ஓவியங்கள்: ஸ்யாம் பத்திரிகை உலகில் புதுமையான தொடர்கதை-19 முன்கதை சுருக்கம்: சுகன்யா - விஸ்வத்தின் குடும்பம், விரிசல் விட்டுப் பிரிந்து கொண்டிருக்கிறது. ஆட்டிஸம் பாதிப்புள்ள மூன்றாம் மகன் ஹரியே கசப்பிற்குக் காரணம் என்று தோன்றினாலும், அன்பு, அனுசரணையின் குறைவே அவர்களைச் சிதறடிக்கிறது. கடுமையான நிகழ்காலத்திலும் இனிமையான பழைய நினைவுகளிலுமாய் மாறி மாறி தவிக்கின்றனர் தம்பதி.தனக்கான முதலிரவு யாருக்கும் மறப்பதில்லை. ஆனால், ஊருக்கே தெரிந்த விவரமாகி விடுகிறதே இங்கே அது! ஆனால், அக்காதல் உறவின் கடைசி இரவு?.தனக்கான முதலிரவு யாருக்கும் மறப்பதில்லை. ஆனால், ஊருக்கே தெரிந்த விவரமாகி விடுகிறதே இங்கே அது!ஆனால், அக்காதல் உறவின் கடைசி இரவு?அது அவரவருக்கேயான ரகசியம்.அந்த முடிவான முற்றுப்புள்ளியின் நினைவுகள் சுகன்யாவை புகைபோல மூடின.அதைத் துவங்கி வைத்தது சன்னமான மழைதான். ஆனால், அது கனத்த மண்மணத்தைக் கிளறிவிட்டிருந்தது.சாலையின் மின் ஒளியில் ஜன்னல் விளம்பின் நீர், வைரத் தோரணமிட்டிருந்தது..ஜன்னலின் வெளியே தெரிந்த இரவு, கவிதைகளும் காதலுமான காலத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.‘அது தனக்கு மட்டுமல்ல, விஸ்வத்திற்குமே!’ என்பதை சுகன்யாவின் முகுதுப்புறம் பதிந்த புருஷனின் வெம்மை உணர்த்தியது.காற்றின் குளிர், வாசனை, தூரத்து இசை எல்லாமும் சேர, இரவு ஓர் அபார பதார்த்தமாகியிருந்தது!விஸ்வத்தின் கை, மோக வேகத்துடன் சுகன்யாவை சுற்ற, அவளின் பார்வை பரிதவிப்புடன் அறையின் மறு மூலையிலிருந்து சோஃபாவிற்குப் பாய்ந்தது. சுவர் பக்கமாய் திருப்பிப் போடப்பட்டிருந்த அதில், ஹரியைப் படுக்கவைக்க, மன்றாடி சம்மதம் பெற்றிருந்தாள்..கடைக்குட்டியின் மூளை இயக்கம் இயல்பானதில்லை என்பதை அவனுடைய இள முக அமைப்பே காட்டிய பிறகும், தகப்பனுக்கு ஏன் பிள்ளை மீது கருணையில்லை?அன்று காலை நடந்த சம்பவம் சாதாரணமானதல்ல... தன்னுடைய சிறு மகனுக்குள் அசாதாரண திறன் இருப்பதற்கான சான்று!வார நாட்களில் நேரமெடுத்து செய்யமுடியாத, எண்ணெய்க் குளியல், விசேஷ சமையல் என ஆகியிருந்த சனிக்கிழமை அது.பூஜையறையும் பளிச்சென்றிருந்தது. சுடரும் சுகந்தமுமான சூழலை இவளுடைய ‘அபிராமி அந்தாதி’ மேலும் பவித்ரமாக்கிக் கொண்டிருந்தது..நோய் விலக்கி, ஆரோக்கியம் பெருக, சுகன்யாவின் தாய் அன்னபூரணி குறித்துத் தந்திருந்த பாடல்...‘‘மணியே! மணியின் ஒளியே!ஒளிரும் மணிபுனைந்த அணியே!அணியும் அணிக்கு அழகே!அணுகாதவர்க்குப் பிணியே!பிணிக்கு மருந்தே!’’‘‘அம்மா... இன்னைக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு.’’ அஸ்வின் கெஞ்சலாய் நினைவுப்படுத்த, பாதியில் சமையலறைக்குத் தாவினாள்.கமகமவென்று கெட்டியாகியிருந்த கிழங்கு மசாலை பாத்திரத்திற்கு மாற்றியவள், அப்படியே உறைந்து நின்றாள். உடம்பு நடுங்குவது போலிருந்தது.“அமரர் பெருவிருந்தே!பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே!’’கச்சிதமாய் பாடலை முடித்தது ஹரியின் குரல்!இவள் பாடுவதை, குழந்தை கவனித்தது போலக்கூட காட்டியதில்லை!ஆனால், மனதிற்குள் பதிந்து கச்சிதமாய் வெளிவருகிறதே!மனமும் விழிகளும் பொங்க, உடனே ஓடிப்போய் கணவனிடம் பகிரவேண்டிய செய்தியை, சொல்லவிடாத தொடர்வேலைகள். ஆனால், மகனை முத்தமிட்ட சுகன்யாவின் உதடுகள் புன்னகைத்தபடியே இருந்தன!விஸ்வம் இவளைவிட அவசரத்தில் சுழன்று கொண்டிருந்தான்.சின்னவனின் பேச்சை எடுத்தாலே, பெற்றவனுக்குப் பிடிப்பதில்லை. முகத்தில் வெறுப்பு அப்பட்டமாய் தெரியும்!அது ஹரியைப் பற்றிய பேச்சில், தான் அழுதுவிடுவதாலா?கண்ணீர் அனுதாபம் தரும். ஆனால், பலன் தருவது முயற்சிதானென்று நிமிர்வாய்தானே வாழ்வை சமாளிக்கிறோம்?.அன்றிரவின் தனிமையிலும் அவசர மாய் தன் உடலில் இன்பம் தேடியவனிடம் அந்தப் பேச்சை எடுக்கும் துணிவில்லை சுகன்யாவுக்கு.மறுநாள் ஞாயிறு இயல்பாய் சொல்லி, இரட்டிப்பாய் மகிழ வேண்டுமென்று பத்திரப்படுத்தினாள்.கணவன் தன் உடல் நெகிழாததைக் கண்டு கொண்டான் போலும்!‘‘மழைகூட உனக்கு ‘மூட்’ கொண்டுவரலல்ல சுகா?’’இவள் முதுகில் பதித்த உதடுகள் குறைபட்டன.‘‘ம்ம்...’’‘‘உன் மழை கவிதைகளெல்லாம் எங்க?’’பிள்ளைகள்... முக்கிய மாய் ஹரி பிறந்தபின் அவை வறண்டுதான் போயின.விருட்டென அவளைத் தன்புறமாய் திருப்பி, இறுக்கினான்.அவனுடைய சொரசொரத்த கன்னங்கள் இவளுடைய மிருதுவான கன்னம், கழுத்து, மார்பை இம்சித்தன. இன்பங்கள் கலக்காத இம்சை அது!‘‘நா கவிதை சொல்லவா?’’‘‘ம்ம்...’’‘‘மழை பிடிக்கும் என்றுதான்சொல்கிறார்கள்கையில் குடை வைத்திருக்கும்அத்தனை பெண்களும்!’’சுகன்யாவின் கரங்கள் அவனுடைய தோள்களைச் சுற்றியது.சற்று விலகி கேட்டாள், ‘‘உங்களுதா?’’‘‘வாசிச்சதுதான். ஆனா, நம்ம சிச்சுவேஷ னுக்குப் பொருந்துதில்லையா?’’ என்று கேட்டபடியே எம்பி, விளக்கை அணைத்தான்.‘‘என்ன பொருத்தம்?’’மங்கிய அறைக்குள் குரல் கிசுகிசுத்தது.‘‘இப்படி நெருங்கி எத்தனை நாளாச்சு? உனக்கெந்த தாபமுமில் லியே? ‘பிள்ளை’ங்கிற ‘குடை’யால கிளர்ச்சிகளைத் தடுத்துடற!’’உடைகள் தளர்ந்து விலகிக் கொண்டிருந்தன.சுகன்யாவின் மனம் வேறுபக்கம் அலைந்து, கேரளத்தில் சில காலம் வேலை செய்த இவளுடைய தாத்தா முன்பு எப்போதோ சொன்ன தகவலைத் தேடி எடுத்திருந்தது.‘மழை அதிகமான அவுங்க நாட்டுலதாழங்குடைதான். மடிக்க முடியாததால், அது சதா தயாராத்தான் நிற்கும், வெயில், மழை ரெண்டுக்கும் தோதாய்!’.குடும்பப் பிரகாசங்களில் இவள் தேவைப் பட்டது போல இப்போது குடும்பம் நனை யாமல் பாதுகாக்கவும் வேண்டிய காலமிது. இதில் குடை, நனைந்து சுகம் காணுவதெங்கே?இருந்தும், கணவனின் நெருக்கம் இவளை ஆறுதல்படுத்தியது. தான் இன்னும் அவனுக்குத் தேவை. அவன் காதல் என்றும் தனக்கேதான் எனும் நிம்மதி.அந்தத் தளர்வில் பிறகு இவள் தூங்கிவிட, விஸ்வம் லேப்டாப்பில் வேலைக்குள் மூழ்கியிருந்தான்.அவனுடைய ‘‘ச்சே...’’ சுகன்யாவை உலுக்கி எழுப்பியது. கூடவே அவனுடைய சுளீரென்ற தட்டல்.‘‘இவன கட்டில்ல விடாதேன்னு நூறு தரம் சொல்லியாச்சு...’’பதறி, தன்னை ஒட்டிக்கிடந்த ஹரியை அள்ளியவளுக்கு, படுக்கை நனைந்திருப்பது புரிந்தது.‘‘ஸாரிப்பா... பெட் ஷீட் மாத்திடறேன்...’’‘‘நாத்தத்தை என்ன செய்ய? ச்சே... வேலை செய்றவனுக்கு பாதி ராத்திரி ரெஸ்ட் கூட இல்லை.’’மகனுக்கு உடை மாற்றவும் முனைந்தவளை, கணவனின் கண்கள் சுட்டெரித்தன. இவள் எடுத்திருந்த விரிப்பை உருவிக் கொண்டான்.‘‘பயந்துக்கறாம்ப்பா... அதான் நம்பட்ட வந்து படுத்துக்கறது.’’அறையின் விடி வெளிச்சத்தில் விஸ்வத்தின் பார்வை கொடூரமாய்ப் பளபளத்தது.‘‘எனக்கும் பயம்மாருக்குது... இப்படி ஒரு வாழ்வை இனி என்னால தொடர முடியாது.’’‘‘இன்னைக்கு காலைல நடந்ததைச் சொல்றேனே... ஹரிட்ட நிறைய முன்னேற்றம் தெரியுதுப்பா..!’’புறக்கணித்து வெளியேறியவனை சுகன்யாவின் பார்வை சோர்வுடன் தொடர்ந்தது.‘இவனுடைய வாழ்வில், தான் சோறோ ஊறுகாயோ கூட இல்லை... வெறும் வாழையிலை. பசி தீர்ந்ததும் சுருட்டி வீசிவிடும் எச்சில் இலை!’மறுநாள் சுவரைப் பார்த்தபடி, விஸ்வம் இரு வாரங்களுக்கு ஊரில், நாட்டில், தான் இருக்கப்போவதில்லை என்றபோது சற்று நிம்மதியாய் இருந்தது!விஸ்வம் வீட்டில் இல்லாத நாட்களைத்தான் இப்போது மனம் தேடுகிறது.வீட்டின் மையத்தில் பாம்பு புற்றிருக்க, பீதியோடு நடமாடுவது போலத்தான் வீட்டார் அஞ்சி அளந்து இருக்க வேண்டியிருந்தது!ஆனால், விஸ்வத்தின் நிலையும் அதுவேதான் போல! அவன் மறுநாள் செய்த போன் கால் அவளுக்குத் தெரிவித்த சேதி, அதிர்ச்சிதான்!‘‘நா டர்க்கி கிளம்பறேன். இண்டியா திரும்பும்போது என்னோட இந்திரா நகர் ஃப்ளாட் தயாராய் இருக்கும். முடிஞ்சா, என்னோட பொருள்களை ‘பேக்’ பண்ணி வச்சிடு. எடுக்க ஏற்பாடு பண்ணிடறேன். நான் இனி அங்கேதான்.’’‘இனி தன்னுடைய மறுபாதி தனக்கில்லை’ என்ற சேதியால் சுகன்யாவின் உடல் குளிர்ந்து தளர்ந்தது..ஆனால், ஒண்டியாகவாவது இருந்து, தான் பாதுகாக்க வேண்டிய குடும்பம் தனக்குண்டு என்ற உறுதியில் தொய்யாமல் நின்றது அவளுடைய மனம்!(குடை மனசு விரியும்).பரிசு ரூ.100புதுமையாக தருவதற்கு பாராட்டுகள்!தொடர்கதையின் தலைப்பே வித்தியாசமாக புதுமையாக இருக்கிறது. அதைவிட புதுமை, அதிக எழுத்தாளர்கள் எழுதுவது! தொய்வில்லாமல் கோர்வையாக போகிறது கதையோட்டம்! வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதுவது போலவே இல்லை!நமக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி போலவே இருக்கிறது. விரும்பித் திருமணம் செய்த தம்பதிக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் எப்படிப் பூதாகரமாகிறது என்பதை அழகாகவும் தெளிவாகவும் எழுத்தாளர்கள் விளக்குகிறார்கள்.சுகன்யா எப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்ள போகிறாள் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் ஏற்படுகிறது. வாசகிகளுக்குத் தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து புது மாதிரியாக தரும் ‘குமுதம் சிநேகிதி’க்கு மனமார்ந்த பாராட்டுகள்!- பானுமதி வாசுதேவன், மேட்டூர் அணை - 3.சிநேகிதிகளே... ‘தாழங்குடை’ தொடர்கதை பற்றிய உங்களுடைய விமர்சனங்களை சுருக்கமாக எழுதி, உங்கள் போட்டோவுடன் அனுப்பலாம்!