முன்கதை சுருக்கம்: சந்தோஷமான மணவாழ்வின் அடையாளமாக சுகன்யா முதல் குழந்தையைக் கருத்தரிக்கிறாள். விஸ்வம் அகமகிழ்கிறான். அவன் அம்மாவோ வளைகாப்புக்குச் செய்யவேண்டிய சீர்வரிசை, குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியவை என்று சுகன்யாவின் தாயிடம் பட்டியலிடுகிறாள். இது குறித்து கணவனிடம் சுகன்யா முறையிட,அவன் எரிந்து விழுகிறான். இந்த உலகில் பெண் மனதை முழுவதும் புரிந்துகொண்ட ஆண் எவருமேயில்லை என்றுதான் தோன்றியது சுகன்யாவிற்கு!காதல் கண்ணை மறைத்திருந்த காலத்தில் புலப்படாதவையெல்லாம் திருமணத்திற்குப் பின்னர் புலப்படுமோ? திருமணத்திற்கு முன்பு அவன் அம்மா கேட்ட அதிகப்படியான சீர்வரிசைகள் காரணமாக எங்கே அவளை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில், தானே அதற்கான பணத்தைக் கொடுத்து விடுவதாகச் சொன்ன அதே வாய்தான் இப்போது, ‘பொம்பளை விஷயங்களை என் காதுக்குக் கொண்டு வராதே’ என்கிறது.ஏனெனில், இப்போது அவள், அவனுடைய உடைமையாகிவிட்டாள். அவன் குழந்தையைச் சுமக்கிறாள். அதனால் ‘இழந்துவிடுவோமோ?’ என்கிற அச்சமேதுமில்லை. தவிர, கல்யாண சமயத்திலேயே அவனுடைய உதவியை ஏற்காத அவளுடைய அம்மா எப்படியோ சமாளித்து தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவைக்கவில்லையா? அதேபோல் இப்போதும் சமாளித்துவிடுவாள். சமாளித்துதான் ஆக வேண்டுமென்று நினைக்கிறான் போலும்! ஆனால், அம்மா எதற்கும்அஞ்சினாற்போல் தெரியவில்லை. அவளுக்குத் தன்மானம் அதிகம். அந்தத் தன்மானத்தினால்தான் திருமண சீர்வரிசைகளைக் குறைவின்றி செய்தாள். அதேபோல இப்போதும் செய்வதற்குத் தயாரானாள்.மகனிடமும் அவள் ஒற்றை ரூபாய் கேட்க முடியாது. மருமகள் சம்மதிக்கமாட்டாள். அன்னபூரணி தன்னிடமிருந்த பழைய நகைளை உருக்கி, சுகன்யாவுக்கு வளையல் வாங்கினாள். உருக்கிய தங்கத்தின் மிச்சத்தை பின்னால் குழந்தைக்குக் காப்பும் செயினும் வாங்குவதற்காக பத்திரப்படுத்தி வைத்தாள்.விஸ்வா கொஞ்சம் மனிதத்துடன் நடந்து கொண்டிருக்கலாம். குழந்தையைக் கொடுப்பதால் மட்டும் ஒருவன் ஆணாகிவிட முடியாது. அடுத்தவர் கொடுப்பதில் குளிர்ந்து போவது ஆண்மையல்ல. பெண்ணைப் பெற்றுவிட்ட காரணத்தினாலேயே ஒரு தாய் சீர், செனத்தி என்ற பெயரில் கடைசிவரை சுரண்டப்படுவது எந்த விதத்தில் நியாயம்?உள்ளுக்குள் பொருமினாலும் சுகன்யாவால் எல்லாவற்றையும் மௌனமாக வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.‘‘நீ எதைப் பத்தியும் கவலைப்படக் கூடாது. இதனால உன் புருஷனோட எந்த மனஸ்தாபமும் வேண்டாம்... சரியா? நீங்க நல்லாயிருக்கணும்னுதான் நான் கஷ்டம் பார்க்காம சந்தோஷமா சீர், செனத்திச் செய்யறேன். தவிர, அது என் கடமையும்கூட! இதெல்லாம் அல்ப விஷயம். பணம் வரும் போகும். உறவுகளைக் கெட்டியாப் பிடிச்சுக்கணும். அதான் முக்கியம்!’’ அம்மா உபதேசிக்க, சுகன்யா சமாதானமானாள்.பிரசவமான ஒரே மாதத்தில், ‘‘நீயில்லாம போரடிக்குது. மூணு மாசம் வரையெல்லாம் என்னால காத்திருக்க முடியாது. நீ உடனே அங்க வந்துடு’’ என்றவன், அவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் சுகன்யாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்..‘‘நீங்களும் அங்க வந்து பெண்ணுக்குத் துணையா ஒரு மூணு மாசம் இருங்க அத்தை!’’ என்று மாமியாரையும் கிளப்பி அழைத்துக் கொண்டு வந்தான். பெண்ணின்மீது மாப்பிள்ளைக்கு இருந்த அன்பில் பூரித்துப் போனது அந்தத் தாயின் மனது!‘‘எனக்கு மூணு மாதம்தான் லீவு உண்டு. மேலும் ஒரு மாதம் அரைச் சம்பளத்துடன் லீவு கிடைக்கும். அதற்குப் பிறகு உங்கம்மாதான் குழந்தையைப் பார்த்துக்கணும். அவங்ககிட்ட ஒரு வார்த்தைச் சொல்லிடுங்க.’’‘‘குழந்தையைப் பார்க்க அவங்க வரும்போது நீயே சொல்லிடு!’’ அவன் நழுவினான்.“குழந்தையப் பார்த்துக்கறதா? அதெல்லாம் என்னால முடியாது. என் உடம்பு அவளோ நல்ல உடம்பில்ல. உங்கம்மாவை வெச்சுப் பார்த்துக்க. இல்லாட்டி வேலையை விட்டுட்டு, அவன் சம்பாரிக்கிற பணத்துல குடித்தனம் செய்யக் கத்துக்க!’’ நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டாள் சுகன்யாவின் மாமியார்.வேலையை விடுவதா? ஒரு ஆணிடம் இப்படி வேலையை விடு என்று இவர்கள் சொல்வார்களா? சுமந்து பெற்றுவிட்டதால் குழந்தைக்குத் தாய் மட்டுமே பொறுப்பா? தகப்பனுக்கு எந்தப் பொறுப்புமில்லையா?‘‘உங்கம்மா பார்த்துக்க மாட்டாங்களாம். என்னை வேலையை விடச் சொல்றாங்க. என்னால வேலையை விடமுடியாது. நீங்க போய் உங்கம்மாகிட்ட பேசுங்க.’’‘‘இதோ பார் சுகன்யா... ஏற்கெனவே ஆஃபீஸ் டென்ஷனில் என் மண்டை காயுது. இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் என் காதுக்குக் கொண்டு வராதே!’’‘காதல் என்பதன் உண்மையான பொருள்தான் என்ன?’ என்ற கேள்வி எழும்பியது அவளுக்குள். பெண் என்பவள் ஆணின் போகப்பொருள். அவள் வெறும் கருப்பை மாத்திரமே. அவன் வம்சத்தை சுமப்பவள். சுமந்து இறக்கிய வம்சத்தை வளர்க்கும் பொறுப்பைக்கூட அவனோ அவனைச் சேர்ந்தவர்களோ ஏற்கமாட்டார்கள். கடைசியில் அவளுடைய உதவிக்கு வருவது அவளைப் பெற்ற தாய் மட்டுமே!கடமை உணர்வென்பது பெண்ணைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் போலும். வரதட்சணை, நகை, நட்டு, சீர், செனத்தி கேட்டு தங்கள் பிள்ளையை விலைக்கு விற்ற வியாபாரிகளிடம் மனிதத்தை எதிர்பார்ப்பது தவறுதான்.அண்ணி வீட்டிலில்லை. சுகன்யா தன்னுடைய அம்மாவிடம் உதவி கேட்டாள். ‘‘எந்தக் காரணம் கொண்டும் வேலையை விட்ராத சுகி. குழந்தையை இங்கக் கொண்டு வந்து விடு... நான் பாத்துக்கறேன்!’’‘‘இல்லம்மா. தினம் ஒரு நாளைப்போல இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போறது கஷ்டம். குழந்தைக்காக ஏகப்பட்ட பொருள்கள் வேற எடுத்துக்கிட்டு வரணும். உன் மாப்பிள்ளை ஒரு உதவியும் செய்யமாட்டார். சிரமம் பார்க்காம தயவு செய்து நீ இங்க வந்துடுமா.’’அம்மா தயங்கினாள். தினம் ஒரு நாளைப் போல பஸ்ஸை பிடித்து போய் வருவது மிகவும் கஷ்டம்தான். ஆனால், பெண்ணின் கஷ்டத்திற்கு உதவாமலிருக்கவும் முடியாதே!‘‘அம்மா நான் உனக்கு போகவர பஸ் பாஸ் எடுத்துக் கொடுத்துடறேன். உன்னை விட்டா எனக்கு உதவ வேற யாருமில்லைம்மா... ப்ளீஸ்!’’‘‘சரிடி... நா வரேன்! ஆனா, நீ ஆஃபீஸ் டைம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்துரணும். ஏன்னா, எனக்கு இங்கயும் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கு. உங்க அண்ணியோட குணம் தெரியுமில்ல? அவ வாயில என்னைய அரைபட வெச்சுராத!’’‘‘கண்டிப்பாம்மா. நா வந்ததுமே நீ கிளம்பிக்க. காலையில் ஒன்பது மணிக்குள்ள வந்துடு... சரியா?’’அம்மா அளித்த ஒப்புதலுடன் மனம் நிம்மதியாக, குழந்தையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டாள் சுகன்யா. ஏற்கெனவே குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் அவளை அழைத்துச் சென்றதுடன், அம்மாவையும் சிரமப்படுத்தினான் விஸ்வம். அம்மா தன்னுடைய கடமையை விட்டுக்கொடுக்கக் கூடாதென்று வந்து அவளோடு இருந்தாள்.ஆனால், பிரசவித்த இரண்டாம் மாதமே அவளைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தான் விஸ்வம். அடுத்த அறையில் அம்மா இருக்கிறாளென்ற இங்கிதம்கூட இல்லை அவனுக்கு. தவிர, திடீர் திடீரென அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வந்து, ‘சினிமாவுக்குக் கிளம்பு’ என்பான். தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை விட்டுவிட்டு வரமுடியாதென மறுப்பாள் அவள்..‘அதுக்காக என்னோட சந்தோஷத்தைப் பற்றி கவலையில்லையா உனக்கு?’ என சண்டைக்கு வருவான். அம்மாவுக்குப் பிரச்னை புரிந்தது.‘‘சினிமாவுக்குத்தானே கூப்பிடறார். ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பாங்க. தாய்ப்பாலை ஒரு பாட்டிலில் பிழிஞ்சு வெச்சுட்டு போ. நான் கொடுத்துக்கறேன்’’ என்று சொல்லி அவளை அனுப்பிவைப்பாள்.சினிமாவில் மனம் ஒட்டாமல் நினை வெல்லாம் குழந்தையையே சுற்றிச் சுற்றி வரும். சில நாள் பீச்சுக்கு போகலாமென இழுத்துச் செல்வான். பிரசவித்து மூன்று மாதங்கள்கூட நிறையாத பச்சை உடம்புக்காரியாயிற்றே என்ற எண்ணமில்லாமல், காமம் அவன் கண்ணை மறைத்திருந்தது. அப்படியெல்லாம் இனி நடக்காமல் அம்மாவை குறித்த நேரத்தில் வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.ஆட்டோவைக் கட் பண்ணி, பணம் கொடுத்துவிட்டு அவள் வந்தபோது, விஸ்வம் வந்திருந்தான்.‘‘எங்க போயிட்ட? பசிக்குது எனக்கு.’’‘‘நாளைலேருந்து அம்மா வருவாங்க குழந்தையைப் பார்த்துக்க. ஆனா, சாயங்காலம் அவங்களை நேரத்துக்கு அனுப்பியாகணும்.’’‘‘அதையெல்லாம் எதுக்கு எங்கிட்ட சொல்லிக்கிட்டு?’’குழந்தையைப் படுக்கையில் கிடத்திவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சுகன்யா.மறுநாள் காலை எட்டரை மணிக்கு வந்துவிட்டாள் அன்னபூரணி. அவள் வருவதற்கு முன்பே கிளம்பிவிட்டான் விஸ்வம்.‘‘அம்மா இப்போ வந்துடுவாங்க, நானும் கிளம்பிடுவேன். என்னை டிராப் செய்துட்டு போகலாமில்ல?’’‘‘இன்னிக்கு முக்கியமான கிளையன்ட் மீட் இருக்கு. நான் போகணும்!’’ என்றபடி அவன் கிளம்பியபோது எரிச்சல் வந்தது.அம்மாவிடம் குழந்தையை ஒப்படைத்து, சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள்.‘‘அண்ணி எதுனா சொன்னாங்களாம்மா?’’அம்மா சிரித்தாள். ‘‘உங்க அண்ணி என்னிக்கு நல்ல வார்த்தை பேசியிருக்கா? அவ பேசுவதைக் கேட்டுக் கேட்டு என் காதும் மனசும் மரத்துப்போச்சு. இத்தனைக்கும் அவளுக்கு நான் எந்தக் குறையும் வைக்கலை. என்னால முடிஞ்ச அத்தனை வேலையும் செய்து வெச்சுட்டுதான் கிளம்பியிருக்கேன். நான் திரும்பிப் போகிறவரை அவளுக்கு எந்த வேலையும் இருக்காது. ஆனாலும் நான் உனக்கு உதவி செய்றது அவளுக்குப் பிடிக்கிறதே கிடையாது.உங்க மாமியார் மாதிரி நான் இருந்திருந்தா என்ன செய்வான்னு தெரியல. அவ கிடக்கா விடு. நீ பத்திரமா போயிட்டு வா. நீ வந்ததும் நா கிளம்பணும். வீட்டுக்குப் போயி கிரைண்டர்ல இட்லிக்கு மாவு ஆட்டி எடுக்கணும். ராத்திரிக்கு டிபன் செய்யணும்.’’‘‘எப்படிமா உன்னால இவ்வளவு பொறுமையா இருக்க முடியுது?’’‘‘சண்டை போடுறதால என்ன கிடைக்கப் போவுது? தேளின் சுபாவம் கொட்டுவது. நம்ம சுபாவம் அதில்லையே! அவளுக்காக நம்ம சுபாவத்தை மாத்திக்க முடியுமா என்ன?’’‘‘என்னமோ போ... உன்னை நானும் கஷ்டப்படுத்தறேன்.’’‘‘பஸ் போயிடப் போவுது... சீக்கிரம் கிளம்பு.’’ ஒரு வாரம் போயிருக்கும். ஒரு நாள் மாலை ஐந்து மணிக்கு சுகன்யாவின் மொபைல் சிணுங்கிற்று. திரையில் விஸ்வம் சிரித்தான்.‘‘என்ன... சொல்லுங்க.’’‘‘சரியா அஞ்சரை மணிக்கு உங்க ஆஃபீஸுக்கு வருவேன். ரெடியாரு!’’‘‘என்ன விஷயம்?’’‘‘மூவிக்குப் போறோம்.’’‘‘நான் வரலை. அம்மாவை வீட்டுக்கு அனுப்பணும். எனக்காகக் காத்துட்டு இருப்பாங்க.’’‘‘என் சந்தோஷம் உனக்கு முக்கியமில்லயா? நீ வந்தே ஆகணும்!’’ என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் விஸ்வம்.(குடை மனசு விரியும்).பரிசு ரூ.100ஆவலுடன் காத்திருக்கிறேன்!‘தாழங்குடை’ தொடர்கதை இதழுக்கு இதழ் தாழம்பூவாய் மணம் பரப்பி, நிழல் தந்து விரிவது அலாதி சுகம்! சுவாரஸ்யம்!!மாப்பிள்ளையை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்க, சுகன்யாவின் அம்மா அன்னபூரணி மட்டும், தாய்க்குத் தெரியாமல் மகன் செய்யும் உதவியை நாம் பெறுவது நியாயமல்ல. பின்னால் தெரிய வரும்போது, தன்னுடைய மகளின் வாழ்க்கை எவ்விதம் பாதிக்கப்படும் என்று சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது.‘அடுத்து நடக்கப் போவது என்ன?’ என்பதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்!- எஸ். ராஜம், ஸ்ரீரங்கம். சிநேகிதிகளே... ‘தாழங்குடை’ தொடர்கதை பற்றிய உங்களுடைய விமர்சனங்களை சுருக்கமாக எழுதி, உங்கள் போட்டோவுடன் அனுப்பலாம்!