Snegiti
கில்லாடி லேடி : பார்வையற்ற முதல் இந்திய பின்னணிப் பாடகி! - வைக்கம் விஜயலட்சுமி
‘சொப்பன சுந்தரி நான்தானே!’ என்று தம்முடைய காந்தக் குரலால் கவனம் ஈர்த்தவர் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இவர் பாடிய ஏராளமான பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. வீணை மீட்டுவதிலும் இவர் வல்லவர்!