-விமலா ரமணிஓவியம்: ஸ்யாம் குருசாமி படுத்திருந்தார். ஸ்ட்ரோக் வந்ததால் வாய் கோணியிருந்தது. பக்கவாதத்தால் கை, கால்கள் முடங்கி, நீட்ட முடியாமல் போனது. வாய் திறந்து பேச முடியாமல் தன்னுடைய உணர்வுகளை கண்ணீரால் வெளிப்படுத்திய நிலையில் ஜீவன் துடிக்க படுத்திருந்தார்.வியாதிக்காரர்களுக்கு உரிய அத்தனை அம்சங்களும் அந்த அறையில் இருந்தன. வீல்சேர், வாக்கர், டீப்பாய் நிறைய மாத்திரைகள், டானிக்குகள், கட்டிலுக்கு அடியில் பெட் பேன், யூரினல்... என்னால் பார்க்க முடியவில்லை. நான் கண்ணீரை துடைத்தேன். என் அருகில் நின்றிருந்த அவர் மனைவி மெல்ல சொன்னார்....‘‘அவர் இப்படிப் படுத்து கிடக்கிறதுகூட கஷ்டமா இல்ல தம்பி. நாலு அஞ்சு வருஷமா இப்படித்தான். ஆனா, ‘இப்படி ஆன பிறகு யாரும் தன்னை வந்து பார்க்கல. தன்கிட்ட கதையோ கவிதையோ கேட்கல’ அப்படிங்கிற பெரிய ஏக்கம் மட்டும் போகல. கொஞ்சம் கொஞ்சமா மனசுக்குள்ளே வருந்தி இப்படி ஆகிட்டாரு தம்பி.தினம் தினம் பட்டிமன்ற பேச்சுகளும் அதுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி நண்பர்கள் கூட்டமும் வாசல்ல காத்து நிற்கிற கார் வரிசைகளும்.... திரும்பி வரும்போது கை நிறைய பரிசுகள், சால்வைகள்... ரோஜா மாலை மணத்தோடு வருவார். இதெல்லாம் இல்லாம அவரால இப்போ தனிச்சு வாழவே முடியல.தன்னோட எண்ணங்களை சொல்றதுக்கு வாயில வார்த்தைகளும் இல்லை. போகட்டும் தம்பி... பாரதியையே மறந்த ஊரில் நீங்க மட்டும் வந்தீங்களே ரொம்ப சந்தோஷம்!’’.கடந்த காலம் என்னும் நெடும் சுவற்றில் செதுக்கப்பட்ட ஞாபக சிற்பங்கள் என்னுள் மெல்ல மெல்ல உயிர் பெற்றது. காலத்தின் வேகப்பழுதியில் நான் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போன அல்லது புழுதி படிந்த சில நினைவு சித்திரங்கள் வண்ணம் இழந்து காட்சி தந்தன. அவற்றை என்னுடைய எண்ண வண்ணத்தால் புதுப்பித்தேன்.குருசாமி என் மதிப்பிற்குரிய ஆசான். தமிழ் பேராசிரியர். என் கல்லூரி நாட்களில் அவருடைய வகுப்பை நான் தவற விட்டதே இல்லை. அவர் விவரிக்கும் காட்சிகள் ஒரு சொற்சிற்பம். கண்முன்னே அந்தக் காட்சிகள் அழகாக விரியும். அவர் வாய்மொழியே சிற்பங்களாக கண்முன் தெரியும்..‘அண்ணலும் நோக்க... அவளும் நோக்க...’ என்ற அந்த வரிகளில் ராமனையும் சீதையையும் தரிசிப்போம். ‘குகனோடு ஐவர் ஆனோம்!’ என்ற வரிகளில் ராமனின் காருண்யம் தெரியும்.‘நாய் குகன் என்றென்னை ஏசாரோ?’ என்று குகன் கூறும் குகப்படல வரிகளில், குகனின் ராம பக்தியும் ராமர் மீது குகன் கொண்ட அன்பும் பரதனிடம் கொண்ட சீற்றமும் ஒன்றாக எழும்.ஒன்றா... இரண்டா... எடுத்துச் சொல்ல?.அவர் வீடு தேடி மாலை வேளை போவேன். ஏதோ எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருப்பார். யார் யாரோ வந்த வண்ணமாக இருப்பார்கள். அங்கு ஒரு இலக்கிய மன்றமோ பட்டிமன்றமோ கருத்தரங்கமோ நடக்கும். நான் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.உமர்கையாம் கவிதைகளில் தென்படும் பல உதாரணங்கள் தற்கால கவிஞர் படைப்பில் இடம் பெறுவதையும், சங்க இலக்கியத்தின் பல கற்பனைகள் திரைப்பட பாடல்களில் இடம் பெறுவதையும் நயமாக சுட்டிக் காட்டுவார்.‘வெயில்கேற்ற நிழல் உண்டு!’ என்ற வாலியின் வரிகளில் உமர்கையாம் கையில் மதுக்கிண்ணத்தை ஏந்தியபடி நிற்பது காட்சியாக தெரியும்..ஒரு நோட் புக் நிறைய கவிதை வரிகள்... முடிந்தும் முடியாததுமான பல கற்பனைகள்... எத்தனை அழகான கையெழுத்துகள்... கவிதைகள்!‘‘எந்தப் பத்திரிகை யில் இதெல்லாம் வரப்போகுது சார்?’’ என்பேன். சிரிப்பார்.இனிமையான காட்சிகள். இனிமை யான நாட்கள்!கம்பராமாயணத்தை உச்சரித்த அந்த வாயால் இன்று பேச முடியவில்லை. கவிதை எழுதிய விரல்களும் அதைக் கூறிய வாயும் முடங்கிக் கிடக்கின்றன. மணிக்கணக்காக பேசிய வாய், பேச்சின்றி கிடைக்கின்றது; உமிழ்நீரை சுரக்கின்றது. தன்னுடைய இயலாமையை கண்ணீராக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். உணர்வுகள் கண்ணீராக உள்ளம் உமிழ்நீராக...நான் கண்களை மூடிக்கொள்கிறேன். என் குருவுக்கு வந்தனை செய்ய வேண்டும். கட்டை விரல் கேட்காத துரோணாச்சாரியார் இவர். ஆச்சார்ய தேவோ பவ!.நான் கல்லூரி படிப்பு முடிந்து வேலை நிமித்தம் அங்கு இங்கு என்று அலைந்து இப்போதுதான் அப்பாவின் உடல்நிலை காரணமாக இந்த ஊருக்கு வந்தேன்.குருசாமி மாஸ்டருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டு அவரை பார்க்க வந்தேன். ஆனால், நான் பார்க்க நினைத்த என் ஆசான் வேறு. இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருப்பது வெறும் எலும்புக்கூடு. அவர் கவிதைகளை முடிக்க என்னிடம் கற்பனை இல்லை.ஒரு சமயம் ஆசான் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.‘கவிச் சக்கரவர்த்தி’ கம்பர், ஒரு முறை தான் ஆரம்பித்த வரிகளை முடிக்க முடியாமல் திணறியபோது ஏற்றம் இறைக்கும் பெண் ஒருத்தி அதை முடித்தாளாம்!‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனிநீரே!’ என்ற கம்பர் வரிகளை, ‘தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!’ என்று அந்தப் பெண் முடித்தாளாம்.கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்! ஆனால் நான்? கண்ணீரை துடைத்தேன். அவர் படுத்திருந்த அறையின் பக்கத்து அறையின் கூடத்திலே நுழைந்தேன். என்னுடன் நடந்து வந்த அவருடைய மனைவி சொன்னார்..‘‘மரணம் எப்போ வரும்னே தெரியாம எதிர் பார்த்துக் காத்திருக்கிறது ரொம்பக் கொடுமை தம்பி.’’உண்மை! கம்பன் வீட்டுக் கட்டுத் தறி கவி பாடுகிறது.‘‘இருங்க தம்பி... காபி சாப்பிட்டு போகலாம்.’’என் ஆசானுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.எனக்கு ‘செக்’ எழுத நேரம் தேவைப்பட்டது. அதனால் சம்மதித்தேன்.அவர் உள்ளே போக நான் அவசரமாக செக் எழுதி முடித்தேன். அவர் மனைவியின் கையில் கொடுத்தால் கண்டிப்பாக வாங்கிக்கொள்ள மாட்டார். நான் இங்கு வரும்போது கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தார், ஒரு நோட் புத்தகத்தில்!அந்த நோட் புத்தகமும் பால் பாயின்ட் பேனாவும் அங்கே இருந்தன..இந்த செக்கை அந்த நோட் புத்தகத்தில் வைத்து மூடிவிடலாம். பிறகு அந்த அம்மாள் வந்து பார்த்து அதை எடுத்துக்கொள்ளட்டும்.நான் செக் எழுதி முடித்த கையோடு அந்த நோட் புத்தகத்தை திறக்கிறேன். மணிமணியான கையெழுத்துகள். அற்புதமான கையெழுத்துகள். அன்று என் ஆசான் அறையில் நான் பார்த்த அதே கையெழுத்துகள்!பல கவிதைகள் தேதி வாரியாக சமீபத்தில் எழுதப்பட்ட கவிதை வரிகள். நான் திகைக்கிறேன்... அற்புதமான வார்த்தைப் பிரயோகங்கள்!ஒருமுறை ஆசான் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘‘என் கல்யாணம் காதல் கல்யாணம் தெரியுமா? என் கவிதைகளை காதலிச்சு காதலிச்சுதான் என் மனைவி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா!’’‘‘அவங்களும் கவிதை எழுதுவாங்களா சார்?’’‘‘ஏதோ கொஞ்சம்... கொஞ்சம்!’’எனக்குப் புரிகிறது. சட்டென்று கண் கட்டு அவிழ்ந்த உணர்வு.\.தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தன்னை பின் நிறுத்திய ஒரு பெண்மையின் தியாகம் எனக்குப் புரிகிறது.இந்தப் பெண்மணி கம்பன் வீட்டுக் கட்டுத் தறி இல்லை. கம்பனே இவர்தான்!நான் எழுதிய செக்கை அந்த நோட்டு புத்தகத்திலே வைத்து மூடுகிறேன்.மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் குருவாகவும் தெய்வமாகவும் இருந்த தாய் அவர்! ‘குரு வந்தனம்’ செலுத்திய நிம்மதி எனக்கு. கிளம்புகிறேன்.‘‘தம்பி...’’ அந்தத் தாயின் குரல் சற்றே தள்ளி ஒலிக்கிறது.