- ஜி.எஸ்.எஸ்.‘நீச்சல்’ என்பது மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பது நமக்கெல்லாம் தெரியும். கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல் எல்லா பருவங்களிலும் நீச்சலைத் தொடர்வது நல்லது. நீச்சல் குளம், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சி செய்பவர்களும் உண்டு. பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர், அங்குள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்வார்கள்..தொடை, தோள்பட்டை, பின்புறம் ஆகியவை உறுதிபெற நீச்சல் பயிற்சி துணை புரிகிறது. நம்முடைய சருமத்தின்மீது தண்ணீர் தொடர்ந்து அழுத்தம் அளிப்பதால், தோல் பளபளப்படைகின்றது. வயிற்றுப் பகுதியின் மேல் உண்டாகும் நீரின் அழுத்தத்தால் ஜீரண உறுப்புகள் சீராக இயங்குகின்றன (இதனால்தான் நீச்சலடித்து முடித்தவுடன் ‘அகோரப் பசி’ ஏற்படுகிறது). மலச்சிக்கல் நீங்குகிறது. எந்த வகை உடல்வலியாக இருந்தாலும்...- முக்கியமாக, முதுகுவலிக்கு அற்புத நிவாரணி நீச்சல்! நீச்சல் பயிற்சியின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அவை குறித்து பார்க்கலாம்..* நீச்சல் குளத்தில் மட்டுமே இதுவரை நீந்தி இருக்கிறீர்கள் என்றால் ஆறு அல்லது கடலில் நீச்சல் அடிக்கத் தொடங்கும்போது மிகவும் எச்சரிக்கை தேவை. மறக்காமல் உங்களுடன் ஒருவரை பாதுகாப்புக்கு அழைத்துச் செல்லுங்கள்.* நீச்சல் அடிப்பதில் போதிய அனுபவம் உண்டாகும் வரை பாதுகாப்பு சாதனங்கள் அணிந்துகொள்ளலாம்.* நீச்சல் கண்ணாடிகளை (Goggles) கண்களில் அணிந்துகொண்டு நீச்சல் அடிப்பது நல்லது. நீருக்கடியிலும் உங்கள் பார்வை தெளிவாக இருக்கும். தண்ணீருக்கு அடியிலும் கண்களைத் திறந்து கொண்டு இருப்பது கடினமாக இருக்காது. * நீச்சல் குளத்தில் இறங்கும்போது அங்குள்ள கைப்பிடிகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இறங்குங்கள். இதனால் வழுக்கி விழுவது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.* நீச்சலைத் தொடர்ந்து அடிக்கும்போது உடலிலுள்ள ‘நீர்ச்சத்து’ குறைய வாய்ப்பு உண்டு. எனவே ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துச் சென்று அவ்வப்போது குடிக்கலாம்.* வழக்கமாக அமைதியாக இருக்கும் பாதுகாப்பான கடல்பகுதிகூட மழைக்காலத்தில் எதிர்பாராத நேரங்களில் கொந்தளிக்கக் கூடும். அதுபோலத்தான் ஆற்றோட்டங்களும். எனவே கூடுதல் கவனம் தேவை.* நீண்ட நேரம் ரயிலிலோ காரிலோ பயணித்து வந்தவர்கள், தண்ணீரைப் பார்த்தவுடனேயே நீச்சல் அடிக்க தயாராகி விடுவார்கள். இது சரியல்ல! நீச்சல் அடிப்பதற்கு முன்பாக சில நிமிடங்களாவது ஓய்வெடுத்துக்கொள்வதும் பிறகு ஓரிரு நிமிடங்களுக்கு மெதுவாக ஓடுவதும் நல்லது.* வயிறு முட்ட சாப்பிட்டிருந்தால், இரண்டு மணிநேரம் வரை நீச்சல் அடிப்பதை தவிர்த்து விடுங்கள்.* நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள்கூட அருகில் யாரும் இல்லாதபோது (முக்கியமாக அறிமுகமில்லாத நீர்நிலைகளில்) நீச்சல் அடிப்பதை தவிர்க்கவும்.* நடக்கும்போது புடவை ஏற்றதாகவோ அழகு சேர்ப்பதாகவும் இருக்கலாம். ஆனால், நீச்சல் அடிக்கும்போது புடவைத் துணியானது கை, கால்களில் சுற்றிக் கொண்டால், அது உயிருக்கே எமனாகலாம். எனவே அதற்குரிய உடையுடன் நீச்சல் அடிப்பதுதான் நல்லது.* புதிய கடல் பகுதியில் நீச்சல் அடிக்கப் போகிறீர்களா? அலைகளின் உயரம், காற்றின் வேகம், நீரின் வெப்பம், நீர்நிலையின் ஆழம் உள்ளிட்ட விவரங்கள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை கவனியுங்கள். அப்படி இல்லை யென்றால் அருகே வசிப்பவர்களிடம் கேட்டு, இந்த விவரங்களை அறிந்து கொள்ளவும். அப்படி யாரும் அகப்படவில்லை என்றால், மரத்துண்டு போன்ற ஏதாவது மிதக்கும் பொருளை நீரில் போட்டு, அது நீருக்குள் இழுக்கப்படும் வேகத்தைக் கொண்டு ஒரு அனுமானத்துக்கு வாருங்கள்.* முதலில் கொஞ்ச நேரம் நீச்சல் அடித்துவிட்டு தண்ணீரிலேயே சிறிது ஓய்வெடுங்கள். அந்த நேரத்தில் உங்கள் உடலானது, தண்ணீர் மற்றும் பருவநிலைக்கு ஏற்றவாறு தன்னை சரிசெய்து கொள்ளும். காற்றில் இருப்பதைப் போல 20 மடங்கு வெப்பத்தை நாம் நீரில் இழக்கிறோம். எனவே இந்த வெப்ப இழப்பை ஈடுகட்ட நேரம் தேவைப்படும்.* நீச்சல் அடிக்கும்போது பாதியில் ஏதாவது பிரச்னை உண்டானால் பதற்றப்படாதீர்கள். தலைக்கு மேல் கைகளைத் தூக்கி அசைத்து, கரையில் இருப்பவர்களுடைய கவனத்தை உடனடியாக கவர முயற்சிக்க வேண்டாம். அதனால் நீரில் மூழ்கிவிடக்கூடிய அபாயமும் உண்டு. கொஞ்சம் ஆசுவாசம் ஏற்படும் வரை நீரின்மீது மல்லாக்க மிதக்கவும்.* காற்றின் வெப்பமும் நீரின் வெப்பமும் மிகவும் மாறுபட்டிருந்தால் அது இதயத்தை பாதிக்கக்கூடும். தவிர, நீர் எவ்வளவுக்கெவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தசைப்பிடிப்பு பிரச்னை அதிகமாக வரக்கூடும். களைப்பும் சீக்கிரம் ஏற்படும். பொதுவாக 26 டிகிரி சென்டிகிரேடை விட குறைந்த வெப்பம் கொண்ட நீரில் நீச்சல் அடிக்க வேண்டாம்..குழந்தைகளை கண்காணியுங்கள்!உங்கள் குழந்தைகள் நீச்சல் குளத்திற்குச் செல்கையில், கூடவே பொறுப்பான ஒருவரும் செல்ல வேண்டும். நேரம் வீணாகுமே என்று நினைக்க வேண்டாம். புத்தகத்தையோ லேப்டாப்பையோ எடுத்துச் சென்று, நீச்சல் குளத்துக்கு அருகில் அமர்ந்தபடி உங்கள் வேலையை கவனித்தவாறு குழந்தையை கண்காணியுங்கள். 8 வயதைவிட குறைவான வயதுடைய குழந்தை என்றால், உங்களின் முழு கவனமும் குழந்தை மீதே இருக்கட்டும்.