சீர்காழி சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, யாகசாலை அமைக்க, கோயிலின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது குவியல் குவியலாக ஐம்பொன் சிலைகளும் தேவாரப் பதிகங்கள் எழுதப்பட்ட செப்பேடுகளும் கிடைத்துள்ளன.சின்னச் சிட்டு கமென்ட்: இது ஆன்மிக பூமி!.மெட்ரோ ரயில் போன்ற ‘வாட்டர் மெட்ரோ’ என்ற நீர் வழி போக்குவரத்தை, ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, கொச்சி துறைமுகத்தில் துவக்கி வைத்தார்.சின்னச் சிட்டு கமென்ட்: வழியில மீன்லாம் பிடிச்சு, பொரிச்சு தருவாங்களா?.வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர காலகட்டத்தைக் குளுமையாக எதிர்கொள்ள, வீடுகளுக்கு நேரடியாக சென்று ஐஸ்க்ரீம் விற்பனை செய்யும் வகையில் ‘இல்லம் தேடி ஆவின்’ திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: ப்பா... கேட்கவே செம கூலாக இருக்.இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் சமீபத்தில் நடைபெற்றது மாரத்தான் ஓட்டப்பந்தயம். இதில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மதுஸ்மிதா, நமது பாரம்பரிய ஆடையான ‘சம்பல்புரி கைத்தறி புடவை’யை உடுத்திக்கொண்டு 42 கி.மீ. தொலைவை 5 மணி நேரத்தில் ஓடி கடந்துள்ளார்.சின்னச் சிட்டு கமென்ட்: நான் றெக்கை கட்டிப் பறக்கறேன்... அவங்க புடவை கட்டி ஓடறாங்கப்பா!.ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவாயிலுக்கு பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரின் பெயரையும் சூட்டி, அந்நாட்டின் கிரிக்கெட் நிர்வாகம் கௌரவித்துள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: BRAVO!.பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2020ம் ஆண்டில் கட்டப்பட்ட வீட்டுக்கு மின் இணைப்பு வேண்டுமென பலமுறை முறையிட்டும் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார் நெல்லையைச் சேர்ந்த சமரச செல்வி. மின் இணைப்பு இல்லாததால் தாங்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க நினைத்த அவர், தங்கள் வீட்டுக்குள் நுழைந்த கண்ணாடி விரியன்’ பாம்பை கொன்று, கை(பை)யோடு எடுத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சின்னச் சிட்டு கமென்ட்: ‘விரைவில் மின் இணைப்பு கொடுத்துடறோம்’னு சமரச செல்விகிட்ட சமரசமாப் பேசியிருப்பாங்களோ!.பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் ஓட்டை விழுந்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.சின்னச் சிட்டு கமென்ட்: முதல்ல மேல ‘ஓசோன்’ல ஓட்டைன்னு சொன்னாங்க. இப்போ கீழ ‘ஓசன்’ல ஓட்டைன்னு சொல்றாங்க. என்னமோ போடா மாதவா..பிரேசில் நாட்டு ஆய்வாளர்கள், 14 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்துக்கு மேல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு முதுகு வலி மற்றும் உளவியல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: அதனாலதான் இந்த சின்னச் சிட்டு அதெல்லாம் பயன்படுத்தாம ஜாலியா சிறகடிச்சி பறக்கறேன். பெற்றோரே உஷார்! மக்கள்தொகை பெருக்கத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது!சின்னச் சிட்டு கமென்ட்: ஹி...ஹி...ஹி....போரால் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய அரசு தொடங்கியுள்ளது. ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தின் கீழ், 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்துள்ளனர். அவர்கள், அங்கு தயாராக உள்ள ‘ஐ.என்.எஸ். சுமேதா’ கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். அனைத்து இந்தியர்களும் பத்திரமாக நாடு திரும்ப துரிதகதியில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.சின்னச் சிட்டு கமென்ட்: ‘சமாதான சிட்டாய்’ சூடானுக்கு நான் போய் வரத் தயார்!