-ராஜபாரதிநிலவுக்கு ‘சந்திரயான்-3’ ராக்கெட்டை அனுப்பியது போல ‘சமுத்திரயான்’ என்ற சப்மெர்சிபில் கப்பல் ஒன்றை மூன்று ஆராய்ச்சியாளர்களுடன் ஆழ்கடலுக்குள் அனுப்பவிருக்கிறது இந்தியா. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சைனா உள்ளிட்ட நாடுகளே இதுவரை ‘Deep Sea exploration’ என்ற ஆழ்கடல் ஆய்வு முயற்சியில் இறங்கியிருக்கின்றன. கடலுக்கு அடியில் இருக்கும் கனிம வளம் மற்றும் அங்குள்ள உயிரினங்கள் பற்றி ஆராய்வதற்காக இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: ‘டைட்டானிக்’ பக்கம் மட்டும் போயிடாதீங்க அப்பூ!.மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. அதேபோல அவருடைய சொந்த ஊரான மதுரையில், தமிழக அரசு சார்பில் 50 லட்ச ரூபாய் செலவில் வைக்கப்பட்ட வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.சின்னச் சிட்டு கமென்ட்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய அந்தச் ‘சிம்மக்குரலோனுக்கு’ நானும் ரசிகைதான்!.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்திலுள்ள ‘ராம்பூர் பாகில்’ என்ற கிராமத்தில் பிறந்தவர் பிந்தேஸ்வர் பதக். மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றுவதை தடுக்கவும், திறந்தவெளி மலம் கழித்தல் முறையை முற்றிலும் அகற்ற வேண்டும் என்பதற்காகவும் தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர். ‘சுலப் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பை நிறுவி, இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான கழிவறைகளை அமைத்த பெருமைக்குரியவர். இவர், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி காலமானார்.சின்னச் சிட்டு கமென்ட்: நாட்டு நலனுக்காக பாடுபட்ட இந்தத் தூய ஆத்மா, சுதந்திர தினத்தில் விடுதலை அடைந்துள்ளது!.இந்தியப் பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், உத்தரப்பிரதேசம் பனாரஸ் நகரில் ரயில் ஒன்று ட்ராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு வெகு நேரமாக தத்தளித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள லெவல் கிராஸிங்கில் வாகனங்கள் கடந்து செல்வதற்காக ரயில் ஒன்று நீண்ட நேரம் காத்திருந்து சென்ற வீடியோ, இணையதளத்தில் வைரலாகியுள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: வானத்தில் பறக்கும் எனக்கு ‘ட்ராஃபிக் ஜாம்’ பத்தி கவலை இல்லீங்கோ!