‘‘பக்கத்துல இருக்கற மளிகைக் கடைக்குப் போய் கொஞ்சம் சாமான் வாங்கிட்டு வா. இந்தா லிஸ்ட்...’’ என்றவாறே காகிதம் ஒன்றை நீட்டினாள் அம்மா தேவிகா.‘‘இதென்னம்மா து.ப.? ஓ... துடைப்பக்கட்டையா?’’‘‘துவரம் பருப்புடீ.’’‘‘முழுசா பெயர் எழுதக் கூடாதா? ஏன் இப்படிச் சுருக்கறே?’’‘‘நான் எப்பவுமே மளிகை சாமான் பேரெல்லாம் சுருக்கித்தான் எழுதுவேன். கடைக்காரருக்குப் புரியும். லிஸ்ட்ல து.ப.வுக்கு அடுத்து என்ன இருக்குன்னு பாரு...’’‘‘உ.ப.ன்னு போட்டிருக்கு. அப்படின்னா உவரம்பருப்பா?’’‘‘லூஸு... உளுந்தம்பருப்புடீ.’’.‘‘அடுத்ததா உ.உ.ப.னு இருக்கே? இது என்ன?’’‘‘உடைச்ச உளுந்தம்பருப்பு. அதுக்கு அடுத்தது பாரு...’’‘‘பா.ப.’’‘‘பாசிப்பருப்பு.’’‘‘ப.ப.னு இன்னொன்னு இருக்கு. பசிப்பருப்பா?’’‘‘பச்சைப் பட்டாணி. சுண்டல் செய்யறதுக்கு.’’‘‘ஏம்மா இப்படி எழுதி, என் உயிரை வாங்கறே?’’‘‘லிஸ்ட்ல ‘பொ.க. - 2’ எழுதியிருக்கேனா பாரு?’’‘‘ ‘பொ.செ. - 2’ தெரியும். இதென்ன ‘பொ.க. - 2’?’’‘‘ரெண்டு பாக்கெட் பொட்டுக்கடலை.’’‘‘சரி, இது என்ன ப.அ.? ‘பளார்னு அறை’யா?’’‘‘பச்சரிசி. இதெல்லாம் வாங்கிட்டு சின்ன ஐட்டத்துக்கு வா... கடைக்காரர்க்கிட்டே கா.தூ.னு சொல்லு.’’‘‘கா.தூ.ன்னு சொன்னா, காறித் துப்புவாரு.’’‘‘கா.தூ.ன்னா காபித்தூள்டீ. B காபி. அதுல C இருக்கக் கூடாது.’’‘‘குழப்பறியேம்மா.’’‘‘பீபரி காபி. அதுல சிக்கரி கலந்திருக்கக் கூடாது.’’‘‘இதென்ன ‘வெம்’னு எழுதியிருக்கே?’’‘‘வெல்லம்.’’‘‘கீழே இன்னொரு ‘வெம்’ எழுதியிருக்கே?’’‘‘அது வெந்தயம். கடைசியா என்ன இருக்கு?’’‘‘கோ.மா.’’.‘‘கரெக்ட்! கோதுமை மாவு. மளிகைக் கடைக்குப் பக்கத்துலயே காய்கறிக்கடை இருக்கும். அப்படியே காயும் வாங்கிட்டு வந்துடு. முதல் ஐட்டம் என்ன எழுதியிருக்கு?’’‘‘பீர்... ஐயோ... அம்மா... என்ன இது?’’‘‘அது பீர்க்கங்காய்டீ. ‘சுகா’னு இருக்கான்னு பாரு.’’‘‘இருக்கு.’’‘‘அப்படியே ‘புகா’னு இருக்கும். அதையும் பாரு. ‘சுகா’ன்னா சுரைக்காய், ‘புகா’ன்னா புடலங்காய்.’’‘‘அம்மா... ‘காபி’னு எழுதியிருக்கே? காய்கறிக்கடைல ஏது காஃபி?’’‘‘அது காலிஃபிளவர். இப்படி ஷார்ட்டா எழுதறதுக்கு நீ என்கிட்டேருந்து நிறைய கத்துக்கணும். சரி... சரி... சீக்கிரம் கிளம்பு.’’‘‘அம்மா... கடைசியில ப.கி.னு எழுதியிருக்கியே... என்ன அது?’’‘‘நீயே கண்டுபிடி பார்க்கலாம். அஞ்சு நிமிஷம் டைம் தரேன்.’’‘‘அம்மா... கண்டு பிடிச்சிட்டேன்! படித்ததும் கிழிக்கவும். அதானே?’’ - பேப்பரைக் கிழித்து எறிந்தாள்.‘‘பாவி. அது பசலைக் கீரைடீ!’’ கிழிந்த காகிதத்தைப் பொறுக்க ஆரம்பித்தாள் தேவிகா.(அரட்டை தொடரும்)