-இராம்குமார் சிங்காரம்இப்படித்தான் இருக்க வேணும் முதலாளி! அண்மையில் ஒரு நண்பரின் அலுவலகத்திற்குச் சென்றிருந் தோம். நமக்கு மிகவும் வியப்பளிக்கக்கூடிய தொழில் முனைவர் அவர்!அந்த நிறுவனத்தில் எந்த ஊழியர் வேலைக்குச் சேர்ந்தாலும், மூன்றே மாதங்களில் அந்த நிறுவனத்தின் கலாசாரத்திற்கு ஏற்ப அவர் பயிற்றுவிக்கப்பட்டு விடுவார். எங்களுக்கு இது மிக வும் ஆச்சரியமாக இருந்தது!அது எப்படி நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப எல்லா வகை ஊழியர்களையும் அவரால் மட்டும் பயிற்றுவிக்க முடிகிறது?சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்: ‘‘பொதுவாக முதலாளிகள், ‘ஊழியர்கள் எப்போது தவறு செய்வார்கள்?’ என்று கவனித்து, அதைப் பெரிதுபடுத்தி, அவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி விடுவார்கள். உளவியல் ரீதியாகப் பார்க்கிறபோது, இதன் பின்னணி என்ன தெரியுமா? * நான்தான் தலைவன் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.* தமக்கு கீழே வேலை செய்பவர், தான் சிறப்பாகச் செயல்படுவதாக எண்ணி அகந்தையில் இருந்து விடக்கூடாது என்று நினைவூட்டுகிறார்கள்.‘தலைவன்’ என்கிற பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, இந்த இரண்டு விஷயங்களை அவர்கள் தம்மையும் அறியாமல் மேற்கொள்வதாக உளவியல் சொல்கிறது.ஆனால், நான் அப்படி அல்ல... எனக்குக் கீழே வேலை பார்ப்பவர்கள் எப்போது தவறு செய்வார்கள் என்று காத்திருப்பதில்லை. மாறாக, அவர்கள் எப்போது மிகச் சிறப்பாக ஒரு வேலையைச் செய்து முடிப்பார்கள் என்றே காத்திருப்பேன்.ஊழியர்களில் ஒரு செயலை ஒருவர் சரியாக செய்து முடித்தால், சம்பந்தப்பட்டவரை அழைத்து, பலர் முன்பாக மனதாரப் பாராட்டி, ஊக்கப்படுத்துவேன். அவர்கள் எங்காவது தவறுகள் செய்துவிட்டால், தனியாக அழைத்து, தவறுகளை மிக அன்பாக சுட்டிக்காட்டி, அதை எப்படி இனி தவிர்க்கலாம் என்பதையும் சொல்லி, தொடர்ந்து அவர்கள் முழு சுதந்திரத்துடன் பணியாற்ற வாய்ப்புகள் அளிப்பேன்.நாமே ஒருவரை வேலைக்கு எடுத்துவிட்டு, பிறகு அவர் தப்பு செய்கிறாரா என்று கண்காணிப்பது, அவரை சந்தேகப்படுவது... இதெல்லாம் என்ன நியாயம் சார்?இதனால்தான் எப்போதும் I Catch Them While They Are Right. இதுதான் என்னுடைய வெற்றிக்கான ஃபார்முலா!’’ என்றார்.நீங்களும்கூட இந்த ஃபார்முலாவை முயற்சித்துப் பாருங்களேன்.