Snegiti
கில்லாடி லேடி: கேரளா டூ நார்த் இண்டியா! புல்லட்டில் பறந்த அம்பிகா
தம்முடைய 39ஆவது வயதில் புல்லட் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார். இந்தியாவின் பல பாகங்களுக்கும் அந்த வாகனத்திலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போரில் இறந்த வீரர்களின் மனைவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிகையும் ஊட்டும் குறிக்கோளுடன் அவருடைய பயணம் அமைந்தது. கொச்சியிலிருந்து ஷில்லாங் அங்கிருந்து அமிர்தசரஸ் மீண்டும் டெல்லி திரும்பும் வகையில் பயணத்தை அமைத்துக்கொண்டார்.