Snegiti
71. போற்றிப் பாடடி பெண்ணே : சிரஞ்சீவியாக வாழும் அந்தச் சித்தர்!
தென்னாட்டில் கருங்கல் கடவுளர் சிற்பங்களைப் போலவே, வடநாட்டில் பெரும்பாலும் வெள்ளைப் பளிங்கில் செய்யப்பட்ட கடவுள் சிற்பங்களை கோயில்களில் காணலாம். ஒரிசாவில் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் மரத்தாலான கிருஷ்ணர், பலராமர், சுபத்திரையின் உருவங்களைக் காணலாம். பூரி ஜெகந்நாதரைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மூன்றுமுறை கிட்டியது. பூரி கோயில் அழகோ அழகு! கிருஷ்ணரும் ஜெகந்நாதரும் அவருடைய சகோதர சகோதரிகளும் அதைவிட கொள்ளை அழகு!!