-டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்தடைகளை தகர்த்த தலைமை!வாழ்க்கை’ என்பது வெள்ளி மலர்களால் தங்க நூலெடுத்து கட்டி, மாலை இட்டுக்கொள்வது அல்ல. சிலருக்கு வேண்டுமானால் அது நடக்கலாம்!ஆனால், ஒவ்வொரு நாளும் ‘சவால்’ என்ற மலர்களை எடுத்து, ‘எதிர்நீச்சல்’ என்ற ஆரத்தில் கட்டி அணிந்து கொள்ளும் மாலையாகவே பலருடைய வாழ்க்கை இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையும்கூட ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது..இன்று ஒரு மருத்துவராய் பல குடும்பங்களையும் குழந்தைகளையும் பார்க்கிறேன். குழந்தைகள் மீது மட்டுமே பெற்றோர் தனிக்கவனம் செலுத்துகிறார்கள். சுமார் 10, 15 வயது வரை குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.அன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்திலுள்ள குழந்தைக்கு அதிகப்படியாக கிடைத்தது இரண்டு மரப்பாச்சி பொம்மைகள்தான். அம்மா ஒன்று அப்பா ஒன்று என்று இரண்டையும் இணைத்து வைத்தே குழந்தைகள் விளையாடினார்கள். பின்னாட்களில் இணை பிரியாமல் வாழ்ந்தார்கள்!அதற்குப் பிறகு சற்றே அதிகப்படியான விளையாட்டுப் பொருள் என்றால் ‘சொப்பு சாமான்கள்’தான். கோயிலை சுற்றியுள்ள கடைகளில், மரத்தினால் பல வண்ணங்களில் செய்யப்பட்ட சட்டி, பானை, அடுப்பு, விளக்கு போன்ற சொப்பு சாமான்கள், பனையோலையால் பின்னப்பட்ட பெட்டியில் மூடி போடப்பட்டு விற்கப்படும்..அவற்றை வாங்கிக் கொடுத்தால், அதில், அன்றாடம் அம்மா சமைப்பது போல் எல்லாம் எடுத்து சமைத்து விளையாடிவிட்டு அதை அப்படியே அடுக்கி, மறுபடியும் பெட்டியில் போட்டு வைத்துவிட வேண்டும். ஆக, அப்படி விளையாடிப் பழகும் குழந்தைக்கு பாத்திரங்களை பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும் என்ற பழக்கமும் இயல்பாகவே வந்தது!அது மட்டுமல்ல... அந்தச் சொப்புப் பாத்திரங்களில் மணல் சோறு, சின்னச் சின்ன காய்கறிகளை நறுக்கி, கூட்டு, குழம்பு வைத்து பரிமாறி விளையாடும்போது அன்பு, பாசம், பொருள் என எல்லாமே பகிர்ந்து, பரிமாறப்படுபவை என்ற எண்ணத்தோடு குழந்தைகளை வளர வைத்தது!ஓரளவுக்கு வசதி படைத்தவர்கள் என்றால் சொப்பு சாமான்களை அலுமினியத்திலோ சில்வரிலோ வாங்கிக் கொடுப்பார்கள். அதுவும்கூட சமையல் பாத்திரங்களாகத்தான் இருக்கும்.ஆக, நடுத்தர வர்க்கத்தினரோ பொருளாதார வசதியில் மேம்பட்ட குடும்பத்தினரோ யாராக இருந்தாலும் பொருளில் மாறுபாடு இருந்ததே தவிர எண்ணத்தில் மாறுபாடு இல்லை. ஒரு பெண் குழந்தைக்கு பந்து வாங்கிக் கொடுப்பதோ ஒண்டி வில் வாங்கிக் கொடுத்து, ‘குறி பார்த்து அடி’ என்று சொல்லிக் கொடுக்காத காலகட்டம் அது!.விளையாட்டுப் பொருள்களிலேயே வேற்றுமை இருந்த காலகட்டம் அது!துப்பாக்கி போன்றவற்றை ஆசைப்பட்டு கேட்டுவிட்டால், ‘‘என்ன... பொம்பள புள்ளக்கி துப்பாக்கியா?’’ என்று கேட்கப்பட்ட ஆணாதிக்கம் நிறைந்த காலகட்டம் அது!ஆக, பெண் குழந்தை என்றால் அவள் விளையாடுவதில்கூட சமையல் பாத்திரங்களைத் தாண்டி அவளுக்கு எண்ணங்கள் இருக்கும் என்றோ, பந்து வைத்து துள்ளி விளையாடும் வாய்ப்புகள் அவளுக்குத் தரப்பட வேண்டும் என்றோ எண்ணப்படாத காலகட்டம் அது!பெண் என்றால் அவளுக்கும் பரந்துபட்ட எண்ணங்கள் இருக்கிறது, அவள் கையில் பந்தைக் கொடுத்தால் பையனைவிட பறந்து, பற்றி வீச முடியும் என்ற எண்ணத்தை புரிந்து கொள்ளாத காலகட்டம் அது!.சமூகம், குடும்பங்கள் இதையும் மீறி இந்த வரையறையைத் தாண்டி வளர்வதற்கு பல பெண் குழந்தைகளுக்கு அன்றைய காலம் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது.காலத்திற்கு ஏற்றாற்போல வளர்ந்தோம், வளர்க்கப்பட்டோம். ஆனால், அந்த வளையத்துக்குள் மட்டுமே சிக்கிக்கொள்ளாமல் வளைந்து கொடுப்பது போல் கொடுத்த பின்பு வீறு கொண்டு எழத் துடித்து, வெற்றிகரமாக எழுந்த பெண்களில் நானும் ஒருவள்!ஏன் இதைச் சொல்கிறேனென்றால், இன்று பல குடும்பங்களைப் பார்க்கிறேன். குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள். ஏனென்று கேட்டால், ‘குழந்தை தனியாக கவனிக்கப்பட வேண்டும்’ என்று மனநல ஆலோசகர்கள் அறிவுறுத்துகிறார்கள்.‘‘அம்மா வேலைக்குப் போவதால் குழந்தையை சரியாக கவனிப்பதில்லை. அதனால்தான் குழந்தை டிப்ரஷனில் இருக்கிறான்!’’ என்று மருத்துவர்கள் சொல்வதை அடிக்கடி கேள்விப்படுகிறேன்..ஆக, கிடைத்ததை மட்டுமே வைத்து விளையாடிய குழந்தைகள் அந்த விளையாட்டையும் தாண்டி, சவால்களை சந்திக்கும் திறனோடு வளர்ந்தார்கள்... வாழ்ந்தார்கள்! ஆனால், இன்றோ குழந்தைகள் என்ன விளையாட்டுப் பொருள்கள் கேட்டாலும் அவை உடனடியாக வாங்கிக் கொடுக்கப்படுகிறது. அதுவும் குழந்தைகள் வளரும் ஒவ்வொரு மாதத்திற்கும் பருவத்திற்கும் தகுந்தவாறு வகை வகையான பொம்மைகளை பெற்றோர் வாங்கிக் கொடுக்கிறார்கள்.ஆண் _ பெண் என்று வேறுபாடு பார்க்காமல் பந்துகள் வாங்கிக் கொடுக்கப்படுகின்றன. ஏன்... துப்பாக்கிகளும் கூட வாங்கிக் கொடுக்கப்படுகின்றன.அன்றோ மரப்பாச்சிகளை வைத்து விளையாடியபோதும் கூட துப்பாக்கியை கையிலேந்தும் துணிச்சலோடு குழந்தைகள் வளர்ந்தார்கள். ஆனால், இன்றோ துப்பாக்கியை கையில் கொடுத்தாலும் அதைப் பயன்படுத்தும் துணிச்சல் இல்லாமலே வளர்கிறார்கள்..ஆக, குழந்தைகள் எந்த மனநிலையில் இருந்தாலும், அவர்கள் எவ்வாறு வழி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான் நான் அடிக்கடி சொல்லும் விஷயம்!குழந்தைகளை கண்டித்து வளர்க்க வேண்டுமென்று அவசியமில்லை... கண்காணித்து வளர்த்தாலே போதும்!மீன் எப்படி தன்னுடைய முட்டைகளை அடைகாக்கும் தெரியுமா? முட்டை இட்டுவிட்டு கண்களாலேயே அதைக் கண்காணித்து வைத்து வளர்க்குமாம். அதனால்தான் கண்களால் தம்முடைய பிள்ளைகளை கண்காணிக்கும் அம்மைக்கு ‘மீனாட்சி’ என்று பெயர்!என்னுடைய அம்மாவும் எங்களை அப்படிக் கண்காணித்தே வளர்த்தார். ஒவ்வொரு செயலிலும் அவர் எங்களுடன் துணை இருந்தார் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒவ்வொரு செயலையும் கண்காணித்தே வளர்த்தார்.ஒரு சமயம், மரியாதைக்குரிய வாஜ்பாய் அவர்கள் தலைமையில் லக்னோவில் ‘தேசிய பொதுக்குழு மாநாடு’ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.‘தேசிய பொதுக்குழு உறுப்பினர்’ என்ற வகையில் நான் லக்னோவுக்குச் செல்ல வேண்டும். அப்போது கட்சியில் என்னுடைய ஆரம்ப நாட்கள். உதவியாளர் கிடையாது, பாதுகாப்பு அதிகாரிகள் கிடையாது, இன்னொருவரை துணைக்கு அழைத்துச் செல்வதற்கு என்னுடைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய சொந்த செலவில் 30 - 40 ஆயிரம் அந்தப் பயணத்திற்கு செலவு செய்யும் நிலையில் இல்லை. துணைக்காக இப்படிச் செலவு செய்து ஒருவரை கூட்டிச் செல்லும் நிலை இல்லை என்பதால் தனியாகவே பயணித்தேன்..நள்ளிரவு 12 மணிக்கு இறங்கி, அங்கு ஏற்பாடு செய்திருந்த காரில் தனியாகவே பயணிக்கிறேன். அப்படிப் பயணம் செய்யும்போது லேசாக வயிறு வலிப்பது போலிருந்தது. அதனால், அந்த மொழி தெரியாத ஊரில் 12:30 மணிக்கு ஓர் மருந்துக் கடையை தேடிக் கண்டுபிடித்து மருந்து வாங்கிக் கொண்டு, தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறையை நோக்கி விரைந்தேன். அங்கு சென்று சேர்ந்தபோது அதிகாலை 1:30 மணி.அதன் பின்பு, தமிழகத்திலிருந்து வந்தவர்களைத் தேடி, அவர்களோடு சேர்ந்து அந்தக் கூட்டத்திற்குச் சென்று திரும்பினேன். அந்தக் கூட்டத்தில்தான் மரியாதைக்குரிய வாஜ்பாய் அவர்கள் பேசினார்கள்.‘‘இந்தக் கூட்டம் நடக்கும் இடம் Lucknow. ஆக, Luck - Now. நமக்கு இப்போது அதிர்ஷ்டம் வந்திருக்கிறது. எனவே நாம் வெற்றி பெறுவோம்!’’ என்று அவருக்கே உரிய பாணியில் அழகாக பேசியது இப்போது நினைவுக்கு வருகிறது.நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் சென்று என்னுடைய அம்மாவை பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. வட இந்தியாவில் நடந்த அந்தக் கூட்டத்திற்கு சவாலுடன் நான் கலந்து கொண்டு பெருமையோடு திரும்பிய அடுத்த நாள் என்னுடைய அம்மாவை பார்க்க சென்றேன். அப்போது என்னுடன், இயக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சிலரும் வந்திருந்தார்கள்..உத்தரப்பிரதேசத்திற்கு தனியாக சென்று வந்த அனுபவம் பற்றி அம்மாவிடம் சொன்னேன். அப்போது அம்மா, வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு என்னுடைய சிறு வயது நினைவுகளை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.‘‘இசை... சிறு வயதில் தனியாக எங்கும் போக பயப்படுவாள். நான் ஒரு அறையிலிருந்து அடுத்த அறைக்கு அவளை விட்டுவிட்டுச் சென்றால்கூட, ‘எங்க அம்மா எங்கே?’ என்று அழ ஆரம்பித்து விடுவாள். அப்படி அழுதால், எப்படியும் இரண்டு மணி நேரத்திற்காவது அழுத அந்த ஏக்கம் அவளிடம் நிலைத்திருக்கும்.அப்போது நான் அவளுடைய கண்ணீரைத் துடைத்து, ‘இப்படி பயப்படக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும்’ என்று ஆற்றுப்படுத்துவேன். அடுத்த அறைக்கு நான் சென்றபோது தனியாக இருக்க பயந்த என்னுடைய மகள் இன்று பறந்து தனியாக சென்றுவிட்டு வந்திருக்கிறாள்!’’ என்று புளகாங்கிதம் அடைந்தார்..நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில் எங்களுக்குத் தனியாக முழுவதுமாக பெற்றோரின் கவனம் கிடைத்தது என்று சொல்ல முடியாது. ஆனால், தவித்த நேரங்களில் தகுந்த அறிவுரைகள் கிடைத்தன. அவைதான் நாங்கள் பிற்காலத்தில் அறவழியில், அறிவு வழியில் அழுத்தத்தோடு நடைபோட உதவியது! தொடர்ந்து உதவுகிறது!!ஆக, குழந்தைகள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை கண்காணித்து சரிசெய்து, அவர்கள் சரியான பாதையில் செல்கிறார்களா என்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதே இன்றைய தாய்மார்களுக்கு நான் சொல்லும் செய்தியாகும்!(சந்திப்போம் சாதிப்போம்)தொகுப்பு: சிவ. ரமேஷ் ராஜா.சிநேகிதிகளே... மேதகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் கேட்பதற்கு உங்களிடம் கேள்விகள் ஏதேனும் உள்ளனவா? அவற்றை சுருக்கமாக எழுதி அனுப்புங்கள். நெருக்கமான சிநேகிதியை போல பதில் தர காத்திருக்கிறார் கனிவான கவர்னர்!அனுப்ப வேண்டிய முகவரி:Ask அக்கையா,306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,சென்னை - 600 010.E-mail: snehidhi_readers@kumudam.com