Snegiti
ஆன்மிக கேள்வி-பதில்கள்: எதற்காக பூஜை செய்ய வேண்டும்?
‘‘மனிதர்களின் மனம் அடிக்கடி மாறுவது சகஜம்தான். அதைக் காலம் காலமாக நேரில் கண்டு வருகிறோம். கடவுள் வழிபாட்டிலும் அப்படியே நடந்து வருகிறது. அதை நம் முன்னோர் மந்திரபூர்வமாக எழுதியும் வைத்துவிட்டனர். பூஜை தொடங்கும்போது விநாயகரை மனமுருகி பிரார்த்தனை செய்தபிறகு வடக்குப் பக்கமாக அவரை நகர்த்தி வைத்துவிட்டு அப்படியே மறந்து விடுகிறோம். அதேபோல வறுமை நிலையில் இருக்கும்போது கடவுளை தினமும் வணங்குபவர்கள் பணம் சேர்ந்த பிறகு தொழிலில் முழு கவனத்தையும் குவித்து, ‘எனக்கு நேரமில்லை’ என்று சால்ஜாப்பு சொல்லி சில நிமிடங்கள்கூட நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.