமும் சேர்ந்து வந்ததும் (லேசாக கைகளால் உருட்டும் பதம்) ஏலக்காய்த்தூள் தூவி, மீதியுள்ள நெய்யில் முந்திரியை வறுத்துச் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாகக் கிளறிவிடவும்.குறிப்பு: திருமணங்களில் சீர் பட்சணமாக தேங்காய் திரட்டுப்பால் கொடுப்பது வழக்கம்!.தேங்காய்ப்பால் சூப்தேவையானவை: தேங்காய்ப்பால் - 1 கப், குழைய வெந்த துவரம் பருப்பு (சற்றே நீர்க்க இருக்க வேண்டும்) - ½ கப், பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப், தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், சோம்பு -½டீஸ்பூன், பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்), கொரகொரப்பாகப் பொடித்த மிளகு - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு தாளிக்கவும். பின்னர் பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, துவரம்பருப்புக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். பின்னர் தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், மிளகுத்தூள், மல்லித்தழைத் தூவி இறக்கவும்.குறிப்பு: இந்த சூப், பசியை நன்றாகத் தூண்டும். ஜீரண சக்தி தரும் தன்மை கொண்டது..தேங்காய் - முருங்கை கறிதேவையானவை: திக்கான தேங்காய்ப்பால் - 1 கப், சதைப்பற்றான முருங்கைக்காய் - 3, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2, இஞ்சி&பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள், உப்பு - தேவைக்கு.செய்முறை: முருங்கைக்காயின் மேலுள்ள நார் போன்ற பகுதியை சீவி எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைத் துண்டுகள் சேர்த்து வதக்கி, ¼ கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். முருங்கைக்காய் அரைவேக்காடு வெந்ததும், தேங்காய்ப்பால் சேர்க்கவும். கலவை கூட்டு / கறி பதத்தில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.குறிப்பு: சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்குத் தொட்டுச் சாப்பிட ஏற்ற சுவையான கறி இது!.தேங்காய்ப்பால் பூரிதேவையானவை: திக்கான தேங்காய்ப்பால், கோதுமை மாவு - தலா 1½ கப், மைதா மாவு - ½ கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், மெலியதாகச் சீவிய முந்திரி, பாதாம் துண்டுகள் - தலா 1 டேபிள் ஸ்பூன், மெலிதாகச் சீவிய வெல்லம் - 1 கப், உப்பு - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு.செய்முறை: அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி பலகையில் வைத்து வட்டமாக திரட்டவும். சிறிய டப்பாவின் மூடியை கவிழ்த்து, வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, வெட்டிய வட்டங்களை போட்டு பொரித்து எடுத்து, எண்ணெயை வடியவிடவும். அகலமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். ஆறியதும், தேங்காய்ப்பாலை கலந்து, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியை சேர்க்கவும். பின்னர் பொரித்த பூரிகளை சேர்த்து, உடையாதவாறு கலந்துவிடவும். அரை மணி நேரம் நன்றாக ஊறியதும், எடுத்து பரிமாறவும்..தேங்காய் இட்லி மிளகாய்ப்பொடிதேவையானவை: தேங்காய்த்துருவல், தோலுடன்கூடிய உளுந்தம்பருப்பு - தலா 1 கப், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன், வரமிளகாய் - ½ கப், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.செய்முறை: தேங்காய்த்துருவலை வெறும் வாணலியில் போட்டு ஈரம் போக வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுந்தை வறுக்கவும். பாதியளவு வறுபட்டதும், வரமிளகாயைச் சேர்த்து வறுக்கவும். பின்னர் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து ஒருமுறை நன்றாகப் புரட்டிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பாதியளவு அரைபட்டதும், ஒரு தட்டில் கொட்டவும். வறுத்துவைத்துள்ள தேங்காயை மிக்ஸியில் போட்டு பாதியளவு அரைபட்டதும், பருப்பு, மிளகாய்க் கலவையுள்ள தட்டில் கொட்டி, இரண்டையும் நன்றாகக் கலந்துவிட்டு மறுபடியும் மிக்ஸியில் போடவும். கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்து, காற்று புகாத பாட்டிலில் அடைக்கவும்..தேங்காய்ப்பால் வெண்பொங்கல்தேவையானவை: கெட்டியான முதல் தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் - தலா 1 கப், பச்சரிசி - 1½ கப், பயத்தம்பருப்பு - ½ கப், பச்சைமிளகாய் - 2, மிளகு, உடைத்த முந்திரித் துண்டுகள் - தலா 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1½ டேபிள் ஸ்பூன், இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - 6 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.செய்முறை: அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி, நீரை வடிகட்டி, வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் போடவும். இதனுடன் உப்பு, முதல் மற்றும் 2-ம் தேங்காய்ப்பால், மேலும் 1½ கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் 1 டீஸ்பூன் நெய்விட்டு, மிளகு, சீரகத்தை வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்து தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள 5 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, நறுக்கிய பச்சைமிளகாய், முந்திரித்துண்டுகள், இஞ்சித்துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் கொரகொரப்பாக பொடித்த மிளகு-சீரகப்பொடியைச் சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். குக்கரைத் திறந்து, ஆவி வெளியேறியதும், தாளித்தவற்றைச் சேர்த்து கலந்துவிட்டு, சூடாகப் பரிமாறவும்..தேங்காய் பஜ்ஜிதேவையானவை: நீளவாக்கில் 1½ இன்ச் அளவு துண்டுகளாக நறுக்கிய தேங்காய் - ½ கப், கடலை மாவு - 3/4 கப், அரிசி மாவு - ¼ கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ½ டீஸ்பூன், சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு, உப்பு - தேவைக்கு.செய்முறை: அடி கனமான வாணலியில் எண்ணெயை காயவைக்கவும். அகலமான பாத்திரத்தில், தேங்காய்த் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் போட்டு, தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும். இந்த மாவில் ஒவ்வொரு தேங்காய்த் துண்டாக தோய்த்து எடுத்து, நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு, திருப்பிவிட்டு பொரித்து எடுக்கவும்.குறிப்பு: பாயசம் செய்யும்போது உளுந்து வடைக்குப் பதிலாக இந்தத் தேங்காய் பஜ்ஜி செய்யலாம். மல்லி சட்னி / தக்காளி சட்னியை தேங்காய் பஜ்ஜிக்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்!.திருநெல்வேலி சொதிதேவையானவை: முதல் தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் - தலா 1 கப், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, பச்சைமிளகாய் - 2, இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன், வேகவைத்த பயத்தம்பருப்பு - ¼ கப், எலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன், பெரிய சைஸ் உருளைக்கிழங்கு, கேரட் - தலா 1, பீன்ஸ் - 6, உப்பு - தேவைக்கு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உடைத்த உளுந்து - தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள்.செய்முறை: வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பச்சைமிளகாயை வதக்கி எடுத்து, நசுக்கி தனியே வைக்கவும். பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளையுடன் உப்பு சேர்த்து வேகவைத்து தனியே வைக்கவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தை வதக்கி, நசுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெந்த காய்கறிகள், 2-ம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 கொதிகள் விடவும். பின்னர் வெந்த பயத்தம்பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு, சிறிதளவு உப்பு, முதல் தேங்காய்ப்பால் சேர்த்து கொதித்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து இறக்கி, எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்..கோகனட் பாயசம்தேவையானவை: தேங்காய்த்துருவல், வெல்லத்துருவல் - தலா 1½ கப், பாசுமதி அரிசி - ½ கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், உடைத்த பாதாம், முந்திரி - தலா 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்.செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவிட்டு, நீரை வடித்து உலரவிடவும். பாதியளவு உலர்ந்ததும், மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, தேங்காய்த்துருவல், தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இப்போது அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். அடுப்பை சிம்மில் வைத்து, அடிப்பிடிக்காதவாறு கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூளை தூவி, நெய்யில் முந்திரி, பாதாமை வறுத்துச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விட்டு பரிமாறவும்..தேங்காய் தோசைதேவையானவை: தேங்காய்த்துருவல், இட்லி அரிசி, பச்சரிசி, அவல் - தலா 1 கப், வெந்தயம், ஜவ்வரிசி - தலா 1 டீஸ்பூன், எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, ஜவ்வரிசி, வெந்தயம் நான்கையும் 3 மணி நேரம் ஊறவிடவும். அரைப்பதற்கு 10 நிமிடம் முன்பாக அவலைக் கழுவி, ஊறவிடவும். முதலில் ஊறவைத்த நான்கையும் வடிகட்டி, கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பாதி அரைபட்டதும், தேங்காய்த்துருவல், ஊறிய அவல் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். பின்னர் உப்பு சேர்த்து கலந்து, மாவை புளிக்க விடவும். 8 மணி நேரம் கழித்து, சூடான தவாவில் ஊத்தப்பம் போல மாவை ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, தவாவை மூடி, வேகவைத்து எடுக்கவும்.காரச்சட்னியுடன் பரிமாறவும்..தேங்காய் கேக்தேவையானவை: திக்கான தேங்காய்ப்பால் - 1 கப், திக்கான பால் - 1 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 6 டேபிள் ஸ்பூன்.செய்முறை: அடி கனமான கடாயில் 1 கப் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஒரு கம்பிப் பதம் பாகு வந்ததும், 1 கப் தேங்காய்ப்பால் ஊற்றி, அடிப்பிடிக்காதவாறு கிளறி, இடையிடையே நெய் விட்டு கிளறவும். கெட்டியான பதம் வந்ததும், 1 கப் பால் ஊற்றி, கைவிடாமல் கிளறி, கடாயில் ஒட்டாமல் வரும்போது ஏலக்காய்த்தூளை தூவி இறக்கவும். இந்தக் கலவையை, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடவும்.குறிப்பு: காய்ச்சி ஆறவைத்த பாலை மட்டுமே சேர்க்கவும். காய்ச்சாத பாலை சேர்த்து செய்தால் பால் திரிந்துபோக வாய்ப்பு உண்டு..இளநீர் ரெசிபிகள் இளநீர் சர்பத்தேவையானவை: மெல்லிய வழுக்கையுடன்கூடிய இளநீர் - 2, சப்ஜா விதைகள் - 1 டீஸ்பூன், நன்னாரி சர்பத் - 1 டேபிள் ஸ்பூன்.செய்முறை: சப்ஜா விதைகளை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் ஊறவிடவும். இளநீரை வெட்டி, இளநீர் மற்றும் வழுக்கையை தனித்தனியாக எடுத்துக்கொள்ளவும். வழுக்கையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். ஊறிய சப்ஜாவை கண்ணாடி டம்ளரில் போட்டு, அதன் மேல் நன்னாரி சர்பத்தை ஊற்றவும். அதன்மீது இளநீரை ஊற்றி, மேலாக இளநீர் வழுக்கைத் துண்டுகளைப் போட்டு, நன்றாகக் கலந்து பரிமாறவும்.குறிப்பு: கோடைக்கேற்ற குளுகுளு சர்பத் இது. தேவைப்பட்டால் சிறிதளவு சர்க்கரை கலந்து பருகலாம்..இளநீர் மில்க்ஷேக்தேவையானவை: மீடியமான வழுக்கையுடன்கூடிய இளநீர் - 2, சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன், காய்ச்சி குளிரவைத்த பால் - 250 மில்லி, ஐஸ் கட்டிகள் - ¼ கப்.அலங்கரிக்க: வெனிலா ஐஸ்க்ரீம் - 4 டேபிள் ஸ்பூன், மெலிதாகச் சீவிய பாதாம் - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: இளநீரை சீவி, வழுக்கையை ஸ்பூனால் எடுத்து, மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். இளநீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில் வழுக்கையைப் போட்டு, பாதியளவு இளநீரை ஊற்றி, நைசாக அரைத்து, சர்க்கரை, பால் சேர்த்து அடிக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகள் சேர்த்து அடித்து, மீதமுள்ள இளநீரை ஊற்றி, நன்றாக அடித்து, கண்ணாடி டம்ளர்களில் ஊற்றவும். மேலே தேவையான அளவு வெனிலா ஐஸ்க்ரீமை போட்டு, சீவிய பாதாமை தூவி பரிமாறவும்.. இளநீர் அல்வாதேவையானவை: மீடியமான வழுக்கையுடன்கூடிய இளநீர் - 3, சர்க்கரை - 250 கிராம், சோளமாவு - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 5 டேபிள் ஸ்பூன்.செய்முறை: இளநீரை வெட்டி, இளநீர் மற்றும் வழுக்கையை தனித்தனியாக பிரித்து வைக்கவும். வழுக்கையைப் பொடியாக நறுக்கவும். ஒரு கிண்ணத்தில் சோளமாவுடன் இளநீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாதியளவு சர்க்கரையைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கரைத்து வைத்துள்ள சோளமாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கிளறிக்கொண்டே இருக்கவும். இடையிடையே நெய் ஊற்றி, அடிப்பிடிக்காதவாறு கிளறவும். கலவை கெட்டியாக தொடங்கியதும், மீதிமுள்ள சர்க்கரை, நெய்யை சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள வழுக்கையைச் சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவி இறக்கவும்..இளநீர் பாயசம்தேவையானவை: மெல்லிய வழுக்கையுடன்கூடிய இளநீர் - 3, திக்கான தேங்காய்ப்பால் - 1 கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், கண்டன்ஸ்டு மில்க் - 100 மில்லி, பால் - ½ லிட்டர், சர்க்கரை - 100 கிராம், நெய், உடைத்த முந்திரி - தலா 2 டேபிள் ஸ்பூன்.செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, ரு லிட்டராக சுண்டும் வரை கைவிடாமல் கிளறவும். பின்னர் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிடவும். இளநீரை வெட்டி, இளநீர் மற்றும் வழுக்கை தனித்தனியாக பிரித்து வைக்கவும். பாதி வழுக்கையை மிக்ஸியில் போட்டு இளநீர் ஊற்றி நைசாக அரைக்கவும். மீதமுள்ள வழுக்கையை பொடியாக நறுக்கவும். நெய்யில் முந்திரித்துண்டுகளை வறுக்கவும். இறக்கி ஆறவைத்த பால் கலவையில், திக்கான தேங்காய்ப்பால், அரைத்த வழுக்கை கலவை, பொடியாக நறுக்கிய வழுக்கை, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து, நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்..இளநீர் பிரியாணிதேவையானவை: இளநீர், வழுக்கை விழுது, பாசுமதி அரிசி - தலா 1 கப், நெய், முந்திரி, திராட்சை - தலா 2 டேபிள் ஸ்பூன், மில்க்மெய்ட் & ¼ கப், உப்பு - சிறிதளவு.செய்முறை: வாணலியில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுத்து தனியே வைக்கவும். பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து குக்கரில் போடவும். அதனுடன் இளநீர், வழுக்கை விழுது, மில்க்மெய்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி, வெயிட் போட்டு ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும். பின்னர் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி, ஆவி வெளியேறியதும், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை கலந்து, சூடாக பரிமாறவும்.குறிப்பு: இந்தப் பிரியாணிக்குத் தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. - எஸ்.ராஜகுமாரிபடங்கள்: கே.கஸ்தூரி