-நந்து சுந்து‘‘ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு அப்படியே ஷாப்பிங் போறோம்’’ என்றாள் மகள் வேதிகா.அம்மா தேவிகா தன்னுடைய பர்ஸை எடுத்துக் கொண்டாள்.‘‘பர்ஸ் கொண்டு வர வேணாம். எல்லாம் Gpayதான்’’ என்றாள் வேதிகா.டாக்ஸி புக் செய்தாள் வேதிகா. போன் பேட்டரி 10% என்று காட்டியது. முப்பது நிமிடத்தில் டாக்ஸி வந்தது.‘‘தம்பீஸ் கபே போகணும் அண்ணா. Gpay வாங்கிக்கறீங்களா?’’‘‘சரி தங்கச்சீ.’’டாக்ஸி புறப்பட்டது. டிரைவர் அண்ணா ஓட்டிக்கொண்டிருக்க, மலர்களைப் போல் தங்கை உறங்கிக்கொண்டு வந்தாள்.அரை மணி நேரத்தில் தம்பீஸ் கபே வந்தது. டிரைவர் Gpay QR Code அட்டையைக் காட்டினார்.‘‘Gpay-யா?’’ முழித்தாள் வேதிகா.‘‘என்னம்மா பே பேன்னு முழிக்கறே?’’ .‘‘செல்போன்ல சார்ஜ் சுத்தமாப் போயிடுச்சு. ஆன் ஆக மாட்டேங்குது.’’‘‘அப்போ கேஷா கொடுத்துடுங்க.’’‘‘கேஷ் வீட்ல இருக்கு!’’ என்றாள் அம்மா தேவிகா.‘‘இப்போ கைல என்ன இருக்கு?’’‘‘ஒண்ணுமில்லே’’ கையை விரித்தாள் வேதிகா.‘‘சுத்தம்... கைல ஒண்ணுமே இல்லே. புத்தி ரேகைகூட இல்லே.’’‘‘அண்ணா... நீங்க கடனுக்கு வண்டி ஓட்டுவீங்களா?’’‘‘என்னம்மா விளையாடறியா? ஏதாவது நகை இருந்தா கழட்டி வை.’’‘‘நகை வாங்கத்தான் ஷாப்பிங்கே போறோம்.’’‘‘அடுத்த சவாரிக்கு புக்கிங் வந்துடுச்சு. சீக்கிரம் பணம் கொடுங்க.’’‘‘ஒரு ஐடியா... உங்க கார் சார்ஜர் போர்ட்ல செல்போனை சார்ஜ் போட்டுடறேன். சார்ஜ் ஏறினவுடனே Gpay பண்ணிடறேன்.’’‘‘செஞ்சு தொலைங்க.’’டிரைவருக்கு அடுத்த சவாரியிடமிருந்து போன் வந்தது.‘‘சார்... அஞ்சு நிமிஷம் பொறுங்க. வண்டீல ஒரு சாவு கிராக்கி... இல்லே சார்ஜ் கிராக்கி உக்காந்திருக்கு. சார்ஜ் ஏறினவுடனே வந்துடறேன்’’ என்ற டிரைவர், ‘‘இன்னும் பணம் அனுப்பலியா?’’ என்று கத்தினார்.‘‘மூணு பெர்சன்ட்தான் சார்ஜ் ஏறியிருக்கு.’’‘‘கொடுக்கற 300 ரூபாய்க்கு மூணு பெர்சன்ட் போதும்... அனுப்பும்மா!’’Gpay அனுப்பி னாள் வேதிகா.‘‘ரொம்ப தேங்க்ஸ் அண்ணா... வாங்க ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்’’ என்ற வேதிகா, கேமராவைத் திறந்ததும் செல்போன் மறுபடியும் செத்துப் போனது.‘‘எனக்குப் பசிக்குதுடீ. பணமில் லாம ஹோட்டல்ல எப்படிச் சாப்பிடறது?’’ என்றாள் தேவிகா.‘‘தம்பீஸ் கபே கல்லால போனை கொடுத்து சார்ஜ் போடச் சொல்லிடலாம். சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ளே சார்ஜ் ஏறிடும்’’ என்றாள் வேதிகா.‘‘சரிடீ. ஏதாவது பஞ்சாபி டிஷ் ஆர்டர் செய்யலாம். அதுதான் வர்றதுக்கு முக்கால் மணி நேரமாகும்’’ என்றாள் தேவிகா.தம்பீஸ் கபே கல்லாவில் ஒரு தாத்தா இருந்தார். போனை நீட்டினாள் வேதிகா.‘‘சார்ஜ் போடணும். அப்போதான் சாப்பிட்ட பில் செட்டில் செய்ய முடியும்.’’போனை வாங்கிக் கொண்ட தாத்தா ஒரு டோக்கனை நீட்டினார். அதில் ஆறு என நம்பர் இருந்தது.‘‘ஏற்கெனவே அஞ்சு பொண்ணுங்க போன் சார்ஜ் போடக் கொடுத்திருக்காங்க. நீங்க ஆறாவது’’ என்றார் தாத்தா.(அரட்டை தொடரும்)