அம்மாவைப் பற்றி அத்தனை எளிதில் விளக்கிவிட முடிவதில்லை...அவளைப் பற்றிய அலாதியான விஷயங்கள் கணக்கிலடங்குவதில்லை...விட்டுக்கொடுத்தலை அம்மாதான்எனக்குச் சொல்லிக்கொடுத்தாள்அப்பாவிடம் மட்டும்காதலின் பொருட்டு முரண்டு பிடிப்பாள்சமையல் வேலைகளை சலித்துக்கொள்வாள்யாருக்கும் தன் சுமைகளைப் பகிரவிரும்பவும் மாட்டாள்!தாத்தாவின் பொறுப்பற்றத்தனத்தைப் பொறுத்துக்கொண்ட வேதனையைக் கதைகதையாக அளப்பாள்... அண்ணன், தம்பிகளின் ஊதாரித்தனத்தை சகோதரியாய் சகித்துக்கொள்வாள்...அலுவல் பணியிடங்களில் நடக்கும் அவலங்களை தைரியமாகக் கடப்பாள்...அன்பைக்கூட கண்டிப்புக் கலந்து யாவருக்கும் கொடுப்பாள்...உலகத்தின் முன்பு மான ரோசத்தோடு வாழும் பொருட்டு தன் வைராக்கியத்தை மட்டும் விட்டுக்கொடுக்க மறுப்பாள்!நினைவறிந்த நாள்முதல் அம்மா சோர்ந்து பார்த்ததில்லை...அவளின் சோர்வை யாரும் இங்கே விரும்புவதுமில்லை...ஒற்றை மனுஷியாய் மொத்த வாழ்வையும் எளிதாகப் புரிய வைக்கிறாள்பெரும் பிரச்னைகள் எதுவும் அம்மாவை சலனப்படுத்தியதில்லை....பிள்ளைகளுக்கு நோவு வந்தால் மட்டும் இடிந்துப் போய்விடுவாள்எச்சூழலையும் ரம்மியமாக்க, பிடித்தப் பாடலை வாயில் முணுமுணுத்தபடி நாட்களை இனிமையாக்கும் வித்தையை அம்மாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்!அம்மாவின் கம்பீரம் அப்பாவுக்கும் மேலானது என்றாலும் தலைகுனிந்து அவரைக் கௌரவப்படுத்துவாள்!பஞ்சாயத்து எதுவந்த போதிலும் தீர்ப்புத் தருவதில் அம்மாவை மிஞ்ச ஆளில்லைஎங்களை ஜெயிக்கவைக்க எத்தனை தோல்விகளை எதிர்கொண்டாள் என்பது அம்மாவுக்கு மட்டுமே வெளிச்சம்தெரியாத விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் ஆசிரியராகி நிற்பவள்,அவளுக்கான மருந்தை உட்கொள்ள தருகையில் மட்டும் மறுத்துக் குழந்தையாகி அடம்பிடிப்பாள்!வாழ்நாள் முழுக்கத் தேக்கிய வலிகளை தன் பெருமித சிரிப்பில் சுலபமாய் மலையேற்றுவாள்தன் ஆசைகளுக்கு மட்டும் ஏனோ கடிவாளம் கட்டிக்கொள்வாள்எந்த உயரத்துக்குப் பின்னும் பெரும் பள்ளம் இருப்பதை அவளுடைய அறிவு சரியாய் அறியும்அம்மாவின் அந்த ஞானம்தான் எங்களின் வெற்றிப் பயணத்தை இலகுவாக்கும்!யாரையாவது கைக்காட்டி, ‘எவ்வளவு பிடிக்கும்?’ என யாரேனும் என்னிடத்தில் கேட்டால்விரலளவில் பதில் சொல்கிறேன்அம்மாவைக் கேட்கையில் மட்டும்என்னிரு கைகள் பிரபஞ்சம் தாண்டிஎல்லையின்றி விரிந்துகொள்வதை அனிச்சையாய் உணர்கிறேன்! -மதுரை சத்யா