- ராஜபாரதி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றுக்கு சமீபத்தில் 46-வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த ரயிலின் பெயர் ‘வைகை எக்ஸ்பிரஸ்’! ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் மணிக்கு 105 கி.மீ., வேகத்தில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில். இந்தியாவிலேயே முதன்முறையாக மீட்டர் கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த ரயிலில்தான். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பகல் நேர விரைவு ரயிலாக மதுரை - சென்னை இடையே தன்னுடைய பயத்தைத் துவங்கியது.சின்னச் சிட்டு கமென்ட்: ஹேப்பி பர்த்டே வைகை எக்ஸ்பிரஸ்!.ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்தில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவின்போது‘India Day’ கொண்டாடப்பட்டு வருகிறது. 2023ஐ சிறுதானிய ஆண்டாக அறிவித்தது ஐ.நா.சபை. இதன் காரணமாக விழாவில், சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட வகை வகையான இட்லிகள், வெவ்வேறு வடிவங்களில் பரிமாறப்பட்டன. இந்த இட்லித் திருவிழாவின் இன்னொரு ஹைலைட், பிரதமர் மோடியின் உருவம் கொண்ட 77 கிலோ பிரமாண்டமான இட்லி ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.சின்னச் சிட்டு கமென்ட்: ‘குஷ்பு இட்லி’ பத்தி அவங்களுக்குத் தெரியாது போல!.‘எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப் பெண்’ என்ற பெருமை பெற்றுள்ளார் முத்தமிழ்ச்செல்வி. சென்னையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவின்போது ‘கல்பனா சாவ்லா’ விருதை முத்தமிழ்ச்செல்விக்கு வழங்கி கௌரவித்தார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சின்னச் சிட்டு கமென்ட்: இமயம் ஏறி தமிழன் அன்று புலிக்கொடியை நாட்டினான். இன்று தமிழ் சிங்கப் பெண் சாதித்திருக்கிறார்!.சென்னை சின்னமலை பகுதியைச் சேர்ந்த யோகா பயிற்சியாளரான சுதா, சிலம்பம் சுற்றுவதில் வல்லவர். நிறைமாத கர்ப்பிணியான இவர், தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்து, நோபல் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். கணவர் வல்லபன் மற்றும் பயிற்சியாளர் பரசுராம் ஆகியோர் தந்த ஊக்கம்தான் இந்தச் சாதனை நிகழ்த்த காரணம் என்கிறார்.சின்னச் சிட்டு கமென்ட்: ஓ! அப்ப அவங்க என்னைய விரட்டுறதுக்காக அந்தக் கம்பை சுத்தலையா?