- நந்து சுந்து ‘‘நம்ம வீட்ல இனிமே மேடையெல்லாம்துடைக்கிறதுக்கு ‘கிச்சன் டிஷ்யூ பேப்பர்’தான்!’’ என்றாள் மகள் வேதிகா.‘‘அதெல்லாம் செட் ஆகாது. ஹோட்டல்ல டேபிள்ல முக்கோணமா மடிச்சு வைச்சிருப்பானே டிஷ்யூ பேப்பர்... அதையே நான் உபயோகிக்க மாட்டேன்! அதை வைச்சு வாயைத் துடைச்சா, ஜவ்வரிசி மாதிரி உதட்டெல்லாம் பேப்பர் தூள் ஒட்டிக்குது. அந்தக் கண்றாவியே வீட்டுக்கு வேணாம்.’’‘‘அம்மா... இதுதான் கிச்சன் டிஷ்யூ ரோல். இந்தப் பேப்பர், தண்ணியை நல்லா உறியும்!’’ என்றவாறே பேப்பர் உருளை ஒன்றைக் கொண்டு வந்து காண்பித்தாள் வேதிகா..‘‘பணத்தையும் உறியும்டீ. பேப்பர் என்ன விலை?’’‘‘ஒரு ரோல் ஜஸ்ட் அறுபது ரூபாய்தான். டிஸைன் போட்ட பேப்பர்.’’‘‘துடைக்கிறதுக்கு டிஸைன் எதுக்குடீ?’’‘‘இப்போ கார்த்தால பால் காய்ச்சறப்ப நான் பொங்க விட்டேன்னு வைச்சிக்கோ.’’‘‘வைச்சிக்கோ என்ன? தினமும்தான் பொங்க விடறே!’’‘‘பொங்கின பாலை இந்த டிஷ்யூ பேப்பரால துடைச்சா, சுத்தமா உறிஞ்சு எடுத்துடும். வா... உனக்கு ஒரு டெமோ காட்டறேன். பால் பாக்கெட்ட எடு...’’‘‘பாவி... வான்டடா பால பொங்க விடறேன்னு சொல்றியே... இது அடுக்குமா?’’‘‘சரி, ஃப்ரிட்ஜ்லேருந்து நேத்து வைச்ச சாம்பாரை எடு.’’‘‘முந்தா நேத்து சாம்பார்தான் இருக்கு. இந்தா...’’இரண்டு கரண்டி சாம்பாரை மேடையில் கொட்டினாள் வேதிகா. அதன் மேல் டிஷ்யூ பேப்பரைப் போட்டாள்.‘‘சாம்பாரை அப்படியே உறிஞ்சு எடுக்குது பாரு!’’ என்றாள்.‘‘இன்னும் மேடையில சாம்பார் மிச்சம் இருக்குடீ.’’‘‘இன்னொரு பேப்பரை போடு. இந்தச் சாம்பார் குசும்பன் நாலு பேப்பர் கேக்குது.’’‘‘இந்தப் பேப்பரை என்ன செய்யறது?’’‘‘குப்பைக் கூடையில போடு.’’அதன் பிறகு வீட்டில் எது கொட்டினாலும் டிஷ்யூ போட்டு துடைக்க ஆரம்பித்தாள் வேதிகா.‘‘பார்த்தியாம்மா... எவ்வளவு சௌகரியம்! எது கொட்டினாலும் இந்தப் பேப்பரை மேலே போட்டாலே போதும்.’’‘‘தேள் கொட்டினா கூடவா?’’நான்காம் நாள்.‘‘அம்மா... டிஷ்யூ ரோல் எங்கே?’’ என்றாள் வேதிகா.‘‘தீர்ந்து போச்சுடீ.’’‘‘நாலு ரோல் வாங்கியிருந்தேனே?’’‘‘துடைச்சு துடைச்சு எல்லாமே சுருட்டி எறிஞ்சாச்சு.’’பேங்க்கில் வாடிக்கையாளர்கள் தப்புத் தப்பா எழுதி சுருட்டிப் போட்ட செலான் பேப்பர்கள் போல் டிஷ்யூ உருண்டைகள் குவியலாகக் கிடந்தன.‘‘அட்லீஸ்ட்... குப்பைக் கூடையிலயாவது போட்டிருக்கலாம்லம்மா?’’‘‘குப்பைக் கூடை எல்லாம் டிஷ்யூ பேப்பரால ரொம்பி வழியுது. தினமும் ரெண்டு தடவை குப்பைப் பை மாத்தறேன். பையும் காலி. வாங்கணும்.’’மூன்று நாட்கள் கடந்தன.‘‘மேடை எல்லாம் சுத்தமாத்தான் இருக்கு. டிஷ்யூவும் இல்லே. என்ன செஞ்சே அம்மா?’’‘‘எப்பவும் செய்யறதுதான். பழசாப் போன பனியன் போட்டு துடைச்சேன். அதுதான்மிடில் க்ளாஸ் டிஷ்யூ.’’‘‘பழசாப் போன பனியன் இவ்வளவு எப்படி உனக்குக் கிடைக்குது?’’‘‘எல்லாம் நம்ம வீட்டுக்கு விருந்தாளியா வர்றவங்க விட்டுட்டுப் போனதுதான்!’’ என்றாள் அம்மா தேவிகா.(அரட்டை தொடரும்)