சின்னத்திரையில் நடித்தபோதே ஒருவருக்கொருவர் மனம் ஒத்து கல்யாணம் செய்து கொண்டவர்கள் சோனியா - போஸ் வெங்கட் தம்பதி. 20 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் தம்பதியரை ‘குமுதம் சிநேகிதி’ இதழுக்காக சந்தித்தோம். மகிழ்ச்சியோடு நம்மை உபசரித்தவர்கள், தங்களுடைய வாழ்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.நீங்கள் ஆசைப்பட்டதை எல்லாம் உங்க கணவர் போஸ் வெங்கட் வாங்கித் தருவாரா? என முதல் கேள்வியை சோனியாவிடம் கேட்டோம்...‘‘இந்த உலகத்தில் பிறந்த எந்தப் பெண்ணாக இருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அடிப்படையில் அவர் ஒரு பெண்தான். அந்த ஆசை எனக்கும் உண்டு. எந்தப் பெண்ணுக்கும் தன் கணவர், தான் எதிர்பார்க்காத நேரத்தில் தனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அது ஒரு பூவாக இருக்கலாம், மிகவும் அற்பமான விஷயமாகக்கூட இருக்கலாம். ஆனால், நமக்குப் பிடித்ததை நம் கணவர், நமக்காக பிரயத்தனம் செய்து வாங்கித் தரும்போது அதன் மதிப்பு அளவற்றது ஆகிவிடும்! ஆனால், எனது அத்தகைய சின்னச் சின்ன ஆசைகளைக்கூட போஸ் மாமா செய்ய மாட்டார்ங்கிறதுதான் உண்மை! என்னோட பிறந்தநாளுக்கு நைட் 12 மணிக்கு விஷ் பண்ணணும்னு ஆசைப்படுவேன். ஆனா, அதைக் கண்டுக்கவே மாட்டார். அதே நேரம், அதை அவர் வேணும்னு பண்றதும் இல்ல! அவரோட வேலைல மறந்திடுவார்’’ என தன் கணவரை விட்டுக் கொடுக்காமல் சொன்னவர், ‘‘அதே சமயம் நான் ஏதேனும் விருப்பப்பட்டு கேட்டால், அதை எப்படியாவது நிறைவேற்றி சந்தோஷப்படுத்தி விடுவார். அவருக்கென்று தனித்துவம் இருக்கிறது. அதைத்தான் நான் மிகவும் நேசிக்கிறேன்!’’ எனச் சொல்லி அன்போடு கணவரை காதல் பார்வை பார்க்கிறார்.‘‘உங்களுக்குள் கோபம், சண்டைகள் வருமா?’’ என கேட்க, அதற்குப் பதில் சொன்ன போஸ் வெங்கட், ‘‘எங்களுக்கு கல்யாணம் ஆன இந்த 20 வருஷத்துக்குள்ள 2,000 சண்டைகள் போட்டுருப்போம். ஒரு வகையில் சண்டைகள் கணவன் _ மனைவிக்குள் இணக்கத்தை கூட்டுகிறது என்றே நினைக்கிறேன். எத்தனை சண்டைகள் வந்தாலும் அதனை அத்துடன் மறந்து விடுவோம். கோபம் வரும் வேளையில் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன். சிறிது நேரம் கழித்து வந்தவுடன் சமாதானம் ஆகி விடுவோம்..குடும்பம் என இருந்தால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை அப்போதே சால்வ் பண்ண மாட்டேன். அவர் ஒன்று சொல்ல, நான் அதற்கு மேல் இன்னொரு வார்த்தை சொல்ல, இப்படியே வார்த்தைகள் தடித்துக் கொண்டே போய் அது பெரிய பிரச்னையில் போய் முடியும். எனவே, பிரச்னை தொடங்கும் சமயத்தில் அமைதியாகி, சூடு குறைந்தபின், பேசித் தீர்த்துக்கொள்வோம்.இரை தேடி எங்கெங்கு பறந்தாலும் மாலையில் வீடு திரும்பிவிடும் பறவைகள் போலத்தான் மனிதர்களாகிய நாமும்! நமக்கு ஆதாரங்களாக இருக்கும் கூடுதான் நம் வீடு. வீட்டிலுள்ள நபர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில்தான் நமது நிம்மதி இருக்கிறது’’ என உருக்கமாகச் சொல்லி ஃபீலிங் ஆனார்.சரி... சரி... உங்க கணவர் கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்னன்னு சொல்லுங்க என்றோம் சோனியாவிடம்... ‘‘நல்ல அறிவாளி, கான்ஃபிடென்ட் ஆக இருப்பார். அவருடன் சீரியலில் நடிக்கும்போதே அவர் நடிகர் என்பதைத் தாண்டி வேறொரு மனிதர் என்பதை உளமாற உணர்ந்தேன். அம்மா, சகோதரிகள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பார். அவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றால் கண்ணீர் சிந்திவிடுவார். இதெல்லாம் எனக்கு அவரை மிகவும் பிடிக்கச் செய்த விஷயங்கள்.நான் குழந்தைத்தனமானவள். எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு இவர் நல்ல அப்பாவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கு குந்துமணி அளவுக்குகூட அவர் குறை வைக்கவில்லை!எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதே பிள்ளைகளை வைத்துத்தான். நான் அவர்களை திட்டுவதையும் கண்டிப்பதையும் ஒத்துக்கொள்ள மாட்டார். நான் அவர்களை திட்டினால், இவர் என்னை திட்டுவார். அந்த அளவுக்கு பிள்ளைப் பாசம் உள்ளவர்.இது எல்லாத்தையும் தாண்டி அவர் நல்ல மனிதர். சினிமாவில் நடிக்கிறார், படங்கள் இயக்குகிறார், அரசியல்வாதியாவும் இருக்கார். இப்படி பல தளங்களில் இயங்குகிற அவருடைய பர்சனாலிட்டி ரொம்பவே பிடிக்கும். அதிலும், சினிமா இயக்குநராக அவர் அறிவை நினைத்து ரொம்பவே பெருமை எனக்கு!’’ என நெகிழ்கிறார்..மனைவியை வைத்த கண் வாங்காமல் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த போஸ் வெங்கட்டிடம், உங்க மனைவிக்கு சுதந்திரம் கொடுத்து இருக்கிறீர்களா? என்று கேட்டோம்...‘‘குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும், இருவரும் அவரவர் தனிப்பட்ட சுதந்திரத்தோடுதான் வாழ்கிறோம். சோனியாவின் சுதந்திரத்தை நான் எப்போதும் பறிக்க மாட்டேன். அதேபோல என்னுடைய சுதந்திரத்தையும் அவர் பிடித்துத் தொங்க மாட்டார். இருவரும் பரஸ்பரம் அவரவர்களுக்கு உரிய இடத்தை கொடுத்திருக்கிறோம். இந்தப் புரிதல் எங்களுக்குள் இருக்கிறது.சினிமாவில் என்னுடன் பயணிக்கும் சில நடிகர்களில், ‘மாசத்துக்கு பத்து நாட்கள்தான் நடிக்க வேண்டும். வெளியூர் ஷூட்டிங் போகக்கூடாது’ என மனைவி கண்டிஷன் போடும் நிலையிலுள்ள நடிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதுபோலெல்லாம் சோனியா என்னை கட்டுப்படுத்துவதில்லை. அந்தச் சுதந்திரத்தினால்தான், ‘மெட்டி ஒலி’ திருமுருகன் சார் தொடங்கி, பாரதிராஜா சார், ஷங்கர், கே.வி.ஆனந்த் என பயணப்பட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கேன்’’ என மனைவியை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.‘‘எங்களுக்குள் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஆனால், நான் அதற்குப் பழகிவிட்டேன். எல்லா விஷயத்திற்கும் அவரையே நான் எதிர்பார்க்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்’’ என சோனியா சொல்ல, குறுக்கிட்ட போஸ் வெங்கட்,‘‘என் மனைவியை ஒரு ஃபிரெண்ட் போலத்தான் நான் நடத்துகிறேன். அவருக்குத் தெரியாமல் எந்த விஷயமும் பண்ண மாட்டேன். அன்றாடம் நடக்கும் நல்லது, கெட்டதுகளையும் ஷேர் பண்ணி விடுவேன். சினிமா வேலையாக பெரும்பாலும் வீட்டில் இருக்க முடிவதில்லை. குடும்பம், பசங்களையும், என் சம்பந்தமான வேலைகளையும் முழுமையாக பார்த்துக்கொள்வது அவர்தான்!’’ என்றார்.‘‘எங்கள் வாழ்க்கையை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். ‘இவ்வளவு காலம் சினிமாவில் இருந்தும் சொந்த வீடுகூட உங்களுக்கு இல்லையே’ என சொல்வோரும் உண்டு. அதில் இல்லாத ஆனந்தத்தை மிக அழகாக நாங்கள் வாழ்கிறோம். தேஜஸ்வின், பவதாரணி என அருமையான குழந்தைகள் இருக்கிறார்கள். எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் புரிதலாலும் அன்பாலும் அழகாகிறது எங்கள் வீடு!’’ என்று தம்பதியர் இருவரும் கோரசாக சொல்ல, வாழ்த்தி விடை பெற்றோம்.