- சி.எம்.ஆதவன் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு ‘மாநில இளைஞர் விருது’ வழங்கி கௌரவிக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த விருதை சமீபத்தில் பெற்றுள்ளார் மதுரையை சேர்ந்த சந்திரலேகா. இந்த ஆண்டில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த கையோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றுள்ள அவரை சந்தித்தோம்..இளம் வயதிலேயே சமூக சேவைக்கு வந்து விட்டீர்களே...‘‘டாக்டர் அப்துல்கலாம், சகாயம் ஐ.ஏ.எஸ்., இருவரும் எனக்கு ரோல் மாடல். அவர்கள் வழியைப் பின்பற்றிச் சேவை செய்ய விரும்பினேன். இதற்கு வயது தடையாக இருக்கும் என்பதில் உடன்பாடில்லை, மனசுதான் வேண்டும். இதற்காக, சமூக சேவைக்கான முதுகலைப் பட்டப்படிப்பும் டிப்ளமோ சைக்கோதெரபியும் படித்தேன்.ஒரு சமயம் திருப்பரங்குன்றத்தில் சாலையோரத்தில் ஆதரவற்று கிடந்த மூதாட்டியைப் பார்த்தேன். பட்டினியோடு இருந்த அவரின் தோற்றம் என்னை கலங்கச் செய்தது. அவருக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, என்னாலான சிறு உதவிகள் செய்தேன். அதன்பின் சாலையோரம், ரயில்வே ஜங்ஷன் என முதியோரைத் தேடிச் சென்று உதவினேன்..முதலில் பெற்றோர் தரும் பாக்கெட் மணியை வைத்துதான் செலவு செய்தேன். இதைப் பார்த்த சக கல்லூரி நண்பர்களும் மாணவர்களும் நிதி உதவி செய்தனர். கல்லூரியின் இயக்குனர், செயலாளர், முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் என எல்லோருமே எனக்கு சப்போர்ட் செய்ததால், வேலை எளிதானது. இப்படியாக ஆரம்பித்து இன்று, தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் வரை வந்திருக்கிறது.’’.பெற்றோர் ஆதரவு எப்படி இருந்தது?‘‘மதுரை உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள எழுமலைதான் என்னுடைய சொந்த ஊர். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன். அப்பா செல்வராஜன், விவசாயி. அம்மா பசுபதி, அப்பாவுக்குத் துணையாக இருப்பார். நான், தம்பி அருள்குமார், தங்கை சௌந்தர்யா என 3 பிள்ளைகள். எங்களை கல்லூரி வரை படிக்க வைப்பதே சிரமம்தான். ‘பிறருக்கு உதவவேண்டும்’ என்பதை எங்கள் சிறுவயதிலிருந்தே பெற்றோர் ஊக்குவித்தனர்.’’.கிராமப் பகுதியிலிருந்து இந்த வளர்ச்சி எளிதாக இருந்திருக்காதே?‘‘உண்மைதான். பள்ளியில் தடகள வீராங்கனை நான். போட்டிகளுக்குப் செல்கிறபோது கால் டவுசர்தான் அணியணும். ‘பொம்பளப் புள்ள இப்படி டவுசர் போட்டுக்கிட்டு போறா பாரு!’ என ஊர்க்காரர்கள் விமர்சிப்பார்கள். மாநில அளவில் 3 போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில்தான் மதுரை மன்னர் திருமலை கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. எங்கள் ஊரிலிருந்து இந்தச் சலுகை பெற்ற முதல் பெண் நான்தான்! என்னுடைய வளர்ச்சியைப் பார்த்தவர்கள் இப்போது, தங்கள் பிள்ளைகளை ஸ்போர்ட்ஸில் சேர்க்க ஆலோசனை கேட்கிறார்கள். ஊர் என்ன சொன்னாலும், நமக்குச் சரியெனப் படுவதை செய்துவிட வேண்டும்.’’.வேறு என்னவெல்லாம் சேவை செய்கிறீர்கள்?‘‘கல்லூரியில் படிக்கும்போதே ‘நிஹிசீகிஷி’ என்கிற சேவை மையத்தைத் தொடங்கி, அஜய் குமார், தியானேஸ்வரன், சரோஜா.வி.குமார் ஆகியோர் இணைந்து நடத்தி வருகிறோம். இப்போது, 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் நல்வாழ்வுக்காக வழிகாட்டுவதும், அவர்களுடைய திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துவிட்டு, வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதும் எங்களின் தலையாய பணி. தவிர, ஆதரவற்ற முதியோரை மீட்டு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம். கவுன்சிலிங் கொடுத்து, அவர்களை குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியையும் செய்து வருகிறோம்.நாட்டு நலப்பணித்திட்டம், நேரு யுவகேந்திரா, ரோட்டரி உள்ளிட்ட பல தன்னார்வலர் சங்கங்களோடு இணைந்து சேவையாற்றி வருகிறோம். விவசாயிகள் & மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, குழந்தைகள் & இளஞ்சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு விழிப்பு உணர்வு, போதைப்பழக்கம், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல், ரத்த தானம், வேலைவாய்ப்பு முகாம் என சமூகம் சார்ந்து பல நிகழ்ச்சிகளை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்திலும் இருந்தேன். அப்போது, தெரு நாடகம் மற்றும் ‘விவீனீமீ’ கலைகள் மூலமாகவும் மேடைப் பேச்சாளராக இருந்தும், மக்களுக்கு விழிப்பு உணர்வு உண்டாக்கும் பணிகளைச் செய்தேன். படிக்கும் காலத்திலிருந்தே சமூகம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.’’.சுற்றுச்சூழல் சார்ந்து நீங்கள் இயங்குவதில்லையா?‘‘நம் சுற்றம் நன்றாக இருந்தால்தானே நாம் நன்றாக இருக்க முடியும்? பள்ளியில் ‘ஜூனியர் ரெட் கிராஸ்’ அமைப்பில் இருந்தேன். அந்தச் சமயத்தில் சேவை செய்ய வேண்டுமென்கிற எண்ணம் இன்னும் ஆழமாக உண்டானது. அப்போதே, எங்கள் ஊரைச் சுற்றிலுமுள்ள கிராமங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் புங்கை, கொன்றை, நிலவேம்பு, மஞ்சணத்தி என 7,500க்கும் மேற்பட்ட கன்றுகள் நட்டு வைத்தோம். அவை இன்றும் நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன.’’.உங்கள் எதிர்காலத் திட்டம்?‘‘இப்போது, ‘அழகுசிறை’ என்ற கிராமத்திலுள்ள கிளரீசியன் கருணை இல்லத்தில் பணியில் இருக்கிறேன். ‘வேண்டாம்’ என ஒதுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் மையம் அது. அரசு விதிப்படி, பல குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டு, அவர்களுக்குப் புதிய வாழ்க்கை கிடைக்கிறது. இந்தப் பணி மனநிறைவாக இருக்கிறது. எதிர்காலத்தில், ஆதரவற்றோருக்கான இல்லம் தொடங்க வேண்டும். மனித நேயம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். காலம் முழுமைக்கும் இந்தச் சேவையைத் தொடர வேண்டும். ஆதரவற்றோர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு!’’ என்கிறார் சந்திரலேகா..வாருங்கள் இளைஞர்களே!‘‘இன்றைய இளைஞர்களுக்கு சேவை செய்யணும்ங்கிற எண்ணம் ரொம்பவே குறைவா இருக்கு. நிறைய பேர் மொபைல் அடிக்ஷன், டிஜிட்டல் அடிக்ஷன்னு தேவையில்லாத விஷயங்கள்ல கவனச் சிதறலோட இருக்காங்க. நம்மக்கிட்ட இருக்குற இளைஞர் சக்தி ரொம்பவே பெருசு. நம்ம இளைஞர்கள்ல வெறும் ஒரு சதவிகிதம் பேராவது சமூக சேவைக்கு வந்தாக்கூட போதும். இங்க ஆதரவற்ற எல்லோருக்கும் சேவை செஞ்சிடலாம்!’’ என்று தன்னுடைய ஆதங்கத்தை இன்றைய இளைஞர்களுக்குக் கோரிக்கையாக வைக்கிறார் சந்திரலேகா.