-முனைவர் சுடர்க்கொடி கண்ணன்‘‘எனக்கு எல்லாம் பயமயம். காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு, கூடு பயம் எனக்கு, குளம் பயம் எனக்கு, குளத்துக்குள் இருக்கும் நண்டு கண்டாலும் பயம் எனக்கு, பூச்செண்டு கண்டாலும் பயம் எனக்கு, செண்டுக்குள்ளார இருக்கும் வண்டு கண்டாலும் பயம் எனக்கு!’’ என்பார், ‘தெனாலி’ திரைப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் கமல்ஹாசன்..அதுமட்டுமா... ‘‘சீனோபோபியா, ஏரோபோபியா, ஷுபோபியா, ஹீமோபோபியா, ஒரிட்டோபோபியா, செப்ரோபோபியா, டாபோபோபியா, சைக்ரோபோபியா, மைக்ரோபோபியா, கிளாசோபோபியா’’ என உலகிலுள்ள அத்துணை போபியாக்கள் வரை நீண்ட நெடிய வசனம் பேசிவிட்டு, ‘‘வாழ பயம்... சாகவும் பயம்!’’ என்று இறுதியில் முடிப்பார்.இது சிரிப்பதற்காகச் சொல்லப்பட்ட டயலாக் மட்டுமல்ல... நம்மில் பலருக்கும் பலவிதமான போபியாக்கள் உண்டு! உயரத்தைக் கண்டால் பயம், தண்ணீரைக் கண்டால் பயம், பல்லியைக் கண்டால் பயம், கரப்பான் பூச்சியைக் கண்டால் பயம் என்று பல விதமான பயங்கள் உண்டு. ஏற்கெனவே உள்ள ஏகப்பட்ட போபியாக்கள் போதாதென்று, இந்த போபியாக்கள் வரிசையில் புதிதாக ‘நோமோபோபியா’ (Nomophobia) என்ற ஒரு போபியாவும் சேர்ந்துள்ளது!.‘போபியா’ என்றால் என்ன?மருத்துவமுறைப்படிச் சொன்னால், ‘போபியா’ (Phobia) என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை, பொருள், விலங்கு, பறவை, பூச்சி மற்றும் சில செயல்பாடுகள் காரணமாக மனதில் எழும் அச்சமாகும். இது ஒரு அசாதாரண பயம். இதுவே அதிகமாகி, கடைசியில் கோளாறாகிவிடுகிறது. இந்தப் பயம் உள்ளவர்கள் எந்தப் பொருளைப் பார்த்து அஞ்சுகிறார்களோ அல்லது எந்தச் செயலைச் செய்யப் பயப்படுகிறார்களோ, அவற்றை முடிந்தவரை தவிர்க்க முனைகின்றனர். மேலும், அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போதே கவலையடைகின்றனர். இந்த அச்சக்கோளாறுதான் ‘போபியா’ எனப்படும்..நோமோபோபியா!இன்றைய நியூநார்மல் உலகத்தில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி நம்மை ஆட்டிப்படைக்கின்றன. பொதுவாக மனிதர்கள் அனைவரும் இந்தப் புதிய தொழில்நுட்பங்களை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த கற்றுக்கொள்கிறோம். நாளொரு போனும் பொழுதொரு ‘App’ஸுமாக மாறிக்கொண்டே இருக்கிறது நம் வாழ்க்கை.மனிதர்கள் நல்ல சிட்டிசன்களாக இருக்கிறார்களோ இல்லையோ, நல்ல நெட்டிசன்களாக மாறியிருக்கிறார்கள். கர்ணனின் கவசகுண்டலம் போல் அலைபேசிகளை பிரியாமல் கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு, காலையில் எழுந்ததிலிருந்து, இரவு தூங்கும்வரை, சொல்லப்போனால்... நடுவில் விழிப்பு வந்தால்கூட, செல்போனை செக் பண்ணும் அளவிற்கு நிலைமை முற்றிவிடுகிறது.இப்படி செல்போனின் தொழில்நுட்ப வசதிகளுக்கு அடிமையாகிய சூழலில், செல்போன் கையில் இல்லை என்றால் இவர்களுக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது. இந்த அச்ச உணர்வின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த கோளாறுகளே ‘நோமோபோபியா’ என்று சொல்லப்படு கிறது.‘No Mobile Phobia’ என்பதன் சுருக்கம்தான் ‘Nomophobia’. நம் மொபைல் தொலைந்து போய் விட்டாலோ, அல்லது நம் மொபைலில் சார்ஜ் தீர்ந்து, இன்னும் சில மணி நேரங்களுக்கு மொபைலையோ அல்லது வேறெந்த கேட்ஜெட் சமாசாரங் களையோ தொட முடியாதென்றாலோ, இந்த போபியா ஆரம்பிக்கும். யாருடைய மொபைலையாவது கையிலெடுக்கத் தோன்றும். அந்த அளவிற்கு அலைபேசிக்கு அடிமையாகி விட்டவர்களை ‘பாவ்லோ’ஸ் டாக்ஸ்’ (Pavlov’s dogs) ஆகிவிட்டார்கள் என்கிறது மருத்துவ உலகம்.‘பாவ்லோஸ் டாக்ஸ் தியரி’ என்பது, ஒரு நாய்க்கு மணி அடிக்கும்போதெல்லாம் எலும்பை வைத்துப் பழக்கப்படுத்திய பிறகு, எலும்பே வைக்காவிட்டால் கூட, மணி அடித்தவுடன் எலும்பு அதன் நினைவில் வந்துவிடுமாம்! அதுபோலவே, யாருடைய போன் அடித்தாலும், அது நமக்கானதாகத் தோன்றி, சட்டென்று பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துப் பார்ப்பார்கள். எதையும் தவறவிட்டுவிடக் கூடாது என்கிற பதற்றத்தின் விளைவாக வரும் FOMOவின் (Fear Of Missing Out) ஒரு நிலைதான் இதுவும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அந்தளவிற்கு இன்றைய இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் போபியாதான் இந்த ‘நோமோபோபியா’..அறிகுறிகள் என்னென்ன?‘நோமோபோபியா’ அறிகுறி உள்ள வர்கள், உடலில் செல் இல்லாமல்கூட வாழ்ந்துவிடுவார்கள்... ஆனால், கைகளில் செல்போன் இல்லாமல் வாழமுடியாதவர்களாகி விடு கிறார்கள். படிக்காத மின்னஞ்சல்கள், உரைகள் அல்லது அழைப்புகள் உள்ளதா என மொபைலை அடிக்கடி செக் செய்வது, காலையில் எழுந்ததும் பல்கூட துலக்காமல் போனை பார்ப்பது, ஒரு நிமிடம்கூட போனை ஆஃப் செய்யாமல் இருப் பது, சாப்பிடும்போதும் பிறரிடம் உரையாடும்போதும் போனை உபயோகிப்பது, கண்ணுறங்கும் முன்புவரை போனை பிரியாதிருப்பது...அடிக்கடி பேட்டரியை சார்ஜ் செய்வது, மொபைல் சாதனத்தில் அதிக நேரத்தை செலவிடு வதால் திட்டமிட்ட நிகழ்வு கள் அல்லது செயல்பாடுகளைத் தவற விடுவது, உங்கள் போன் உங்களிடம் உள்ளதா என்று அடிக்கடி சரிபார்ப்பது, உங்கள் போனை கீழேவைக்க வேண்டியிருந்தால் அல்லது சிறிது நேரம் உங்களால் அதைப் பயன்படுத்த முடியாது என்று தெரிந்தால், நீங்கள் கவலை மற்றும் அமைதியின்மையை அனுபவிப்பது, உங்கள் போனை அடிக்கடி சரிபார்க்க இயலாத சூழ்நிலையில் உயிரே போனது போல உணர்வது ஆகியவை இந்த நோமோபோபியாவின் அறிகுறிகளாகும்..நோமோபோபியா ஏற்படுத்தும்பாதிப்புகள்!இப்படி நாளெல்லாம் கைகளில் வைத் திருக்கும் அலைபேசியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் நல்லது. பல நல்ல விஷயங் களைத் தெரிந்து கொள்வதற்கும் பேசுவதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல் செல்போன்களை அதிகப்படியாகப் பயன்படுத் துவது பலவிதமான உடல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. நோமோபோபியாவால் நமக்குத் தேவையற்ற பயம், பதட்டம், தலைவலி, எரிச்சல், சோர்வு போன்றவையும் ஏற்படுகின்றன. இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து, நம் உடல் நலம் பாதிக்கப்படுகின்றது.அதிக நேரம் மொபைல் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளி வரும் ரேடியேஷனால், உடலில் அதிக சூடு உண்டாகி, நம் மூளை, கண்கள், காது, இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. தசைகள், எலும்புகள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதோடு கண்களும் உலர்ந்துவிடுகின்றன. இது தவிர, நோமோபோபியா உள்ள வர்கள் அலைபேசியைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், இவர்களுக்கு மனிதர்களை முகத்தோடு முகம் பார்த்து இயல்பாக பேசும் திறனும், உண்மையான மனித தொடர்பியல் சார்ந்த திறன்களும் குறைகின்றன.இதனால் இவர்களுக்கு அதிக கோபமும் அதிக மன அழுத்தமும் உண்டாகி, அவர்களின் மனநிலையும் பாதிப்படைகின்றது. மனித உறவுகளும் பாதிக்கப்படுகின்றன. ஆக மொத்தம், உங்கள் கைகளில் ஆறாம் விரலாய்த் தோன்றியிருக்கும் இந்த செல்போன், உங்களின் ஆபத்தான உறுப்பாய் மாறிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியத்திலும் அவசியம்..நோமோபோபியா ஏற்படாமல் தடுக்கும் வழிகள்!‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்து வோருக்கும் பொருந்தும். செல்போன்களைப் பயன் படுத்தாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், செல்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவதை நம்மால் தாராளமாகத் தவிர்க்க முடியும். நோமோபோபியா உங்களுக்கு ஏற்படாமல் தடுக்க, செல்போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு நாள் ‘நோ போன் டே’வாக பழக்கப்படுத்திக்கொள்ளலாம். இரவில் தூங்கும்போது, செல்போனை ‘Flight mode’க்கு மாற்றிவிடலாம், அல்லது அணைத்து விடலாம். இதனால் உறங்கும்போதாவது செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பைத் தவிர்ப்பதோடு, நோமோபோபியாவால் ஏற்படுகிற தூக்கப் பிரச்னைகள் வராமலும் தடுக்கலாம்.அதிநவீன செல்போன்களின் பயன்பாடு களைக் குறைத்துக்கொண்டு, சாதாரண மாடல் போன்களைப் பயன்படுத்தலாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடலாம். யோகா மற்றும் உடற்பயிற்சிகள் செய்யலாம். இவை, நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவியாக இருக்கும். இது தவிர, செல்போனை சரியான முறையில் அளவோடு பயன்படுத்துவது குறித்த விழிப்பு உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தலாம்.நோமோபோபியா அறிகுறிகள் உங்களுக்குத் தென்பட்டாலோ அல்லது நடத்தை மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டாலோ மனநல மருத்துவரை அணுகலாம். உரிய ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம். ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பதற்கேற்ப, நமக்கு நாமே வரவழைத்துக்கொள்ளும் இதுபோன்ற போபியாக்களை நாம் மனது வைத்தால் எளிதில் தடுக்கலாம். அலைபேசியில் வரும் அனைத்தையும் ரசிப்பதை விடுத்து, இயற்கையை ரசிப்போம். ‘சிவாஜி’ படப் பாடல் வரிகளைப் போல, ‘கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைப்போம், கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை ரசிப்போம்!’