தமிழ் தெரிந்த நடிகையரை சின்னத்திரையில் பார்ப்பது அரிதாகி வரும் காலமிது. அழகும் அறிவும் கனிவும் நிறைந்த தமிழ்ப்பெண்ணான ஜெயஸ்ரீ தற்போது ‘இனியா’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ தொடர்களில் முக்கியத்துவம் நிறைந்த கேரக்டர்களில் அசத்திக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேச்சுக்கொடுத்தால், கொங்கு தமிழ் அருவியாய்க் கொட்டுகிறது!நடிக்க வந்தது எப்படி? முதல் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?‘‘என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர். அப்பா, அம்மா, அக்கா, நான், தங்கச்சி, பாட்டின்னு அளவான குடும்பம். சின்ன வயசுலயே எனக்கு ஆக்டிங்ல விருப்பம். அதனால ஸ்கூல் நாடகங்கள்ல நடிச்சேன். அதன்பிறகு டி.வி.யில ஏதாவது ஒரு சின்ன கேரக்டர்ல மட்டும் நடிச்சிடணும்னு ஆசை இருந்தது. காலேஜ் படிக்கும்போது மாடலிங்கிற்காக போட்டோ ஷூட் பண்ணும்போது அதை நிறைய ஆடிஷனுக்கு அனுப்பிவெச்சேன். அந்த போட்டோஸைப் பார்த்துட்டு, திடீர்னு ஒரு நாள், ‘வேலைக்காரன் சீரியல்ல ஒரு கேரக்டர் இருக்கு. நாளைக்கு ஷூட்டிங் ஆரம்பமாகுது. உடனே புறப்பட்டு சென்னைக்கு வாங்க’ன்னு போன் பண்ணாங்க. அன்னிக்கு நைட் பஸ் பிடிச்சி காலையில சென்னை வந்துட்டேன். அப்படித்தான் ‘வேலைக்காரன்’ சீரியல்ல சின்னதா ஒரு கேரக்டர்ல நடிச்சேன். அதிலிருந்து ‘அபியும் நானும்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘இனியா’ன்னு கொஞ்சம் கொஞ்சமா லீட் ரோல்ல முன்னேறிக்கிட்டு இருக்கேன்.’’நடிப்புக்காக என்ன பயிற்சி எடுத்தீங்க?‘‘எனக்கு ஆக்டிங் பத்தி எதுவுமே தெரியாததால ‘வேலைக்காரன்’ சீரியலோட முதல் நாள் ஷூட்டிங்ல கேமரா முன்னாடி எப்படி நிக்கணும்? எங்கே பார்த்துப் பேசணும்? எப்படி எக்ஸ்பிரஷன்ஸ் தரணும்? பிராம்ட் கேட்டு எப்படிப் பேசணும்னு தெரியாம குழப்பத்துல ரொம்பவே பயந்துட்டேன். ஆனா, அந்த டீம்ல இருந்தவங்க, ‘நாங்க சொல்றத மட்டும் அப்படியே திரும்பச் சொல்லுங்க... போதும்!’னு தைரியம் கொடுத்து நடிக்க வெச்சாங்க. அதன் பிறகு மற்ற ஆர்டிஸ்ட் நடிக்கும்போது அவங்களோட லுக், எஸ்பிரஷன்ஸ் எப்படி இருக்கு, டயலாக் பேசும்போது எங்கே இடைவெளிவிட்டு எப்படிப் பேசறாங்க, மத்தவங்க பேசும்போது அவங்க எப்படி ரியாக்ஷன்ஸ் கொடுக்கறாங்கன்னு கூர்மையா கவனிச்சி, மெல்லமெல்ல நானே கத்துக்கிட்டேன். நடிப்போட சூட்சுமம் தெரிஞ்சதால இப்பல்லாம் ‘சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்’னு சொல்ற அளவுக்கு அசத்த ஆரம்பிச்சிட்டேன்!’’.நிஜத்துல நீங்க எப்படி?‘‘நான் ரொம்ப சாஃப்ட். ஆனா, பேச ஆரம்பிச்சிட்டா நிறுத்துறது கஷ்டம். படபடன்னு பேசிக்கிட்டே இருப்பேன். எதிலும் பொய்யில்லாம வெளிப்படையா, கலகலப்பாப் பேசுவேன். எல்லாரையும் ஃபன்னா கலாய்ச்சிடுவேன். எனக்குக் கோபமே வராது. ஜாலியா இருப்பேன். அதனாலயே என்னோட ஃபிரெண்ட்ஸ், ‘உன்கூட இருந்தாலே நேரம் போறதே தெரியாது. செம ஜாலியா இருக்கும்’னு சொல்வாங்க. மத்தபடி சென்டிமென்ட்டா நான் ரொம்ப வீக்! என் முன்னாடி யாராவது கண்கலங்கினா என்னால தாங்கமுடியாது. அவங்களோட சேர்ந்து நானும் அழுதுடுவேன். தவிர, எனக்கு கடவுள் பக்தி அதிகம். என்னோட ரூம்ல, கீ செயின்ல, பர்ஸ்ல சிவலிங்கம் வெச்சிருக்கேன். அந்தளவுக்கு சிவபெருமானோட தீவிரமான பக்தை நான்!’’பல்ப் வாங்கின அனுபவம் இருக்கா?‘‘ஒண்ணா... ரெண்டா... கணக்கில்லாத அளவுக்கு பல்ப் வாங்கியிருக்கேன். குறிப்பா, ஒரு விஷயத்தை என் ஃபிரெண்ட்கிட்டே சொல்லிட்டு, ‘இது ரொம்ப சீக்ரெட்டான விஷயம். அவகிட்டே மட்டும் சொல்லாதே’ன்னு சொன்னேன். ஆனா, மறுநாள் அந்த விஷயம் ஊருக்கே தெரிஞ்சிருக்கு! நான் யார்கிட்டே சொல்ல வேணாம்னு சொன்னேனோ அவளே வந்து, ‘என்னடி... அந்த விஷயம் நிஜமா?’ன்னு கேட்டா. நான் ‘அப்படியா?’ன்னு முகத்தை அப்பாவியா வச்சுக்கிட்டேன். அதுக்கு அவ, ‘நீதான் சொன்னேன்னு ஊருக்கே தெரியும்டீ’ன்னு சொன்னா. அப்பதான் எனக்கு நாம செமயா பல்ப் வாங்கிட்டோம்னு புரிஞ்சுது. இப்படித்தான் காலேஜ் படிக்கும்போது எக்ஸாம் ஹால்ல என் ஃபிரெண்டுக்கு பிட் கொடுக்கப் போகும்போது, அவ மாட்டிக்கிட்டா. அந்த பிட்ல இருந்த பதில்களையே எழுதியிருந்தால நானும் மாட்டிக்கிட்டு பல்ப் வாங்கினேன். இப்படி நிறைய சரித்திர சம்பவமெல்லாம் இருக்கு.’’எதிலெல்லாம் நீங்க நீங்களாவே இருப்பீங்க?‘‘மீடியாவை பொருத்த-வரைக்கும் நான் நானாக சுதந்திரத்தோடு வேலை பார்க்கவே ஆசைப்படுவேன். அதிலே வேற யாரோட தலையீடையும் அனுமதிக்கமாட்டேன். ‘நீ ஒரு பொண்ணு. அதனால நீ இதைத்தான் செய்யணும். இதெல்லாம் செய்யக்கூடாது’ன்னு யாராவது சொன்னா, அதை நான் ஏத்துக்கமாட்டேன். நான் என்னோட பாதையில போய்க்கிட்டே இருப்பேன். என் வழி தனி வழி! ‘இது சரி வருமா?’ன்னு யாராவது கேட்டா, ‘முடிஞ்சாஎனக்கு நீங்க சப்போர்ட் பண்ணுங்க. இல்லேன்னா ஒதுங்கிடுங்க. என்னோட முயற்சியில தோல்வியடைஞ்சாலும் பரவாயில்ல. அதுல ஒரு பாடத்தைக் கத்துப்பேன்’ அப்படின்னு பதில் சொல்லிட்டு, என் வழியில நான் போய்க்கிட்டே இருப்பேன். இந்தப் பிடிவாத குணத்தோடு நான் நானாகவே இருக்கிறதாலதான் என்னால ரொம்பவே சந்தோஷமா நிறைவா வேலை பார்க்க முடியுது.’’.காஸ்ட்யூம்ல அசத்தறீங்களே!‘‘எனக்கு மாடர்ன், டிரெடிஷனல்னு ரெண்டு வகையான காஸ்ட்யூமும் பிடிக்கும். குறிப்பா, டிரெடிஷனல் காஸ்ட்யூம்ஸை சொந்தமா நானே ரெடி பண்றேன். அதில் எனக்காக ஒரு காஸ்ட்யூம் டிஸைனர் இருக்காங்க. அவங்ககிட்டே, ‘இந்த டிரெஸ் வேணும்’னு சொன்னால் போதும். அவங்க எனக்கு என்ன விதமான டிஸைன், கலர் பொருத்தமா இருக்கும்னு புரிஞ்சிக்கிட்டு செஞ்சுக் கொடுத்துடுவாங்க. அந்த விதத்துல அவங்க எனக்கு செஞ்சுக் கொடுக்கற பாவாடை, தாவணி, பிளவுஸ், சாரீஸ் எல்லாமே ஸ்பெஷலா இருக்கும். அதனாலதான் சீரியல் பார்க்கறவங்க என்னோட காஸ்ட்யூம்ஸ் எல்லாமே சூப்பர்னு கமென்ட் பண்றாங்க. மத்தபடி வெளியே போகும்போது ஜீன்ஸ், ஃபிராக் யூஸ் பண்ணுவேன். அதுதான் எனக்கு கம்ஃபர்டபிளா இருக்கும்.’’கிளாமர்ல லிமிடேஷன் என்ன?‘‘கண்டிப்பா கிளாமர் பண்ணமாட்டேன். 'டிரெஸ் சென்ஸ்’கிறது என்னோட தனிப்பட்ட உரிமை. அதனால ஆரம்பத்துலயே, ‘இந்த டிரெஸ்தான் போடுவேன். இது போட மாட்டேன்’னு தெளிவா சொல்லிடுவேன். அதில் முக்கியமா முட்டித் தெரியற அளவுல டிரெஸ் போடமாட்டேன்னு சொல்லிடுவேன். அதுதான் என்னோட லிமிடேஷன்.’’சூப்பரா சமைப்பீங்களாமே?‘‘ஆமா! வெஜ், நான்_வெஜ் எல்லாமும் சூப்பரா சமைப்பேன். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ சீரியலோட முதல் ஷெட்யூல் ஷூட்டிங் பெங்களூருவுல நடந்தது. அந்த ஊர் ஃபுட் என்னோட கோ ஆர்ட்டிஸ்ட் யாருக்குமே செட்டாகல. அதனால நானே பாத்திரம், மிக்ஸி எல்லாம் கொண்டுபோய் நம்ம ஊர் இட்லி, சாம்பார், சிக்கன் கிரேவி, மட்டன் சுக்கா, பிரியாணின்னு ஏகப்பட்ட டிஷ் சமைச்சிக் கொடுத்தேன். அதனாலேயே எங்க செட்ல எல்லாருமே என்னோட கைப்பக்குவத்தை ர(ரு)சிச்சிப் பாராட்டுவாங்க.’’லைஃப் பார்ட்னர் எப்படி அமையணும்?‘‘இப்படித்தான் இருக்கணும்னு பெரிய எதிர்பார்ப்பு இல்ல. ஆனா, எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாத நல்ல பையனா இருக்கணும். ரக்கடா இல்லாம, அமைதியான பையனா இருக்கணும். எனக்காக நேரம் ஒதுக்கி, என்னை அன்பா, பாசமா, அக்கறையா பார்த்துக்கணும். அதேமாதிரி எங்க வீட்ல உள்ளவங்களையும் அன்பா பார்த்துக்கணும். இந்தக் குணங்கள் இருந்தாலே போதும்.’’அடுத்த இலக்கு என்ன?‘‘அடுத்ததா பாசிடிவ் கேரக்டர்ல லீடா பண்ணணும், வித்தியாசமான நெகடிவ் கேரக்டர்ல டெரர் வில்லியா மிரட்டணும்னு ஆசையிருக்கு. இதுவரைக்கும் யாரையும் சார்ந்திருக்காம, என்னோட சொந்த கால்ல நிற்கிறேன். நானே சுயமா சம்பாதிச்சி முதல்ல பைக் வாங்கினேன். இப்ப கார் வாங்கியிருக்கேன். ஃபியூச்சர்ல சொந்தமா வீடு ஒண்ணு வாங்கணும்னு ஆசையிருக்கு. அதுதான் என்னோட அதிகபட்ச கனவு. அது நிறைவேறும் வரைக்கும், அதுக்கான முயற்சியில உண்மையா, முழுமையா, கடுமையா உழைச்சிக்கிட்டே இருப்பேன்.’’ -பெ. கணேஷ் வாசகி வாய்ஸ் பரிசு ரூ.100/- .அழகிய தமிழும் ஆதவனும்!மெகா தொலைக்காட்சியில் தினந்தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘அமுத கானம்’ என்கிற அருமையான நிகழ்ச்சி. கருப்பு&வெள்ளை படங்களின் ஒவ்வொரு பாடலுடைய சிறப்பினையும் தொகுப்பாளர் ஆதவன், அழகிய தமிழில் எளிமையாக விளக்குகிறார். ஐந்தாயிரம் எபிசோடுகளை கடந்து இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. தினமும் காலையில் 8 மணிக்கு டி.வி.யின் முன்பாக ஆஜராகி, தவறாமல் அமுத கானத்தைப் பருகி மகிழ்வேன்.- நிர்மலா ராவ், சேலையூர். சிநேகிதிகளே... சின்னத்திரையில் நீங்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல், ரியாலிட்டி ஷோ என எதுவாக இருந்தாலும் சரி, அது பற்றிய விமர்சனங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதி அனுப்புங்கள். சிறந்த விமர்சனங்களுக்கு பரிசு உண்டு!