-லதானந்த்விவசாயப் பெண்... அதுவும் 65 வயது நிரம்பிய ஒரு பெண்ணால், வங்கி ஒன்றை ஆரம்பிக்க முடியுமா? மஹாராஷ்டிராவில் 8 கிளைகளுடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாகச் செயல்பட முடியுமா?.‘முடியும்!’ என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சேத்னா காலா சின்ஹா. 1997ல் இவர் ஆரம்பித்த வங்கியின் பெயர் ‘Mann Deshi Mahila Sahakari Bank’. இந்த வங்கியை இவர் ஆரம்பித்ததற்கான காரணம், இவருடைய அண்டை வீட்டுப் பெண் ஒருவரால் எந்த வங்கியிலும் கணக்கைத் தொடங்க முடியாமல் போனதால்தானாம்!அப்போது உள்ளூர்ப் பெண்கள் சிலரின் துணையோடு வங்கியை ஆரம்பித்திருக்கிறார் சேத்னா. இந்தியாவிலேயே கிராமப்புறப் பெண்களுக்காகத் துவக்கப்பட்டு, அவர்களாலேயே நிர்வகிக்கப்படும் முதல் வங்கி இதுதான்!.சேத்னா பிறந்தது மும்பையில். 1982ஆம் ஆண்டு மும்பைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலிலும் பொருளாதாரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். ஜெயப்ரகாஷ் நாராயணனின் கருத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். காந்தியக் கொள்கைகளிலும் சேத்னாவுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. கல்லூரியில் படித்தபோதே கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்குள் இருந்துள்ளது.அதன் பின்னர் விவசாய சங்கத் தலைவர் ஒருவரைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டுள்ளார். கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள்கூட இல்லாத குக்கிராமம் ஒன்றுக்கு அவர் இடம்பெயர நேரிட்டது. அங்கேயே குடும்பம் நடத்தி, மூன்று குழந்தைகளுக்கும் தாயானார் சேத்னா.அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான காந்தாபாய் என்பவர், தமக்கு வங்கியில் கணக்குத் தொடங்க உதவி செய்யும்படி சேத்னாவிடம் கேட்டுள்ளார். உடனே சேத்னாவும் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு வங்கியை அணுகியுள்ளார். வெல்டராக பணிபுரியும் காந்தாபாயால் கணிசமான பணத்தை வங்கியில் சேமிக்க முடியாது என்று காரணம் காட்டி, அந்த வங்கியில் கணக்கைத் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..அந்த நிகழ்வுதான் சேத்னாவை உசுப்பிவிட்டுள்ளது. வங்கி நடத்தும் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற முனைந்தார். Ôபணத்தின் அளவு முக்கியமல்ல... கிராமப்புறப் பெண்களுக்கு சேமிக்க உரிமை உண்டு!’ என்பதை நிறுவ விழைந்தார்.இவருடைய கனவை நனவாக்க, 1,335 பெண்கள் ஒன்றிணைந்து 7,80,000 ரூபாயை முதலீடாகச் செலுத்தியுள்ளனர். பிறகென்ன... ரிப்பன் வெட்டி, வங்கியும் திறப்பு விழா கண்டது. தற்போது இவருடைய வங்கி, 2 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் 8 கிளைகள் உள்ளன. சிறுதொழில் முனைவோருக்கான பல நுண் திட்டங்களை இந்த வங்கியில் செயல்படுத்துகிறார்கள்.கிராமப்புறப் பெண்களுக்கான கூட்டுறவு உரிமமானது இவருடைய ‘மன் தேஷி மஹிளா சஹாகரி வங்கி’க்குத்தான் முதன்முதலில் கிடைத்துள்ளது. இவர் துவங்கிய வங்கியால் பயன்பெற்ற பெண்களுக்கு நிதி ஆதாரமும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் கிடைத்து வருகிறது. 84,000 பெண்கள் இந்த வங்கியில் கடன் பெற்று சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர் உருவாக்கியிருக்கும் ‘மன் தேஷி அறக்கட்டளை’யானது நிதி பற்றிய கல்வியறிவு வகுப்புகளையும் பெண்களுக்காக நடத்துகிறது. அங்கே சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் கடன்களைக் கையாளும் விதம் உள்ளிட்ட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் கிராமப்புறப் பெண்களின் சராசரி ஆண்டு வருமானம் 13,200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது!.இவருடைய இந்த மகத்தான சேவைக்காக ஏராளமான விருதுகளும் தேடி வந்துள்ளன. 2005ஆம் ஆண்டு, கிராமியத் தொழில்முனைவோருக்கான, ‘ஜான்கிதேவி’ பஜாஜ் புரஸ்கார் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு, காட்ஃப்ரே பிலிப்ஸ் தைரியம் அமோதினி விருதைப் பெற்றார்.புனேவில் இயங்கும் தொழில்முனைவோர் சர்வதேச அமைப்பானது 2010ஆம் ஆண்டு, ‘தொழில்முனைவோர் மேம்பாட்டு விருது’ வழங்கியது. அதே ஆண்டில், சதாராவின் சைக்லோ டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ‘ராணி லட்சுமிபாய் புரஸ்கார்’ விருதை அளித்தது. 2017ஆம் ஆண்டு, ஃபோர்ப்ஸ் இந்தியா தலைமை விருது பெற்றார். இவருடைய நிறுவனத்துக்கு இன்டர்நேஷனல் இன்னொவேஷன் விருது, பெஸ்ட் ஈக்கோ-டெக் விருது மற்றும் பெஸ்ட் விமன்’ஸ் பேங்க் விருது உள்ளிட்டவையும் கிடைத்திருக்கின்றன.பெண்களுக்கு அதிகாரமும் அங்கீகாரமும் அளிப்பதற்குப் பாடுபட்டவர்களுக்கு அளிக்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘நாரி புரஸ்கார்’ விருதையும் இவர் பெற்றுள்ளார்.சேத்னாவும் அவருடைய சகாக்களான 6 பெண்களும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர்!