- எஸ். மல்லிகா பத்ரிநாத் ஆடியில் அம்மன் வழிபாட்டுடன் தொடங்கும் பண்டிகைகள், அடுத்தடுத்து, ஆவணி, புரட்டாசி என்று தொடரும். அவற்றில் முக்கியமாக ‘வரலக்ஷ்மி விரதத்தை’ சுமங்கலிகள் பலரும் கடைப்பிடிப்பார்கள்..காரணம், இந்த விரதம் இருப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதோடு, குடும்பத்தில் மங்களங்களும் சேரும். சரியாகச் சொன்னால், இந்த விரதம் இருப்போர் வீட்டை தேடிவந்து மஹாலக்ஷ்மி தங்குவாள் என்பது ஐதிகம்.ஆடி அமாவாசைக்குப் பிறகு பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் ‘வரலக்ஷ்மி விரதம்’ அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்..சிறுவயதில் இருந்தே பண்டிகைகள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆர்வத்துடன் கவனிப்பதோடு, பெரியவர்களுக்கு என்னாலான சிறுசிறு உதவிகளும் செய்வேன். என்னைப் போலவே எங்கள் கூட்டுக் குடும்பத்தில் பெண் குழந்தைகள் எல்லோருமே இத்தகைய பண்டிகைகள், விரத நாட்களில் முதல் நாளே பலப்பல வேலைகள் செய்வோம்.வரலக்ஷ்மி விரதத்திற்கு உரிய அம்மன் அலங்காரம், ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருக்கும். பெரிய வெள்ளிக் குடத்திற்கு பெரியம்மா மிக அழகாக கண், மூக்கு, உதடு வரைந்து வைப்பார்.வீட்டிலேயே மாவிலைகளை நாங்களே பார்த்துப் பறித்து வருவோம். தேங்காயை பார்த்துப் பார்த்து பெரியதாக தேர்ந் தெடுப்போம். பூஜையறையில் இடம் குறைவு; எல்லா பெண்களும் அமர்ந்து பூஜை செய்ய வேண்டுமென்பதால், வீட்டு வரவேற்பறையில் அலங்காரங்கள் நடக்கும்..வரலக்ஷ்மி விரதத்தில் முக்கியமாகச் செய்ய வேண்டியது, ஒரு மண்டபம் அமைப்பது. அதில் வாழையிலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது திருமகளின் திருமுகம் வரையப்பட்ட வெள்ளிக் குடத்தை வைப்பார்கள் (பலரும் செம்புக் கலசத்திலேயே இந்த அலங்காரத்தைச் செய்வர்). அந்தக் குடத்தின் (கலசத்தின்) உள்ளே 3 கைப்பிடி பச்சரிசி, 9 வெற்றிலை, 9 களிப் பாக்கு, வாழைப்பழம், 9 விரலிமஞ்சள், காதோலை கருகமணி, 9 திராட்சை என எல்லாமே போடுவார்கள் (இது அவரவர் குடும்ப வழக்கப்படி மாறும். நான் சொன்னது எங்கள் குடும்ப வழக்கம்). மஞ்சள் நூலில், ஒரு விரலி மஞ்சள் வைத்துக் கட்டி, அந்தச் சரடினை கலசத்தின் கழுத்துப் பாகத்தில் கட்டுவார்கள். மேலே மாவிலைக் கொத்து, தேங்காய் வைப்பார்கள்.லக்ஷ்மியை மஞ்சளிலும் செய்வார்கள். மிகமிக அழகாக அலங்கரிப்பார்கள். காலப்போக்கில் பலரும் வெள்ளி முகம் வைக்க ஆரம்பித்தார்கள். ‘வரலக்ஷ்மி’ என்றால் ‘வரம் தரும் லக்ஷ்மி’ என்பது பொருள். ‘நம் இல்லம் தேடி வரும் லக்ஷ்மி’ என்றும் கொள்ளலாம்..எப்பொழுதும் போல மஞ்சள் பிள்ளையாரும் உண்டு. 9 முடி போட்ட நோன்புக் கயிறு கட்டுவார்கள். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்த முல்லைக் கொடியிலிருந்து அரும்புகளை பறித்தெடுத்து நோன்புக்கயிற்றில் வைத்துக் கட்டுவார்கள். எத்தனை பெண்கள் என்று கணக்கு எடுத்து எல்லோருக்கும் ஒரு நோன்புக் கயிறு, வரலக்ஷ்மிக்கு ஒரு நோன்பு கயிறு என்று கட்டுவார்கள். பூஜையில் வைத்து, பிறகு கடைசியில் இந்த நோன்புக் கயிற்றை கட்டிக்கொள்வார்கள்.பெண்கள் மட்டும்தான் பூஜை செய்வார்கள். நல்ல பட்டாடை உடுத்தி, நகைகள் அணிந்து, முகத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு அமர்ந்து செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.பூஜை மட்டுமல்ல... பிரசாதமும் எல்லாப் பெண்களும் சேர்ந்தே செய்வார்கள். நானும் அப்பொழுதுதான் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பூஜை முடிந்த பிறகு விரதக் கதை வாசிப்பார்கள். ஐயர் வந்துதான் பூஜை நடத்தித் தருவார். கணீரென மந்திரங்கள் சொல்வார்..பிறகு எல்லோரும் கேஸட் போட்டு செய்தார்கள். செல்போன் வந்த பிறகு எல்லாவற்றிற்கும் அதுவே என ஆகிவிட்டது. எங்கள் குடும்ப வழக்கப்படி 9 இனிப்புக் கொழுக்கட்டை, 9 காரக் கொழுக்கட்டை, 9 பச்சரிசி தட்டு இட்லி, தாளிகை பாயசம்... இப்படித்தான் நைவேத்தியம் கணக்காக இருக்கும். இதுவும் அவரவர் வீட்டின் வழக்கப்படி ஒன்பது அல்லது ஏழு என்ற கணக்கில் இருக்கும்.இதில் கலசத்தின் கீழே நெல்மணிகளை போடுவார்கள். பிறகு நெல்மணிகள் மாறி அரிசியை உபயோகித்தார்கள். இது இயற்கையாகவே நல்ல சக்தியை உள்ளிழுக்கும். ஒவ்வொரு நோன்புக்கான கதையும் பூஜையும் மந்திரங்களும் அஷ்டோத்திரங்களும் வேறுபடும். அன்று மதிய உணவிற்கு டிபன்தான். சாதம் சமைக்க மாட்டார்கள். உபவாசம் உண்டு. இரவில் பால், பழங்கள் மட்டும்தான்..ஒருமுறை பார்வதி தேவி பரமேஸ்வரனிடம் கேட்டதாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது. பலவித சம்பத்துகள், நல்ல கணவர், குழந்தைகள், நல்ல குடும்பம் என பலவிதமாக வேண்டிச் செய்ய வேண்டிய நோன்பு. எந்த நாள் இந்த நோன்பு கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் கதையிலேயே கூறியிருக்கிறார்கள்.இந்த நோன்பை நோற்றால், மஹாலக்ஷ்மி மனம் குளிர்ந்து வரம் தருவாள். நமது ஹிந்துக்களின் எல்லா பண்டிகைகளுக்கும் ஒரு நல்ல நோக்கம் உண்டு. நமது இல்லத்தில் இத்தகைய பூஜைகளை சரிவரச் செய்தால் தாய், தந்தையரை நன்கு பாதுகாத்து மரியாதை செலுத்தி, கணவனுடன் அன்பாக குடித்தனம் நடத்தி, நல்ல குழந்தைகள், பேரன், பேத்தி வரை எடுத்து, நல்ல சௌபாக்கியம் பெற்று வாழ்வார்கள். வரம் தரும் லக்ஷ்மி நமது இல்லத்தில் எப்பொழுதும் தங்குவாள். சகல காரியத்திலும் சித்தி கிடைக்கும். நோன்பு என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. நல்ல எண்ணங்களை நமக்குள் வளர்க்கும் ஒன்று!சிராவண மாதம் வெள்ளிக்கிழமையன்று வரும் இந்த வரலக்ஷ்மி நோன்பை எல்லா சுமங்கலிகளும் கடைப்பிடித்து, வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம்!.நைவேத்தியங்கள் செய்யும் முறையை தந்திருக்கிறேன். சுவாமி முன்பாக பிரசாதமாக வைப்பதை இல்லத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் சாப்பிடவேண்டும். படைக்காததை மற்றவருக்குத் தரலாம். எல்லா நோன்பிற்கும் இப்பழக்கம் உண்டு. நோன்பு நோற்றவர்கள் அதில் வைக்கும் பிரசாதத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். வீட்டு அங்கத்தினர்கள் மட்டுமே இப்பிரசாதத்தை சாப்பிடுவார்கள். விநாயகர் சதுர்த்திக்குப் படைப்பனவற்றையே இந்த நோன்பிற்கும் எங்கள் குடும்பத்தில் படைப்பார்கள். மற்றவர்கள் அவரவர் வீட்டு வழக்கப்படி செய்யலாம். முக்கியமாக, பண்டிகை, நோன்பு நாட்களில் புழுங்கலரிசி உபயோகித்து பிரசாதம் செய்ய மாட்டார்கள்.எந்த வெள்ளிக்கிழமையானாலும் மஹாலக்ஷ்மிக்கு சர்க்கரைப்பொங்கல் படைப்பது விசேஷம். வரம் தரும் நோன்புகளை நோற்போம். வாழ்வில் சகல வளங்களும் பெறுவோம்!(சமையல் ரகசியங்கள் தொடரும்)தொகுப்பு: ஜெயாப்ரியன்படம்: கே.கஸ்தூரி.பச்சரிசி தட்டு இட்லிகோபுரமாக அளந்த 2 ஆழாக்கு பச்சரிசி. 1 ஆழாக்கு உளுந்து. இவை இரண்டையும் தனித்தனியாக கழுவிய பிறகு, உளுந்துக்கு தேவையான தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பச்சரிசிக்கு, கைப்பொறுக்கும் சூட்டில் வெந்நீர் ஊற்றி, ஊறவைக்கவும். ஊறிய பிறகு இரண்டையும் தனித்தனியாக அரைக்கவும் (மிக்ஸியில் அரைத்தால் மெத்தென்று வரும்). கடைசியாக உப்பு சேர்த்து, மாவை கைகளால் நன்றாகக் கலந்து வைக்கவும். மறுநாள் நன்கு நொதித்தப் பிறகு பெரிய ‘தட்டு இட்லி’யாக ஊற்றி வேகவைக்கவும். இட்லியின் கனத்திற்கேற்ப 15 அல்லது 20 நிமிடங்களில் வேகும். சிறிய இட்லியானால் எப்பொழுதும் போல வேகவைத்தாலே போதுமானது..தாளிகை பாயசம்கொழுக்கட்டைக்கு மேல்மாவு செய்வது போல அரிசி மாவை புரட்டிக்கொள்ளவும். முறுக்கு நாழியில், 3 கண்கள் உடைய அச்சை வைத்து, உள்ளே லேசாக எண்ணெய்த் தடவவும். பின்னர் புரட்டிவைத்துள்ள மாவைப் பிசைந்து, நாழியினுள்ளே நிரப்பவும். குக்கர் தட்டில் லேசாக எண்ணெய்த் தடவி, நீளநீளமாக பிழிந்து, இட்லி போல ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் அவற்றை 2 அங்குல நீளத்தில் நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த்துருவல், முந்திரி, கசகசா மற்றும் ஊறவைத்த பச்சரிசி சிறிதளவு சேர்த்து அரைக்கவும். பாலைக் காய்ச்சி, அதில் ஊற்றி, வெந்த தாளிகைகளை போடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து, வெல்லத் துருவல் சேர்க்கவும். நன்றாக கலந்துவிட்டால் சூட்டிலேயே வெல்லம் கரைந்துவிடும். பொடியாக நறுக்கிய முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூளை கலந்து விடவும்.