‘இழப்பின் விதி’ (Law of lose) என்ற சொல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஜான் ரோன் (John Rohn) என்கிற ஆங்கில நிர்வாகவியல் எழுத்தாளர் இதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.‘பயன்படுத்து அல்லது இழந்து விடுவாய்’ (Use or lose) என்பதே அந்த விதியின் விளக்கம்.வாய்ப்புகள் வருகிறபோது அதை உடனடியாகப் பயன்படுத்திவிட வேண்டும். பயன்படுத்தாவிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகள் அனைத்தையும் நாம் இழந்து விடுவோம். இதற்கு பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.‘நோக்கியா’ நிறுவனம், மொபைல் போன் உற்பத்தியில் உலகின் முதல் இடத்தை வகித்து வந்தது. ஆனால், ஸ்மார்ட் போன் புரட்சி ஏற்பட்டபோது அதற்கு உடனடியாக மாறாத காரணத்தால் ஒட்டுமொத்த சந்தையையும் இழந்து, கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.‘கோடக்’ நிறுவனம் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?ஃபிலிம் உற்பத்தியில் தலைசிறந்த நிறுவனமாகத் திகழ்ந்த போதிலும், 1970-ஆம் ஆண்டு அதன் இன்ஜினியர் ஸ்டீவன் சாசன் (Steven Sasson) உருவாக்கிய ‘டிஜிட்டல் போட்டோகிராபி’ என்கிற விஷயத்தை கவனிக்கத் தவறிவிட்டது. அதனால் தற்போது அந்த நிறுவனமே இழுத்து மூடப்பட்டு விட்டது. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். வாய்ப்பு வருகிறபோது அதைக் கூர்ந்து கவனித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அது புதிய வேலைவாய்ப்பாக இருக்கலாம்... சிறிய தொழில்வாய்ப்பாக இருக்கலாம்... நம் தொழிலில் ஏற்படுகிற புதுவித மாற்றங்களாக இருக்கலாம்... வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் வருமானத்தை இழந்து விடுவோம். இதுவே ‘இழப்பின் விதி’. - இராம்குமார் சிங்காரம்