-மதிபாரதி‘‘வசந்த காலத்தில் பிறந்த எனக்கு ‘வசந்தி’ என பெற்றோர் பெயரிட்டனர். குழந்தை பருவத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட ல, லா, லி, லீ வரிசையில் பெயரை மாற்றினால் எல்லாம் சரியாகும் என்கிற நம்பிக்கையில் அம்மா வைத்த பெயர் ‘லீலா’’’ என தன்னிலை விளக்கத்துடன் உரையாடத் தொடங்கியது இந்தப் பாட்டுப் பறவை.தற்போது நீர்வளத் துறையில், உதவி செயற்பொறியாளராக பொள்ளாச்சியில் பணிபுரிகிற லீலாவுக்கு சொந்த ஊர் திருக்குவளை. கணவர் ரேண்டன் பெரஸ். மகள் லியா..‘‘என் மொழி என் அடையாளம்!’’ என்று சொல்லும் இக்கவிஞர், ‘‘பெரியார், ஓஷோ, நம்மாழ்வார், மசானபு புகாகோ, அருந்ததி ராய் மற்றும் சூழலியல் சார்ந்த நூல்கள், கவிதைகள், நாவல்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். வாசிப்பின் மூலம் உலகை காண்கிறேன்’’ என்கிறார்.வள்ளுவன், கம்பன், பாரதி, பாரதிதாசன், பிரமிள், சிற்பி, வண்ணதாசன், பிரான்சிஸ் கிருபா, இந்திரன், ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, ஜின்னா அஸ்மி, முகமது பாட்ஷா, ஜே.ஜே. அனிட்டா, ராம் பெரியசாமி ஆகிய படைப்பாளிகள் லீலாவின் டவுன்லோடு லிஸ்டில் இருக்கிற கவிஞர்கள். இந்த விருப்பப் பட்டியலில் சிறப்பு இடம், பாடலாசிரியர் பழநிபாரதிக்கு கொடுக்கும் லீலா, அவருடைய கவிதைகளில் ஒன்றுவிடாமல் தொடர்ந்து வாசித்து வருபவர்..‘‘கவிதை என்பது சமூக மாற்றத்தைத் தரவல்லதாக, அநீதியைக் கண்டு பொங்குவதாக, இயற்கையை நேசிப்பதாக, மனிதநேயம் கொண்டதாக இருக்க வேண்டும்’’ என்பவரிடம், ‘எப்போது கவிதைப் பக்கம் வந்தீர்கள்?’ எனக் கேட்டால், ‘‘ஒரு பூ மலரும் தருணத்தை எப்படி கண்டுச் சொல்ல முடியாதோ, அப்படித்தான் என்னுள் இலக்கியம் முகிழ்த்த தருணமும். ஏழாம் வகுப்பு படித்தபோது எழுதியதை முதல் கவிதை எனச் சொல்லிக்கொள்ளலாம். அதுவும் நினைவில் இல்லை!’’ என்கிறார்.தொடக்கத்தில் மேடை பேச்சு, கட்டுரை ஆக்கம் என்றிருந்த லீலா, கட்டுரையைவிட குறைவான நேரத்தில் சட்டெனெ ஒரு கருத்தை முன்வைக்க கவிதை சிறந்த வடிவமாக தோன்ற, கவிதையிலும் களமாடுபவர்.மறைநீர், ஹைக்கூ தூண்டிலில் ஜென், வரையாட்டின் குளம்படிகள், ஷின்டோ, சுகிமி, கறுப்பு எழுத்து ஆகிய ஆறு நூல்களை எழுதியுள்ளார் லீலா. ‘சமத்துவம் என்பது பொருளாதாரத்தை பொதுவில் வைப்பதில் மட்டுமல்ல... இயற்கை வளத்தை எல்லா உயிர்களுக்கும் பொதுவில் வைக்கும் கருணை உள்ளமே சமத்துவம்!’ எனும் சிந்தனையைக் கொண்டு, தொடர்ந்து இயங்கி வருகிறார்..இவருடைய ‘மறைநீர்’ எனும் நூல், நீர் மேலாண்மை, கடலுக்கு தண்ணீர் சேர்வது சரியா? பழந்தமிழர் பாசன மேலாண்மை, மழைக்காடுகள் என நீரோடு தொடர்புடைய கட்டுரை நூலாகும். எளிய மொழியிலான இந்நூலை, மாணவர்களுக்கான பாடப் புத்தகமாக வைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். சிறப்புமிக்க இந்நூல் பல விருதுகளை பெற்றிருப்பதோடு, 5 ஆயிரத்துக்கும் மேலான பிரதிகளும் விற்பனையாகியுள்ளன. இந்நூல் ‘Water and Virtual Water’ எனும் பெயரில் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.கவிஞர் பிருந்தாசாரதியின் ஹைக்கூ மீதான ஆய்வுக் கட்டுரைகளும், 50க்கும் மேற்பட்ட ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ள ‘ஹைக்கூ தூண்டிலில் ஜென்’ எனும் நூல் பாஷோ, ஓஷோ, ஆண்டன் செக்காவ், தாகூர் ஆகியோர் பற்றிய சுவாரஸ்ய செய்திகளைக் கொண்டது. ஹைக்கூ பற்றிய புரிதலை தரக்கூடிய இந்நூல், லீலாவின் ஆற்றலுக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.‘தமிழ்நாட்டில் ஹைக்கூ மீதான ஆய்வுக்கட்டுரை எழுதிய நான்காவது பெண்’ என இந்நூல் மூலம் லீலா வரிசைப்படுத்தப்படுகிறார். மேலும், கடந்த சென்னை புத்தகக்காட்சியில் விற்பனையில் 23_வது இடத்தைப் பிடித்தது..நம்மாழ்வார் நினைவு சூழலியல் மேம்பாடு விருது, கண்ணதாசன் விருது, படைப்பு குழுமத்தின் இலக்கியச் சுடர் விருது, பூலோக கங்கை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள லீலாவிடம், ‘இலக்கியத்தில் உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ என்றபோது,‘‘நேற்று என்பது கையில் இல்லைநாளை என்பது பையில் இல்லைஇன்று மட்டுமே வாழ்கிறேன்காலத்தின் கருவியாக...காலம் எதைப் பணிக்கிறதோ அதைக் கருவியாகசெயல்படுத்துவேன்!’’ என்கிறார் புன்னகையோடு.கோ.லீலா கவிதைகள்.மரத்தின் உச்சியில்எத்தனை சேவல் கொண்டைகள்செங்கொன்றைப் பூக்கள்! வானைப் பார்த்து பாடுகிறதுவண்ணாத்திக்குருவிஉதிர்கிறது நாவல்! மரத்தின் உச்சிதாழப்பறக்கும் கிளிஉதிரும் இலை! வடகிழக்கு தென்மேற்குகோடை மழை வாடை மழைஎதுவாயினும் ஈரம் ஒன்றே! கோபித்துக் கொண்டாலும்நீ வந்து சென்றபின்மலர்ந்துவிடுகிறது என் தோட்டம்! கொடியேற்றசுதந்திரமாய்ப் பறந்தனமுடிந்து வைத்திருந்த பூக்கள்!