- இராம்குமார் சிங்காரம்வாரம் முழுக்க காலையில் சீக்கிரம் எழுந்து பரபரவென்று வேலைக்கு ஓடுவதால், ஞாயிற்றுக்கிழமை அன்று பலரும் லேட்டாகத்தான் எழுந்திருப்போம். ஓய்வாக சமைத்து, சாப்பிட்டு, டி.வி. பார்த்து விட்டு, மீண்டும் படுத்து உறங்கி ரிலாக்ஸாக இருப்போம்..பொதுவாகவே நம்மில் பலருக்கும் இதுவே வழக்கம். அதனால்தான் ஞாயிற்றுக்கிழமையை ‘ஓய்வு நாள்’ என்றே சொல்கிறோம்.ஆனால், அண்மையில் ஒரு நண்பரின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்றிருந்தோம். குடும்பமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது!.‘‘ஞாயிற்றுக்கிழமைகூட ஏன் இவ்வளவு பிஸியாக இருக்கிறீர்கள்?’’ என நாங்கள் கேட்டதற்கு, வீட்டை முழுவதும் சுற்றிக் காண்பித்தபடியே அவர் பேச ஆரம்பித்தார்.‘‘பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 4 மணிக்கே நாங்கள் அனைவரும் எழுந்து விடுவோம்.வீட்டை சுத்தம் செய்தல், துணி துவைத்தல், அயர்ன் செய்தல், பலசரக்கு வாங்குதல் என அனைத்து வேலைகளையும் பார்ப்போம்.அடுத்த வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் எல்லாவற்றையும் மார்க்கெட்டுக்குப் போய் வாங்கி வருவோம்..அடுத்த வாரத்திற்கான உணவைத் திட்டமிட்டு காய்கறிகளை நறுக்கி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம்.வரும் வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் என்னென்ன உடைகளை அணிய வேண்டும் எனத் தேர்வு செய்து, அவற்றை ஷெல்ஃபில் அடுக்கி வைத்து விடுவோம்.எங்களைப் பொறுத்தவரையில் ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் பிஸியான நாள். அன்றைக்கு பெருவாரியான வேலைகளை முடித்து விடுவதால், அடுத்து வரக்கூடிய ஆறு நாட்களும் நாங்கள் ரிலாக்ஸாக இருப்போம். காலை 6 மணிக்குத்தான் எழுந்திருப்போம். டென்ஷனின்றி மெதுவாகக் கிளம்புவோம். ‘மண்டே ஃபீவர்’ என்பதே எங்கள் அகராதியில் கிடையாது..ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுக்கு வேலை மிகுந்த நாள். மற்ற ஆறு நாட்களும் ஓய்வு நாள் மாதிரிதான்!’’ என்றார்.கேட்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதுதானே? நீங்களும்கூட இந்த வழிமுறையை முயற்சித்துப் பாருங்களேன்!