-சேலம் சுபாஅந்தப் பூங்காவில், பெண் ஒருவர், ஜெயகாந்தனின் கதைகளை அழகாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதைகளின் காட்சிளுக்கேற்ப ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார்கள் இளைஞர்கள். இந்திய கதைசொல்லிகள் வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல்முறை! உளவியல் நிபுணரான ரேணு மீராதான் அந்தப் பெண். அவரிடம் பேசினோம்.பெயர், ஊர், குடும்பம், கல்வி?‘‘ ‘ரேணு மீரா’ என்கிற ரேணுகா. பிறந்தது, வளர்ந்து, திருமணமாகி வசிப்பதெல்லாம் சென்னைதான். தந்தை வி.வி.மூர்த்தி, அம்மா கஸ்தூரி. என்னுடைய கணவர் தினகரனுக்கு அரசு வங்கியில் பணி. ஜெய்கணேஷ், சந்த்ரராஜ் என இரண்டு மகன்களும் படித்து முடித்து, பணிபுரிந்து வருகின்றனர். திருமணத்துக்கு முன்பு எம்.ஏ., இங்கிலீஷ் முடித்தேன். மணமாகி குழந்தைகள் பிறந்ததும், ஹைதராபாத்தில் சிறப்புப் பயிற்சிக் கல்வியை பயின்றேன் (PG Professional Diploma in Special Education). தவிர, கவுன்சிலிங் சைக்காலஜி முடித்து, டிகிரி வாங்கினேன். அதில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கான உளவியல் ஆலோசனைகள் தரும் ஸ்பெஷல் பேரண்டிங் கோர்ஸ் எடுத்துப் படித்தேன். திருமணத்திற்கு முந்தைய ஆலோசனைகளுக்கான உளவியல் படிப்பையும் முடித்துள்ளேன்.’’.உளவியல் ஆலோசகராக உங்கள் பணிகள் என்னென்ன?‘‘2001-ல் படிப்புகளை முடித்ததும் சிறப்புக் குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோருக்கு இலவச கவுன்சிலிங் சேவையாற்ற துவங்கினேன். ஆனால், ‘இலவசமாகத் தந்தால் எந்தப் பயனுமில்லை!’ என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்த நான், இயலாதவர்களுக்கு மட்டும் இலவச கவுன்சிலிங் தந்து மற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்தேன். தவிர, ட்ரான்ஸ்ஃபர்மேஷன் கோச்சிங்கிலும் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதாவது, இன்று இருக்கும் நிலையிலிருந்து மேம்பட்ட அடுத்த நிலைக்கு நகர்த்திச் செல்வதற்கான ஆலோசனைகளைத் தந்து வருகிறேன். தவிர, கல்லூரிகள், வணிக நிறுவனங்களிலும் பயிற்சியளித்து வருகிறேன்.’.‘கதைசொல்லி’ ஆர்வம் எப்படி வந்தது? ‘‘இங்கு என்னுடைய அம்மாவை பற்றி சொல்ல வேண்டும். அவர், சிறந்த புத்தகப் பிரியர் மட்டுமல்ல... எழுத்தாளரும்கூட! அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள் அந்நாளில் பிரபல பத்திரிகைகளில் நிறைய வெளிவந்துள்ளன. அவர் எனக்கு சொல்லித் தந்த ராமாயணம், மகாபாரதம், வாசிக்கவைத்த தமிழ் எழுத்தாளர்களின் புதினங்களும்தான் என்னுடைய கதைசொல்லும் ஆர்வத்திற்கு வித்திட்டன. அப்பாவுக்கும் கணவருக்கும் அரசுத்துறையில் பணி என்பதால், சிறு வயதிலிருந்தே இந்தியாவின் பல ஊர்களுக்கும் மாற்றலாகி சென்றதால், அங்கிருந்த கலாசாரமும் எனக்கு அறிமுகமானது.அம்மாவின் மூலம் ஜெயகாந்தனின் ரசிகையான நான், அவருடைய கதைகளுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறேன். ஜெயகாந்தன் மீதான ஈர்ப்புக்கு வேறு காரணமும் இருக்கிறது. கல்லூரி நாட்களில் சுமார் மூன்று வருடங்கள் ரஷ்யன் கலாசார மையத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தபோது, அதன் தொடர்பாக ஜெயகாந்தன் ஐயாவுடன் பயணிக்கும் பாக்கியம் கிடைத்தது.நூல்கள் பற்றிய கலந்துரையாடல்கள், கம்யூனிசம் குறித்த தெளிவுகள், சிறுகதையின் பரிணாமங்கள் என நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அவருடைய கதைகளைப் படித்ததை விட அருகிலிருந்து பார்த்து வியந்த அவரின் கர்வமும் மிகுந்த ஆளுமைத்திறனும்தான் என்னுடைய மனதில் அவருக்கென தனி இடத்தை ஒதுக்கியது. ஜெயகாந்தன் கதைகள் பற்றிய ஆய்வையும் என்னுடைய சுய முயற்சியால் செய்து வருகிறேன். ஒரு நிகழ்வில் ‘ஜெயகாந்தினி’ எனும் பட்டம் எனக்குக் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.’’.இளைஞர்களை வைத்து, ஜெயகாந்தன் கதைகளுக்கு ஓவியம் வரையவைத்த அனுபவம் குறித்து...‘‘‘கதைசொல்லி பயிற்சி’யும் முடித்துள்ளதால் அது தொடர்பான பயிற்சிப் பட்டறைகளையும் கல்லூரிகளில் நடத்தி வருகிறேன். ஐம்பெரும் காப்பியங்கள் முதல் ஜெயகாந்தன் கதைகள் வரையில் உளவியலை முன்னிலைப்படுத்திய கதைகளை கொரோனா காலகட்டத்தில் சுயமாக வடிவமைத்து ஆன்லைனில் சொன்னேன். கதை சொல்வது சமூகத்தின் வயது பாகுபாடற்ற எந்தத் துறை மனிதர்களையும் மேம்பட வைக்கும் எளிய வழியாக உள்ளதை அப்போது உணர்ந்தேன்.சமீபத்தில் மாணவர்கள் கலந்து கொண்ட கண்காட்சியில் கதைசொல்லியாக பங்கேற்க நேர்ந்தது. இதைத் தாண்டி என்ன செய்யலாம் என சிந்தித்தேன். மாணவர்களை வைத்து, நான் சொல்லச் சொல்ல அதை உள்வாங்கி, வரையும் ஐடியா வந்தது. இந்த முயற்சியை இன்னும் யாரும் செய்யவில்லை என்பது தெரிந்தது. இதற்காக முன்வந்த மாணவமணிகள் ஆறு பேரைக் கொண்டு சமீபத்தில் சென்னை அண்ணா நகர் ‘டவர் பார்க்’கில் 2 நாட்கள் நிகழ்வாக இந்தப் புது முயற்சியை செய்தோம்.உண்மையில் இன்றைய மாணவர்கள் கெட்டிக்காரர்கள்! ஜெயகாந்தனின் கதைகளைப் புரிந்து ஓவியம் வரைவதென்பது சவாலான விஷயம். ஒரு கதை எப்படி அவர்கள் மனதில் பதிர்ந்து, எண்ணங்களை மேம்படுத்துகிறது என்பதை நான் பெருமிதமாக உணர்ந்த தருணம் அது. வரும் காலத்தில் இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதைசொல்லல் பற்றிய பெரிய விழிப்பு உணர்வு சாதனையை நிகழ்த்த உள்ளேன்’’ என்றார், உற்சாகமாக!