Snegiti
கில்லாடி லேடி: கேரளா டூ நார்த் இண்டியா! புல்லட்டில் பறந்த அம்பிகா !
2018ஆம் ஆண்டு புல்லட் வாங்கியபோது அவருக்கு அதை ஓட்டத் தெரியாது. கேரளாவில் வெள்ளம் வேறு. காலக் கிரமத்தில் ஓட்டவும் கற்றுக்கொண்டார். தம்முடைய அந்த புல்லட் மோட்டார் சைக்கிளுக்கு ஆசையாக ‘வாசு’ என்று பெயரும் வைத்தார். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தமக்கு ஆண் குழந்தை பிறந்தால் அதற்கு ‘வாசு’ எனப் பெயரிடுவதாக எண்ணியிருந்தாராம். ஆனால், பிறந்ததோ பெண் குழந்தை. அதனால் தமது வாகனத்துக்கு ‘வாசு’ எனப் பெயர் சூட்டிவிட்டார்.