நிலவில் ‘சந்திரயான் - 3’ தடம் பதித்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, இனி ‘தேசிய விண்வெளி தின’மாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கந்தகம், இரும்பு, கால்சியம், குரோமியம், டைட்டானியம், அலுமினியம், மேங்கனிஸ், சிலிகான், ஆக்ஸிஜன் ஆகியவை நிலவில் இருப்பதாக ‘சந்திரயான் - 3’ உறுதி செய்துள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: Chandrayan on moon. Indians on cloud nine!.தமிழ்நாடு காவல்துறையினரின் நலனுக்காக ‘வாட்ஸ்ஆப் குரூப்’ ஒன்றை அமைத்து செயல்படுமாறு டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.சின்னச் சிட்டு கமென்ட்: சபாஷ்! சரியான முடிவு!என்னையும் அதில் சேர்த்துப்பாரா?.உலக தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.சின்னச் சிட்டு கமென்ட்: இன்னும் நிறைய தங்கம் வாங்குங்கங்கண்ணா! நான் எதுக்கும் நகர்ந்து உட்கார்ந்துக்கறேன். ஏன்னா... ஈட்டி என் மேல பட்டுடுச்சுன்னா என்னாகுறது!.படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், திட்ட முதலீட்டு தொகையை 5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம். தவிர, பயனாளிகளின் வயது வரம்பும் 35லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: ‘வேலை கிடைக்கவில்லை’ என்று புலம்பாமல், இளைஞர்கள் இத்தகைய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொண்டால் சரி!.செஸ் உலகக் கோப்பை போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார்.சின்னச் சிட்டு கமென்ட்: ரோவர் பிரக்யானும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் இந்தியாவுக்குக் கிடைச்ச பொக்கிஷங்கள்!.பொதுவாகவே திருமண வரன் பார்க்கும் இணையதளங்கள் (Matrimony) எந்த ஒரு சட்டம் அல்லது விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதில்லை. அத்தகைய இணையதளங்களில் ஏற்படும் மோசடிகளில் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே அவற்றுக்கான உரிய விதிகளை வகுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சின்னச் சிட்டு கமென்ட்: நல்ல உத்தரவு! விரைவில் அமலுக்கு வந்தால் நல்லது!.மத்திய அமெரிக்க நாடான Nicaragua விலங்கியல் பூங்காவில், ‘ஆல்பினோ பூமா குட்டி’ (Albino puma cub) ஒன்று பிறந்துள்ளது. அழியும் நிலையிலுள்ள இவ்வகை உயிரினங்கள் உலகத்திலேயே மொத்தம் நான்குதான் இருக்கிறதாம். பிங்க் நிற மூக்குடன் உடல் முழுக்க வெள்ளைவெளேரென பிறந்துள்ள இந்த அழகிய குட்டிச் செல்லத்தைக் காண, அந்தப் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம்!சின்னச் சிட்டு கமென்ட்: எங்களோட குருவி இனமும் அழியும் தருவாயில்தான் இருக்கு... அது உங்களுக்குத் தெரியும்தானே?.டெல்லியில் வருகிற செப்டம்பர் 9, 10 தேதிகளில் நி20 மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடக்கும் பிரகதி மைதானத்தில் வெண்கல நடராஜர் சிலையை நிறுவ உள்ளார்கள். இதற்காக சுவாமி மலையில் 28 அடி நடராஜர் சிலை 10 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்தபதிகள் ஸ்ரீகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோழர்கால கலைநயத்துடன் உருவாக்கியுள்ள இந்தச் சிலை, 25 டன் எடை கொண்டது.சின்னச் சிட்டு கமென்ட்: தில்லை அம்பல நடராஜா... செழுமை நாதனே பரமேசா!.பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டது ஃபுகுசிமா அணு மின் நிலையம். இங்கு ஆயிரம் கலன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரசாயன கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கொட்டத் துவங்கியுள்ளது ஜப்பான் அரசு. ‘‘இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கோ மீன்களை உண்ணும் மனிதர்களுக்கோ எவ்வித தீங்கு ஏற்படாது!’’ என்று ஒரு சில விஞ்ஞானிகளும், ‘‘தீமை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!’’ என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.சின்னச் சிட்டு கமென்ட்: இப்போ நான் மீன் சாப்பிடலாமா? கூடாதான்னு தெரியலையே!